AIAASC.. WASC.. இந்தியாவில் இயங்கும் சர்வதேச கல்வி நிலையங்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்கும் கூட்டுமுயற்சி
சென்னை பெருங்குடியில் உள்ள அமெரிக்கன் வேர்ல்டு பள்ளியில் இரு அமைப்புகளின் ஆலோசனை நிகழ்ச்சியில் நடைபெற்றது.
’A.I.A.A.S.C.’ (American International Accreditation Association of Schools and Colleges) என்றழைக்கப்படும் அமெரிக்க சர்வதேச பள்ளி, கல்லூரிகள் அங்கீகார சங்கம், ’WASC’ (Western Association of Schools and Colleges) எனப்படும் மேற்கத்திய பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் சங்கம் ஆகியவை இந்தியாவில் இயங்கும் சர்வதேச கல்வி நிலையங்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்கும் நோக்கில் கூட்டு முயற்சியை தொடங்கியுள்ளன.
சென்னை பெருங்குடியில் உள்ள அமெரிக்கன் வேர்ல்டு பள்ளியில் இரு அமைப்புகளின் ஆலோசனை நிகழ்ச்சியில் நடைபெற்றது. இதில் AIAASC யின் செயல் இயக்குனர் கிறிஸ்டோபர் சான், இணை செயல் இயக்குனர் மோகன லட்சுமி, அமைய்ப்பின் ஆலோசகர்கள் சரண்யா ஜெயக்குமார், ஆற்காடு இளவரசர் நவாப்சாதா முஹம்மது ஆசிப் அலி, இந்த அமைப்பின் இந்திய தலைவர் பென்சாகிர் பைசல் ஆகியோர் கலந்து கொண்டு ஆலோசனை மேற்கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த AISSAC இணை செயல் இயக்குனர் மோகன லட்சுமி, ” இந்தியாவில் பல கல்வி நிலையங்கள் சர்வதேச பள்ளி என்னும் பெயரில் அங்கீகாரம் பெறாமல் இயங்குகின்றன. இதனால் அங்கு பயிலும் மாணவர்களுக்கு அயல் நாட்டு பல்கலைக்கழகங்களில் இடம் கிடைப்பதில் சிக்கல் ஏற்படுவதாக நாங்கள் அறிகிறோம். இதை முறைப்படுத்தி அங்கீகாரம் வழங்கவே AISSAC மற்றும் WASC அமைப்புகள் இணைந்துள்ளன.” என்று உறுதியுடன் தெரிவித்தார்.
சர்வதேச கல்வி நிறுவனங்கள் அங்கீகாரம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய வாரிய ஆலோசகர் சரண்யா ஜெயக்குமார், ”அமெரிக்காவில் கல்வி நிலையங்களுக்கு தரச் சான்று வழங்கும் முக்கிய அமைப்புகளில் ஒன்று WASC - Western Association of Schools and Colleges. இவ்விரு அமைப்புகளும் இணைந்து இந்தியாவில் சர்வதேச கல்வி நிலையங்களில் உள்ள வசதிகள் குறித்து ஆய்வு செய்து அங்கீகாரம் வழங்குவதோடு, 6 மாதங்கள் முதல் 3 ஆண்டுகள் வரை தணிக்கையிலும் ஈடுபட்டு அங்கீகாரம் வழங்குகிறது. இதனால் மாணவர்களுக்கு உலகளாவிய வாய்ப்புகள் கிடைக்கும்.” என்று தெரிவித்தார்.
AISSAC இன் செயல் இயக்குனர் கிறிஸ்டோபர் சான் கூறுகையில், “ மாணவர்களுக்கு எதிர்காலத்தை உருவாக்கும் வாய்ப்புகளை மேம்படுத்த இந்த அமைப்புகள் இணைந்துள்ளன. மாணவர்கள் மன அழுத்தம் இன்றி தங்கள் கனவுகளை அடைய மேம்படுத்தப்பட்ட கல்வியைப் பெற உறுதி அளிக்கும் நோக்கத்தில் அங்கீகாரம் வழங்கப்படும்.” என்று குறிப்பிட்டார்.
அமெரிக்க சர்வதேச பள்ளி, கல்லூரிகள் அங்கீகார சங்கம் ((American International Accreditation Association of Schools and Colleges) ), WASC (Western Association of Schools and Colleges) எனப்படும் மேற்கத்திய பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் சங்கத்துடன் இணைந்து இந்தியா மற்றும் உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள சர்வதேச பள்ளிகளுக்கு கூட்டு அங்கீகாரத்தை வழங்குவதற்கான முன் முயற்சியை தொடங்கி உள்ளன. நாடு முழுவதும் உள்ள பள்ளிகளுக்கான கூட்டு அங்கீகார செயல்முறை மாணவர்களுக்கு ஒரு பெரிய ஊக்கமாக இருக்கும் என்பதாலும், போட்டி நிறைந்த உலகளாவிய சூழ்நிலையில் அவர்களுக்கு தன்னம்பிக்கையை வழங்கவும் இந்த முயற்சி தொடங்கப்பட்டுள்ளது.
AIAASC மற்றும் WASC ஆகிய அமைப்புகள் புகழ்பெற்ற அங்கீகார அமைப்புகள் என்பதோடு அவை சர்வதேச பள்ளிகளில் வழங்கப்படும் கல்வியின் தரத்தை மதிப்பிடுவதற்கான அலகுகளுடன் கவனமாக கட்டமைக்கப்பட்டவை. இதனால் கல்வியின் தரம் எதற்காகவும் சமரசம் செய்துகொள்ளப்படாது என்றும் நிர்வாகிகள் குறிப்பிட்டனர்.