மேலும் அறிய

Air Ticket : மாற்றி அமைக்கப்பட்ட யூசர் டெவலப்மெண்ட் கட்டணம்.. பயணிகள் விமான டிக்கெட் விலையும் உயர்கிறது..

உள்நாட்டு விமான பயணிகள் ஒவ்வொருவருக்கும், ரூ.295, சர்வதேச விமானத்தில் பயணிக்கும் ஒவ்வொரு பயணிக்கும் ரூ. 450 வசூலிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

சென்னை விமான நிலையத்தில், உள்நாடு சர்வதேச விமானங்களில் பயணிக்கும் பயணிகளுக்கு,(யூசர் டெவலப்மெண்ட் ஃபீஸ்) எனப்படும் விமான பயணிகளுக்கு, விமான நிலைய மேம்பாட்டு கட்டணத்தை, இந்திய விமான நிலைய பொருளாதார ஒழுங்குமுறை ஆணையம், உயர்த்தி உள்ளது.
 
" விமான நிலைய மேம்பாட்டு கட்டணம் "
 
இந்தியாவில் உள்ள சர்வதேச விமான நிலையங்களில் பயணிக்கும் பயணிகளுக்கு, அந்தந்த விமான நிலையங்களில் உள்ள அடிப்படை வசதிகளுக்கு தகுந்தபடி, ஒவ்வொரு விமான பயணிக்கும், உள்நாட்டு பயணிக்கும், அதே போல் சர்வதேச விமானங்களில் பயணிக்கும் பயணிக்கும், விமான நிலைய மேம்பாட்டு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இது ஒவ்வொரு விமான நிலையங்களுக்கும் மாறுபட்ட கட்டணமாக இருக்கும். இந்தியாவில் சென்னை, ஹைதராபாத், பெங்களூர், மும்பை, டெல்லி, கொல்கத்தா உள்ளிட்ட சர்வதேச விமான நிலையங்களில், இந்தக் கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன
 
'கட்டண விலை மாற்றி அமைப்பு'
 
சென்னை விமான நிலையத்தில் ஏற்கனவே, உள்நாட்டு விமான பயணிகள் ஒவ்வொருவருக்கும், ரூ. 205ம், சர்வதேச விமான பயணி ஒவ்வொருவருக்கும், ரூ. 300 ம், விமான நிலைய மேம்பாட்டு கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் தற்போது இந்த கட்டணத்தை, மத்திய விமான நிலைய பொருளாதார ஒழுங்குமுறை ஆணையம், மாற்றி அமைத்துள்ளது. அதன்படி சென்னை விமான நிலையத்தில் பயணிக்கும், உள்நாட்டு விமான பயணிகள் ஒவ்வொருவருக்கும், ரூ.295, சர்வதேச விமானத்தில் பயணிக்கும் ஒவ்வொரு பயணிக்கும் ரூ. 450 வசூலிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
 
"90 ரூபாய் உயர்வு"
 
இதன்படி உள்நாட்டு விமான பயணிக்கு ரூ. 90, சர்வதேச விமான பயணிக்கு ரூ. 150 உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விமான நிலைய மேம்பாட்டு கட்டணம் பயணிகளிடம் தனியாக வசூலிக்கப்பட மாட்டாது. அவர்கள் பயணிக்கும் விமான டிக்கெட் கட்டணத்துடன் இணைத்து ஒன்றாக வசூலிக்கப்படும். அதன்பின்பு அந்தந்த விமான நிறுவனங்கள், பயணிகளிடம் வசூலித்த விமான நிலைய மேம்பாட்டு கட்டணத்தை, இந்திய விமான நிலைய ஆணையத்திடம் ஒப்படைக்கும். மேலும் இந்தக் கட்டணம், பயணி புறப்படும் விமான நிலையத்தில் மட்டும் வசூலிக்கப்படும். அந்தப் பயணி சென்று இறங்கும் விமான நிலையத்தில், மேம்பாட்டு கட்டணம் தனியாக வசூலிக்கப்பட மாட்டாது. இந்த கட்டண உயர்வு சென்னை விமான நிலையத்தில் மட்டும் இன்றி, நாடு முழுவதும் உள்ள அனைத்து சர்வதேச விமான நிலையங்களிலும் அமுல்படுத்தப்படுகிறது. ஆனால் அந்தந்த விமான நிலையங்களில், பயணிகளுக்கு இருக்கும் உள்கட்டமைப்பு வசதிகளுக்கு தகுந்தார்போல், விமான நிலைய மேம்பாட்டு கட்டணம் மாறுபட்டு இருக்கும்.
 
" மறைமுகமாக வசூலிக்கப்படும் கட்டணம் "
 
இந்த கட்டணம் விமான டிக்கெட் கட்டணத்துடன் சேர்த்து வசூலிக்கப்படுவதால், பயணிகள் பலருக்கு, இந்தக் கட்டணம் உயர்வு பற்றி தெரியாது. எனவே இது மறைமுக கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இதைப்போல் விமான பயணிகளிடம், விமான நிலைய மேம்பாட்டு கட்டணம் வசூலிக்கப்படும், சர்வதேச விமான நிலையங்களில், பயணிகளுக்கு அடிப்படை வசதிகள், உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு இருக்க வேண்டும்   என்று, இந்திய விமான நிலைய ஆணைய விதிமுறைகளில் உள்ளது.
 

தலைப்பு செய்திகள்

Kilambakkam Railway Station Update: கிளாம்பாக்கம் ரயில் நிலையம் திறப்பு எப்போது? ரயில்வே நிர்வாகம் கொடுத்த அதிகாரப்பூர்வ சர்ப்ரைஸ்!
Kilambakkam Railway Station Update: கிளாம்பாக்கம் ரயில் நிலையம் திறப்பு எப்போது? ரயில்வே நிர்வாகம் கொடுத்த அதிகாரப்பூர்வ சர்ப்ரைஸ்!
" இளம் பெண்ணிடம் எல்லை மீறிய மெடிக்கல் ரெப் " பணம் கேட்டு மிரட்டிய பெண் வழக்கறிஞர்
வேலை தேடுபவர்களுக்கு செம்ம நியூஸ்! சென்னையில் 10000 பேருக்கு அடித்தது ஜாக்பாட்! மிஸ் பண்ணாதீங்க!
வேலை தேடுபவர்களுக்கு செம்ம நியூஸ்! சென்னையில் 10000 பேருக்கு அடித்தது ஜாக்பாட்! மிஸ் பண்ணாதீங்க!
காஞ்சி, செங்கையில் இன்று திடீர் மழை? வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அதிரடி எச்சரிக்கை!
காஞ்சி, செங்கையில் இன்று திடீர் மழை? வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அதிரடி எச்சரிக்கை!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai Slams Nainar: “மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
“மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
Trump on Hormuz: ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Toyota Hyryder CNG on EMI: மைலேஜ் கிங் டொயோட்டா Urban Cruiser ஹைரைடர் CNG; ரூ.1 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
மைலேஜ் கிங் டொயோட்டா Urban Cruiser ஹைரைடர் CNG; ரூ.1 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
New Maruti Baleno Facelift: சந்திரமுகி போல் மொத்தமாக மாறி வரும் மாருதி பலேனோ.! புதிய ஃபேஸ்லிஃப்ட் அவதாரத்தின் லாஞ்ச் எப்போ.?
சந்திரமுகி போல் மொத்தமாக மாறி வரும் மாருதி பலேனோ.! புதிய ஃபேஸ்லிஃப்ட் அவதாரத்தின் லாஞ்ச் எப்போ.?
TASMAC Liquor Ban Revoke : அப்பாடா.. குடிமகன்கள் நிம்மதி.! டாஸ்மாக்கில் மீண்டும் 11 சரக்குகளுக்கு அனுமதி- வெளியான புதிய உத்தரவு
அப்பாடா.. குடிமகன்கள் நிம்மதி.! டாஸ்மாக்கில் மீண்டும் 11 சரக்குகளுக்கு அனுமதி- வெளியான புதிய உத்தரவு இதோ..
Embed widget