மேலும் அறிய

புதிய வீடு வாங்கப் போறீங்களா ? கட்டட வடிவமைப்பில் இந்த தவறுகள் இருந்தால் சிக்கல் நிச்சயம்

வெளிப்புற தோற்றத்தை அழகுபடுத்துகிறோம் , வித்தியாசமாக காட்டுகிறோம் என்ற நோக்கத்தில் செய்யப்படும் சில மாற்றங்கள் கட்டுமான வடிவமைப்பு பிழையாக அமைந்து விடுகின்றன

பொறியாளர்கள் வழிகாட்டுதல் அவசியம்

சமீப காலமாக சென்னை போன்ற நகரங்களில் முன்பு எப்போதும் இல்லாத வகையில் புதிய வடிவமைப்புகளில் கட்டடங்கள் கட்டப்படுகின்றன. சில ஆண்டுகள் முன்பு வரை ஒரு பகுதியில் ஏதாவது ஒரு கட்டடம் மட்டுமே வழக்கத்து மாறாக வடிவமைக்கப்பட்டு இருக்கும். ஆனால் தற்போது பெரும்பாலான அடுக்குமாடி குடியிருப்பு கட்டடங்கள் வித்தியாசமான வடிவமைப்புகளில் கட்டப்படுவதை பரவலாக பார்க்க முடிகிறது.

குறிப்பாக கட்டடங்கள் கட்டும் போது அதன் அடிப்படை கூறுகள் பாகங்களின் அளவுகளை கட்டட அமைப்பியல் வல்லுனர் வாயிலாக முடிவு செய்ய வேண்டும். அழகு, கலை வேலைப்பாடுகள் ஆகியவற்றுக்கு அப்பால், கட்டடத்தின் நிலையான பாகங்களால் ஏற்படும் சுமை என்ன பயன்பாட்டில் ஏற்படும் சுமை ஆகியவற்றின் அடிப்படையில் பாகங்களை முடிவு செய்வர். இந்த விஷயத்தில் கட்டட அமைப்பியல் பொறியாளர்கள் வழிகாட்டுதல் அவசியம். இதற்கு அடுத்த நிலையில் தான் கட்டட வடிவமைப்பாளர்களின் பணிகள் துவங்குகின்றன.

போதுமான விழிப்புணர்வு இல்லை

பெரும்பாலான மக்கள் கட்டடத்தின் பாகங்கள் எங்கு எப்படி அமைய வேண்டும், அறைகளின் அளவுகள் ஆகியவையே வரைபடங்களில் குறிப்பிடப்படும் என்று மக்கள் நினைக்கின்றனர். நிலத்தின் அமைவிடத்தை பற்றி கவலைப்படாமல் அளவுகளை மட்டும் கணக்கில் வைத்து வீட்டை வடிவமைக்கும் போது கட்டுமான ரீதியாக பல்வேறு பிழைகள் வரும்.

இதில் மேலோட்டமாக பார்க்கும் போது வரைபடம் கட்டடத்தின் தோற்றம் அழகாக இருப்பதாக தெரியலாம். ஆனால், கட்டுமான பணிகள் முடிந்து பயன்படுத்தும் நிலையில் தான் வடிவமைப்பு ரீதியாக ஏற்பட்ட பிழைகள் தெரிய வரும். கட்டுமான வடிவமைப்பு பிழைகள் என்ன என்பதை அறிந்து கொள்வதிலேயே மக்களிடம் போதுமான விழிப்புணர்வு இல்லை.

வடிவமைப்பு விபரம் - கட்டுமான நிறுவனத்திடம் கேட்க வேண்டும்

கட்டட வடிவமைப்பு பிழையுள்ள வீடுகளை மக்கள் விபரம் தெரியாமல் வாங்கி விடுவதை பரவலாக பார்க்க முடிகிறது. இதில் கட்டடத்தின் வெளிப்புற தோற்றத்தில் காணப்படும் பிழைகள், உட்புறத்தில் காணப்படும் பிழைகள் என இரண்டு வகை உள்ளன. வெளிப்புற தோற்றத்தில் அழகுபடுத்துகிறோம், வித்தியாசமாக காட்டுகிறோம் என்ற நோக்கத்தில் செய்யப்படும் மாற்றங்கள் சில சமயங்களில் வடிவமைப்பு பிழையாக அமைந்து விடுகின்றன.

எனவே நீங்கள் வீடு வாங்கும் அடுக்குமாடி கட்டடத்தின் வெளிப்புற தோற்ற வடிவமைப்பு குறித்த விபரங்களை கட்டுமான நிறுவனத்திடம் கேட்க வேண்டும். அதே போன்று, வீட்டின் உட்புறத்தில் வடிவமைப்பு கவன குறைவு காரணமாக சில பிழைகள் ஏற்படுகின்றன. குறிப்பாக பிரதான வாயில் பகுதியில் நின்று பார்த்தால் வீட்டின் எந்த அறையின் உட்புறமும் தெரிய கூடாது என்பதை கவனிக்க வேண்டும்.

அதே போன்று படுக்கை அறையின் வாயில் அல்லது அதற்கு வெளியில் இருந்து பார்க்கும் போது அலமாரிகள், குளியலறையின் உட்புறம் தெரிய கூடாது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இது மட்டுமல்லாது பெரிய அளவிலான பொருட்களை வெளியில் இருந்து கொண்டு வரும் போது கடைசி பகுதி வரை செல்ல சிக்கல் இல்லாத வழி இருக்க வேண்டும் என்கின்றனர் கட்டுமான துறை வல்லுநர்கள்.

தலைப்பு செய்திகள்

சென்னை பேருந்து நடத்துனர் குத்தகை: திமுக ஒப்பந்தத்தை தவெக தொடர்வது ஏன்? - அன்புமணி ராமதாஸ் கேள்வி
சென்னை பேருந்து நடத்துனர் குத்தகை: திமுக ஒப்பந்தத்தை தவெக தொடர்வது ஏன்? - அன்புமணி ராமதாஸ் கேள்வி
" கஞ்சா புழக்கம்...பாதுகாப்பு எங்கே ? " அமைச்சர்களை முற்றுகையிட்ட மக்கள்
Tondiarpet IOC Bus Terminus: 40 ஆண்டு காத்திருப்புக்கு பிறகு விடிவுகாலம்! வடசென்னையில் நடக்கப்போகும் அந்த பிரம்மாண்ட மாற்றம்!
40 ஆண்டு காத்திருப்புக்கு பிறகு விடிவுகாலம்! வடசென்னையில் நடக்கப்போகும் பிரம்மாண்ட மாற்றம்!
சென்னை விமான நிலையத்தில் ஆசனவாயில் மறைத்த ரூ.3 கோடி தங்கம் சிக்கியது எப்படி?
சென்னை விமான நிலையத்தில் ஆசனவாயில் மறைத்த ரூ.3 கோடி தங்கம் சிக்கியது எப்படி?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
TVK vs DMK:
TVK vs DMK: "உதயநிதிக்கு கண்ணியத்தை கற்றுக்கொடுங்கள்.." ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் ரமேஷ் அட்வைஸ்
Udhayanidhi: உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
மாஸ் காட்டும் மஹிந்திரா BE 6 Sporteq SUV; வெறும் ரூ.11.45 லட்சம் மட்டுமே- விலை குறைவு ரகசியம் என்ன?
மாஸ் காட்டும் மஹிந்திரா BE 6 Sporteq SUV; வெறும் ரூ.11.45 லட்சம் மட்டுமே- விலை குறைவு ரகசியம் என்ன?
சட்டசபையில் உதயநிதி- ஆதவ் நேருக்கு நேர் கடும் வாக்குவாதம்.! மோதிக்கொண்ட திமுக- தவெக.! நடந்தது என்ன.?
சட்டசபையில் உதயநிதி- ஆதவ் நேருக்கு நேர் கடும் வாக்குவாதம்.! மோதிக்கொண்ட திமுக- தவெக.! நடந்தது என்ன.?
Hyundai SUV: அப்க்ரேடட் க்ரேட்டா, பாலிசேட், EV, ஹைப்ரிட் - புதுசா 6 எஸ்யுவிக்களை இறக்கும் ஹுண்டாய் - முழு விவரம்
அப்க்ரேடட் க்ரேட்டா, பாலிசேட், EV, ஹைப்ரிட் - புதுசா 6 எஸ்யுவிக்களை இறக்கும் ஹுண்டாய் - முழு விவரம்
Online Property Registration : பத்திர பதிவிற்கு இன்று முதல் நேரில் வர வேண்டாம்.! புது ரூல்ஸ்- என்னென்ன ஆவணங்கள் தேவை.? லிஸ்ட் இதோ..
பத்திர பதிவிற்கு இன்று முதல் நேரில் வர வேண்டாம்.! புது ரூல்ஸ்- என்னென்ன ஆவணங்கள் தேவை.? லிஸ்ட் இதோ..
சூப்பர் ப்ளான்.. காலியாக இருக்கும் கோயில் நிலங்கள்.. வருவாயை அதிகரிக்க தவெக அரசு போட்ட ஸ்கெட்ச்!
சூப்பர் ப்ளான்.. காலியாக இருக்கும் கோயில் நிலங்கள்.. வருவாயை அதிகரிக்க தவெக அரசு போட்ட ஸ்கெட்ச்!
Embed widget