Weather Forecast: காஞ்சிபுரம் & செங்கல்பட்டு: கனமழை எச்சரிக்கை! ரெட் அலர்ட் எப்போது? IMD வானிலை அறிக்கை வெளியீடு!
Kanchipuram Weather Forecast: "தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைய தொடங்கியுள்ள நிலையில், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்றைய வானிலை நிலவரம் குறித்து தெரிந்து கொள்வோம்"

நாளை மறுநாள் செங்கல்பட்டு மாவட்டத்திற்கு ரெட் அலெர்ட் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.
வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு என்ன ? Tamil-nadu Weather Forecast Today
வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, தென்மேற்கு வங்காள விரிகுடா மற்றும் தென்கிழக்கு இலங்கை மற்றும் பூமத்திய ரேகை இந்தியப் பெருங்கடலை ஒட்டிய பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு நிலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தீவிரமடைந்து, தென்மேற்கு வங்காள விரிகுடா மற்றும் அதை ஒட்டிய இலங்கை கடற்கரையில் அட்சரேகை 5.9°N மற்றும் தீர்க்கரேகை 82.6°E அருகே மையம் கொண்டது.
இது ஹம்பாந்தோட்டை (இலங்கை) க்கு கிழக்கே சுமார் 170 கி.மீ. மற்றும் மட்டக்களப்பிலிருந்து (இலங்கை) 210 கி.மீ. தென்மேற்கு வங்காள விரிகுடா மற்றும் அதை ஒட்டிய இலங்கை வழியாக கிட்டத்தட்ட வடக்கு-வடமேற்காக நகர்ந்து, இன்று பிற்பகலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மேலும் தீவிரமடைய வாய்ப்புள்ளது.
அதன் பிறகு, அது மேலும் தீவிரமடைந்து, அடுத்த 48 மணி நேரத்தில் வடக்கு-வடமேற்காக தென்மேற்கு வங்காள விரிகுடா மற்றும் அதை ஒட்டிய இலங்கை கடற்கரை வழியாக வடக்கு தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அதை ஒட்டிய தெற்கு ஆந்திரப் பிரதேச கடற்கரையை நோக்கி நகரும்.
ரெட் அலெர்ட் எச்சரிக்கை Red Alert
திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் நாளை மறுநாள் (29-11-2025 அதி கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
ஆரஞ்சு அலெட் எச்சரிக்கை - Orange Alert
காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர் மற்றும் தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களிலும் நாளை மறுநாள் (29-11-2025) மிக கனமழைய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது
காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்றைய நிலை என்ன? Kanchipuram Today Weather Forecast
காஞ்சிபுரம் மாவட்டத்தை பொருத்தவரை இன்று (27-11-2025) வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை மற்றும் இரவு வேலைகளில் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தின் இன்றைய நிலை என்ன ? Chengalpattu Weather Forecast Today
செங்கல்பட்டு மாவட்டத்தை பொருத்தவரை இன்று (27-11-2025) தாம்பரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மாலை நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் பரவலான இடங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.





















