மேலும் அறிய
Advertisement
(Source: ECI/ABP News/ABP Majha)
சென்னை காசிமேட்டில் மீன்பிடிக்க சென்ற மீனவர் மின்னல் தாக்கி உயிரிழப்பு
கரைக்கு திரும்புவதற்காக தேசப்பன் ஜி.பி.ஆர்.எஸ் கருவியை இயக்கி உள்ளார். அப்போது அதிலிருந்து வெளிவரும் கதிர்வீச்சால் இவர் கையில் வைத்திருந்த ஜி.பி.ஆர்.எஸ் மூலம் மின்னல் தாக்கி உள்ளது.
சென்னை காசிமேடு சிங்கார வேலன் நகர் 4 ஆவது தெருவை சேர்ந்தவர் தேசப்பன் வயது 40 இவர் சொந்தமாக பைபர் படகு வைத்துள்ளார். இவரது படகில் கோவிந்தராஜ் தமிழரசன் தியாகராஜன் என்ற மூன்று பேரும் அதிகாலையில் மீன்பிடிக்கச் சென்றுள்ளனர். அதிகாலையில் மழை பெய்துகொண்டிருந்த போது 8:00 மணி அளவில் கரைக்கு திரும்புவதற்காக தேசப்பன் ஜி.பி.ஆர்.எஸ் கருவியை இயக்கி உள்ளார். அப்போது அதிலிருந்து வெளிவரும் கதிர்வீச்சால் இவர் கையில் வைத்திருந்த ஜி.பி.ஆர்.எஸ் மூலம் மின்னல் தாக்கி உள்ளது.
இதனால் கை தலை பகுதிகளில் திடீரென தீப்பற்றி எரிந்தது இதனால் மற்ற மீனவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அவர் மயக்கமடைந்து கீழே விழுந்து விட்டார் உடனே விரைவாக படகை கரைக்கு கொண்டு வந்தனர் இது சம்பந்தமாக மீன்பிடி துறைமுகத்திற்கு விரைந்து வந்தனர். கரைக்கு வந்த போது தேசப்பன் இறந்து விட்டதாக தெரிந்ததால் அவரது உடலை காசிமேடு மீன்பிடி துறைமுக போலீசார் கைப்பற்றி ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் இறந்துபோன தேசப்பனுக்கு பபிதா என்ற மனைவியும் லட்சுமி பிரியா வயது 14 அர்ஜுன் வயது 12 என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
மின்னல் தாக்கி இறந்தது குறித்து மீனவர்களிடையே குழப்பங்கள் உள்ளது. ஜி.பி.ஆர்.எஸ் கருவி மூலம் மின்னல் அதிர்வலை கதிர்வீச்சு வருமா என கேள்வி எழுப்பப்படுகிறது ஆனால் மழை நேரங்களில் செல்போன்களில் இருப்பது போன்ற கதிர்வீச்சு ஜி.பி.ஆர்.எஸ் கருவியில் இருப்பதால் மின்னல் தாக்கி இருக்கலாம் என கூறப்படுகிறது. மீன்வளத்துறை அதிகாரிகள் இது சம்பந்தமாக விசாரணை செய்து வருகின்றனர் மழைக்காலங்களில் இந்த கருவியை பாதுகாப்பாக பயன்படுத்தும் எப்படி என்பது குறித்து மீனவர்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என மீனவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
கொடுங்கையூர் அருகே பால் டெலிவரிக்கு சென்ற இளைஞரை கத்தியால் தாக்கி நகை, பணம் பறிப்பு - 3 இளைஞர்கள் கைது
சென்னை வேளச்சேரி விஜயா நகர் அவ்வையார் தெரு பகுதியை சேர்ந்தவர் பாலாஜி (25). சொந்தமாக மினி வேன் வைத்து பால் பாக்கெட்டுகளை டெலிவரி செய்யும் வேலை செய்து வருகிறார். அதிகாலை 3 மணி அளவில் பால் பாக்கெட்டுகளை டெலிவரி செய்ய கொடுங்கையூர் எழில் நகர் வழியாக சென்று கொண்டு இருந்தார். அப்போது எழில் நகர் பகுதியில் ரயில்வே கேட் மூடப் பட்டிருந்ததால் அங்கு வாகனத்தை நிறுத்தி விட்டு வாகனத்திலேயே அமர்ந்திருந்தார். அப்போது திடீரென்று வந்த மூன்று பேர் மினி வேன் கண்ணாடிகளை உடைத்து உள்ளே அமர்ந்திருந்த பாலாஜியை சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் பாலாஜிக்கு தலை மற்றும் கையில் பலத்த காயம் ஏற்பட்டது. மேலும் பாலாஜி வைத்திருந்த 35,000 ரூபாய் மதிப்புள்ள செல்போன் மற்றும் 5 ஆயிரம் ரூபாய் பணத்தையும் பறித்து சென்றனர். பாலாஜி ரத்த வெள்ளத்தில் அதே இடத்தில் மயங்கி விழுந்தார்.
அவ்வழியாக சென்றவர்கள் அவரை பார்த்து உடனடியாக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது அவர் மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பாக கொடுங்கையூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தார். இதில் சம்பவத்தில் ஈடுபட்டது ஏற்கனவே சில குற்ற வழக்கில் தொடர்புடைய நபர்கள் என்பது தெரியவந்தது. இதனை அடுத்து கொடுங்கையூர் குப்பை மேடு அருகே பதுங்கியிருந்த கொருக்குபேட்டை பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணா (22) , அதே பகுதியைச் சேர்ந்த ஜெயராம் (19) , புதிய வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த ஆகாஷ் (எ) துப்பாக்கி (20) ஆகியோரை கைது செய்தனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
இந்தியா
தமிழ்நாடு
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion