போதைப்பொருளா..? யார் சொன்னது நடிகர் விஷாலா ? போன்ல பேசுறேன் - அமைச்சர் அன்பில் மகேஷ்
மாணவர்கள் போதைப் பொருள் பயன்படுத்துவதாக நடிகர் விஷால் கூறியிருந்தார். இதுகுறித்து அமைச்சரிடம் கேட்டபோது, யார் சொன்னது விஷாலா ? அவரிடம் போனில் பேசுவதாக சொல்லி விட்டு பதிலளிக்காமல் சென்று விட்டார்.

Smart Class Room ஆய்வு செய்த அமைச்சர்
சென்னை ஒக்கியம் துரைப்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யா மொழி தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசுப்பள்ளிகளில் 22,931 திறன்மிகு வகுப்பறைகள் ( Smart Class room ) அமைக்கும் திட்டத்தின் நிறைவு செய்யும் நிகழ்வில் கலந்து கொண்டு மாணவர்களோடு சேர்ந்து இறுதி கட்ட பணியினை பார்வையிட்டார். அங்கிருந்த பள்ளி மாணவர்களை நன்றாக படிக்க அறிவுறுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ்
இன்று இருக்கக் கூடிய டிஜிட்டல் உலகத்தில் இதுமாதிரி டிஜிட்டல் டெக்னாலஜியை கொண்டு செல்லும் ஆசிரியர் பெருமக்கள் பாடம் நடத்துவது ஒருபுறம் என்றாலும் ஆசிரியர்களுக்கு உதவும் வகையில் கற்றல் இந்த டெக்னாலஜி பயன்படுகிறது.
முதல்வர், 2024 ஜூன் மாதம் நேரு உள் விளையாட்டு அரங்கில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி இந்த ஸ்மார்ட் திட்டத்தை தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளுக்கும் உதவும் வகையில் துவக்கி வைத்தனர்.
தொடக்கப் கல்வி சார்ந்த பள்ளிகளில் முதற்கட்டமாக விழுப்புரம் மாவட்டம், அரியலூர் மாவட்டம், திருவாரூர் மாவட்டம் உள்ளிட்ட பகுதிகளில் 500 ஸ்மார்ட் போர்டுகள் வழங்கும் திட்டம் துவங்கப்பட்டது. இதனுடைய இலக்கு 22,9031 பள்ளிகளில் இதை சேர்க்க வேண்டும் என்பது தான் இதனுடைய இலக்கு அதன் கடைசி இலக்காக இன்று 150 பள்ளிகளுக்கு நிறைவு செய்யும் பணி நடைபெற்றது.
இந்தத் திட்டத்தின் மதிப்பு 455.32 கோடி மதிப்பீட்டில் அரசு தொடக்கப் பள்ளிகளில் பயிலும் 11,76,452 மாணவர்கள் பயனடையும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இது போன்று அரசு பள்ளிகளில் 8209 - உயர் தொழில் நுட்ப ஆய்வகங்கள் 519.73 கோடி மதிப்பீட்டில் அதற்கான பணிகளும் தற்போது முடிவடையும் நிலையில் உள்ளது. இந்த இரண்டு திட்டங்கள் மூலம் அரசுப் பள்ளியில் பயிலும் 43,89,382 மாணவர்கள் பயனடைய உள்ளனர்.
உலக அளவில் உள்ள அறிவியலை கற்றுக் கொள்ளும் வகையில் ஆசிரியர்கள் வழி நடத்த உள்ளனர் இந்த மூன்றாண்டுகளில் பள்ளி கல்வித்துறை செய்திருக்கும் சாதனைகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.
தமிழ்நாடு முதலமைச்சர் இந்த டெக்னாலஜியை நகர்புறம் மற்றும் மாநகரப்புறம் இல்லாமல் கிராம பகுதிகள் சார்ந்த மாணவர்களுக்கும் கொண்டு செல்லும் வகையில் ஆடியோ மூலமாக பள்ளி குழந்தைகளுக்கு ஆசிரியர்கள் பாடம் நடத்தும் வகையில் ஏற்படுத்தப்பட்டுள்ளது,
2014 ஆம் ஆண்டிலிருந்து தற்போது 2024 ஆம் ஆண்டு வரை இடைநிற்றல் தற்போது குறைந்து வருகிறது தேர்தல் நேரத்தில் அறிவித்த ஏழு உறுதி மொழிகளில் அதில் நான்காவது உறுதி மொழியான கல்வி மற்றும் மருத்துவம் சார்ந்த அறிவிப்பு
இடைநிற்றலை 16 சதவீதத்திலிருந்து 5% க்கு தற்போது குறைத்துக் காட்டுவோம் என அறிவித்ததின் படி பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டு, கலை, உள்ளிட்டவைகளில் ஆர்வம் காட்டி, இருக்கமான சூழல் இல்லாமல் இடைநிற்றலை தற்போது குறைத்து வருகிறோம்.
சென்னை துரைப்பாக்கத்தில் உள்ள அரசு பள்ளியில் மழை நேரங்களில் மைதானத்தில் தொடர்ந்து மழைநீர் தேங்கி இருப்பது குறித்த கேள்விக்கு ?
மழைநீர் வடியும் அளவிற்கு என்ன வழி இருக்கிறதோ அதை சீக்கிரம் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
மாணவர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள் குறித்து கேட்டதற்கு, புன்னகை என ஒரு திட்டம் கொண்டு வந்தோம், காலை உணவு, சத்தான உணவு வழங்கி வருகிறோம் சத்து மாத்திரை கொடுக்கிறோம். உன்னிப்பாக கவனிக்கிறோம்.
நடிகர் விஷால் பள்ளி மாணவர்கள் போதைப் பொருள் பயன்படுத்துவதாக கூறியிருந்தார் அது குறித்து அமைச்சரிடம் கேட்டபோது ;
அமைச்சர் யார் சொன்னது விஷாலா ? என கேட்டு விட்டு , அவரிடம் போனில் பேசுவதாக சொல்லிவிட்டு பதிலளிக்காமல் சென்று விட்டார்.





















