அடிகளார் சமாதியில் சீமான்..! பக்தி பரவசத்துடன் வழிபாடு..! மேல்மருவத்தூருக்கு படையெடுக்கும் அரசியல் தலைவர்கள்..!
நாம் தமிழர் கட்சி சீமான் நேரடியாக சென்று, பங்காரு அடிகளாரின் குடும்பத்தினரை சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார்.
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவில்
தமிழ்நாட்டில் உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற கோவில்களில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலும் ஒன்று. இந்த கோவிலில் தலைமை ஆன்மீகவாதியாக இருந்தவர் பங்காரு அடிகளார். பக்தர்களும் இவரை பின்பற்றுபவர்களும் அன்புடன் ’அம்மா’ என்றே அழைத்து வந்தனர். இந்த கோவிலுக்கு வருபவர்கள் கட்டாயம் இவரிடம் ஆசி பெற்றுச் செல்வார்கள். ஆதிபராசக்தி கோவிலுக்கு தமிழ்நாடு மட்டும் இல்லாது அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடக மற்றும் ஆந்திராவில் இருந்தும் பகதர்கள் பரவலாக வருவார்கள். இந்த கோவிலுக்கு பொதுவாகவே பெண் பக்தர்கள் அதிகம். இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்பட்டதில், இங்கு வந்து வழிபட்டால் இன்னல்கள் நீங்கி, நன்மைகள் நடக்கும் என்பது பகதர்களின் நம்பிக்கையாக உள்ளது.
அதேபோல், பெண்கள் கோவிலின் கருவறைக்குள் சென்று வழிபடலாம். மேலும், ஐய்யப்பன் கோவிலுக்கு ஆண்கள் இருமுடி கட்டிக்கொண்டு செல்வதைப் போல், மேல் மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலுக்கு பெண்கள் இருமுடி கட்டி தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றி வந்ததனர். இதற்கெல்லாம் வழிவகுத்தவர் மறைந்த பங்காரு அடிகளார் ஆவார்.
பங்காரு அடிகளார்
ஆதிபராசக்தி சித்தர் பீட நிறுவனர் பங்காரு அடிகளார் உடல் நல குறைவினால் உயிரழந்தார். செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் அருகே முன்னாள் ஆசிரியர் பங்காரு அடிகளார் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தை கடந்த 1966ஆம் ஆண்டு துவக்கினார். மெல்ல மெல்ல இந்த ஆலயம் பல்வேறு நாடுகளை சேர்ந்த பக்தர்ளை ஒருங்கிணைந்து மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மன்றம் என துவக்கபட்டது. தைப்பூசம் நாட்களில் 48 நாட்கள் சிறப்பு பூஜை மேற்கொண்டு அதனைத் தொடர்ந்து பல கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை பங்காரு அடிகளார் பக்தர்களுக்கு அளிப்பது வழக்கம்.கோவிலுக்குள் பெண்கள் செல்லக்கூடாது என்ற நிலை இருந்து வந்த நிலையில் பெண்களை கருவறைக்கு நேரடியாக சென்று அபிஷேகம் ஆன்மீகப் புரட்சியை ஏற்படுத்தியவர். மாதவிடாய் நாட்களில் கூட பெண்கள் கருவறைக்கு செல்லலாம் என வழிபாட்டுத் தலங்களில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியவர் பங்காரு அடிகளார். தமிழ்நாடு மட்டுமல்லாது, 12 மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலும் சித்தர் பீடத்திற்கு பக்தர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தான் கடந்த அக்டோபர் 19ஆம் தேதி உடல் நலத் குறைவால் பங்காரு அடிகளார் உலகை விட்டு மறைந்தார்.
படையெடுக்கும் அரசியல் தலைவர்கள்
பங்காரு அடிகளார் மறைவை தொடர்ந்து அஞ்சலி செலுத்துவதற்காக, அஞ்சலிக்காக உடல் வைத்திருந்த பொழுது, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். தற்பொழுது அடிகளாரின் சமாதியில் அஞ்சலி செலுத்துவதற்கும் அரசியல் கட்சியினர் படை எடுக்க துவங்கியுள்ளனர். அந்த வகையில் நேற்று , தமிழ்நாடு பாரதிய ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய அமைச்சர் எல் .முருகன், விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல் திருமாவளவன் உள்ளிட்டோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
நாம் தமிழர் கட்சி சீமான்
அதேபோன்று இன்று நாம் தமிழர் கட்சி சீமான் நேரடியாக சென்று, பங்காரு அடிகளாரின் குடும்பத்தினரை சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார். இதனை அடுத்து மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடம் சென்ற அவர், அடிகளாரின் சமாதியில் மண்டியிட்டு வணங்கினார். மேலும் அடிகளார் சமாதிக்கு பூஜை செய்து வழிபட்டார்.