மேலும் அறிய

Chennai: தொழில்நுட்ப கோளாறால் லண்டன் செல்லவிருந்த விமானம் ரத்து; அசம்பாவிதம் தவிர்ப்பு

சென்னையில் இருந்து லண்டன் செல்ல வேண்டிய பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில், திடீரென்று ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக, விமானம் நேற்று ரத்து செய்யப்பட்டுள்ளது.

சென்னை (Chennai News): லண்டனிலிருந்து சென்னை வரும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் பயணிகள் விமானம் அதிகாலை 3:30 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்துவிட்டு, மீண்டும் அந்த விமானம் சென்னையில் இருந்து அதிகாலை  5:30 மணிக்கு லண்டன் புறப்பட்டு செல்லும். இந்த விமானம் நேற்று, வரும்போது ஒரு மணி நேரம் தாமதமாக 4:30 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. இந்த நிலையில் இந்த பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில், சென்னையில் இருந்து இன்று லண்டன் செல்வதற்கு 276 பயணிகள்  இருந்தனர். அவர்கள் அனைவரும் அதிகாலை 2:30  மணிக்கு முன்னதாகவே, சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்து, சுங்கச் சோதனை, பாதுகாப்பு சோதனை, குடியுரிமை சோதனை அனைத்தையும் முடித்துவிட்டு விமானத்தில் ஏற தயாராக இருந்தனர்.
 
ஆனால் லண்டனில் இருந்து சென்னை வந்த அந்த பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில், தொழில்நுட்ப கோளாறு இருக்கிறது, என்று அந்த விமானத்தை இயக்கி வந்த விமானி, குறிப்பு எழுதி விட்டு, அதை சரி செய்த பின்பு விமானத்தை இயக்கவும் என்று கூறிவிட்டு, ஓய்வுக்கு சென்று விட்டார்.  இதை அடுத்து லண்டன் செல்ல வேண்டிய பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம், நேற்று தாமதமாக காலை 10 மணிக்கு புறப்படும் என்று பயணிகளுக்கு அறிவிக்கப்பட்டது. பயணிகள் யாரும் விமானத்தில் ஏற்றப்படாமல், ஓய்வறைகளில் தங்க வைக்கப்பட்டு இருந்தனர்.
 
விமான பொறியாளர்கள் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு சரி செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் தொழில்நுட்பக் கோளாறு உடனடியாக சரி செய்ய முடியவில்லை. இதையடுத்து சென்னையில் இருந்து லண்டன் செல்ல இருந்த பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம், நேற்று ரத்து என்று அறிவிக்கப்பட்டது. அதோடு பயணிகள் அனைவரும் சொகுசு பஸ்களில் ஏற்றப்பட்டு, சென்னை நகரில் உள்ள பல்வேறு ஹோட்டல்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த விமானம் இன்று காலை புறப்பட்டு செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விமானத்தில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்பக் கோளாறை விமானி, தகுந்த நேரத்தில் கண்டுபிடித்து எடுத்த நடவடிக்கையால், அசம்பாவித சம்பவம் தவிர்க்கப்பட்டு, 276 பயணிகள் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர்.
 

ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

 

தலைப்பு செய்திகள்

எழும்பூர் ரயில்: ஆகஸ்ட் 22 முதல் புறநகர் சேவை மாற்றம்! பயணிகள் கவனத்திற்கு
எழும்பூர் ரயில்: ஆகஸ்ட் 22 முதல் புறநகர் சேவை மாற்றம்! பயணிகள் கவனத்திற்கு
Tamil Nadu Weather Update Today: மக்களே உஷார்! சென்னை, காஞ்சி, செங்கல்பட்டில் வானிலை மாற்றம்? லேட்டஸ்ட் அலர்ட்!
மக்களே உஷார்! சென்னை, காஞ்சி, செங்கல்பட்டில் வானிலை மாற்றம்? லேட்டஸ்ட் அலர்ட்!
ரஜினியின் ரூ.1 கோடி வாக்குறுதி என்னாச்சு ? மேடையில் ஓபனாக பதிலளித்த லதா ரஜினிகாந்த்
ரஜினியின் ரூ.1 கோடி வாக்குறுதி என்னாச்சு ? மேடையில் ஓபனாக பதிலளித்த லதா ரஜினிகாந்த்
Chennai Power Cut: சென்னைல ஆகஸ்ட் 8-ம் தேதி சனிக்கிழமை எங்கெங்க மின்சாரத் தடை ஏற்படப் போகுது தெரியுமா.? லிஸ்ட் இதோ
சென்னைல ஆகஸ்ட் 8-ம் தேதி சனிக்கிழமை எங்கெங்க மின்சாரத் தடை ஏற்படப் போகுது தெரியுமா.? லிஸ்ட் இதோ

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
E20 பெட்ரோலால் கார்களுக்கு அதிக ஆபத்தா; பைக்குக்கா? துரு, மைலேஜ் பாதிப்பு உறுதி
E20 பெட்ரோலால் கார்களுக்கு அதிக ஆபத்தா; பைக்குக்கா? துரு, மைலேஜ் பாதிப்பு உறுதி
US Tariff on India: இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
டேங்க் ஃபுல் செய்தால் 1200 கி.மீ; 30 மாதங்களில் 4 லட்சம் கார்கள் விற்பனையாகி சாதனை- எந்த கார் தெரியுமா?
டேங்க் ஃபுல் செய்தால் 1200 கி.மீ; 30 மாதங்களில் 4 லட்சம் கார்கள் விற்பனையாகி சாதனை- எந்த கார் தெரியுமா?
Lottery Martin's donation ; ”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
China Firm Unhappy Leave: அட, இது லிஸ்ட்லயே இல்லையே.! மன வருத்தத்துல இருக்குற பணியாளர்களுக்கு விடுப்பு கொடுக்கும் கம்பெனி; எங்கே.?
அட, இது லிஸ்ட்லயே இல்லையே.! மன வருத்தத்துல இருக்குற பணியாளர்களுக்கு விடுப்பு கொடுக்கும் கம்பெனி; எங்கே.?
Embed widget