மேலும் அறிய
Advertisement
கட்டி முடிக்கப்பட்டு 5 ஆண்டுகளான அரசு குடியிருப்பு இடிந்து விழுந்து 8 வயது இருளர் இன சிறுமி உயிரிழப்பு
''2016 ஆம் ஆண்டு மத்திய அரசின் திட்டத்தின் கீழ் இவர்களுக்காக வீடு கட்டிக் கொடுக்கப்பட்டது. தற்போது ஒவ்வொரு வீட்டிலும் 2 குடும்பங்களுக்கு மேல் இடநெருக்கடியுடன் வசிக்கும் நிலை உள்ளது''
காஞ்சிபுரம் மாவட்டம், சென்னை அடுத்துள்ள குன்றத்தூர் ஒன்றியத்தில் உள்ள ஒரத்தூர் கிராமத்தில் இருளர் குடியிருப்பில் வசித்து வருபவர்கள் மாரி, ஜெயா தம்பதியினர். இவர்களுக்கு லதா (8) என்ற 3ஆம் வகுப்பு படிக்கும் பெண் குழந்தை இருந்தது. இந்நிலையில், இன்று திடீரென வீட்டின் நடுவில் உள்ள சுவர் இடிந்து விழுந்துள்ளது.
இதில், வீட்டின் உள்ளே இருந்த லதா இடிபாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் ஒரத்தூர் கிராமம் இருளர் குடியிருப்பு பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2016ஆம் ஆண்டு மத்திய அரசின் திட்டத்தின் கீழ் இவர்களுக்காக வீடு கட்டிக் கொடுக்கப்பட்டது. தற்போது ஒவ்வொரு வீட்டிலும் 2 குடும்பங்களுக்கு மேல் இடநெருக்கடியுடன் வசிக்கும் நிலை உள்ளது.
மேலும், கட்டிக் கொடுக்கப்பட்ட தொகுப்பு வீடுகளில் மேற்கூரையில் சிமெண்ட் பூச்சுகள் பெயர்ந்தும், சுவற்றில் பல இடங்களில் விரிசலும் ஏற்பட்டுள்ளது. மழை காலங்களில் வீடு முழுவதும் தண்ணீர் தேங்கி நிற்பதால் மிகுந்த சிரமத்துடன் இவர்கள் வாழ்ந்து வருகிறார்கள். இந்நிலையில், வீட்டின் குறுக்குச் சுவர் இடிந்து விழுந்ததில் 8 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்திருப்பது மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சிறுமி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள சூனாம்பேடு பகுதியில் உள்ளவிளாம்பட்டு கிராமத்தை சேர்ந்த பேபி (37) நேற்றிரவு வீட்டிலிருந்து கடைக்குச் சென்றுவிட்டு திரும்பும்போது மின் கம்பி அறுந்து விழுந்ததில், மின்சாரம் தாக்கி சம்பவ இடத்தில் பலி சூனாம்பேடு போலீசார் விசாரணை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நேற்று முன்தினம் மின்னல் தாக்கி வயல்வெளியில் வேலை செய்துகொண்டிருந்த இரண்டு பெண்கள் உயிரிழந்திருந்தனர். காஞ்சிபுரம் செங்கல்பட்டு மாவட்டத்தில் மழை காரணமாக இரண்டு நாட்களில் 4 பேர் பலியாகி இருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
அரசியல்
அரசியல்
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion