மேலும் அறிய
Advertisement
வண்டலூர் பூங்காவில் சாப்பிடாமல் அடம்பிடிக்கும் புலி: காரணம் என்ன? பின்னணி இதுதான்!
வண்டலூர் உயிரியல் பூங்காவில் புலி உணவு உட்கொள்ளாமல் அவதிப்பட்டு வருகிறது
செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் உள்ள 6 வயது ஆண் புலி நகுலன், கடந்த ஏப்ரல் 4-வது வாரத்திலிருந்து சரியாக உணவு உண்ணவில்லை. வழிகாட்டு நெறிமுறையின்படி புலிக்கு உடனடியாக அறிகுறி சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன் பின்னர் புலி நன்றாக இருந்தது. ஆனால், ஜுலை 25 ஆம் தேதி, நகுலன் மீண்டும் பசியின்மை காரணமாக உணவு உட்கொள்ளவில்லை.
பசியின்மையால் அவதிப்படும் புலி.. pic.twitter.com/BmCgz8w3sv
— Kishore Subha Ravi (@Kishoreamutha) August 2, 2022
இதையடுத்து உடனடியாக அறிகுறி சிகிச்சை அளிக்கப்பட்டது. புலியின் உடல் நிலையை மேம்படுத்த, துணை சிகிச்சையுடன் கூடுதலாக மருத்துவ ஆய்வும் மேற்கொள்ளப்படுகிறது மற்றும் உயிரியல் பூங்காவின் கால்நடை மருத்துவர்களால், புலியின் உடல்நிலை தொடர்ந்து கண்காணிப்பட்டு வருகின்றது. இரத்த மாதிரிகளின் ஆய்வில் பிற நோய்களுக்கான கிருமிகள் எதுவும் இல்லை என்ற எதிர்மறை முடிவு வந்துள்ளது. மேலும் பிற மருத்துவ ஆய்வுகள் நடந்து வருவதாக பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பூங்கா நிர்வாகம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் உள்ள 6 வயது ஆண் புலி நகுலன், கடந்த ஏப்ரல் 4-வது வாரத்திலிருந்து சரியாக உணவு உண்ணவில்லை. வழிகாட்டு நெறிமுறையின்படி புலிக்கு உடனடியாக அறிகுறி சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன் பின்னர் புலி நன்றாக இருந்தது. ஆனால், ஜுலை 25 ஆம் தேதி, நகுலன் மீண்டும் பசியின்மை காரணமாக உணவு உட்கொள்ளவில்லை.
இதையடுத்து உடனடியாக அறிகுறி சிகிச்சை அளிக்கப்பட்டது. புலியின் உடல் நிலையை மேம்படுத்த, துணை சிகிச்சையுடன் கூடுதலாக மருத்துவ ஆய்வும் மேற்கொள்ளப்படுகிறது மற்றும் உயிரியல் பூங்காவின் கால்நடை மருத்துவர்களால், புலியின் உடல்நிலை தொடர்ந்து கண்காணிப்பட்டு வருகின்றது. இரத்த மாதிரிகளின் ஆய்வில் பிற நோய்களுக்கான கிருமிகள் எதுவும் இல்லை என்ற எதிர்மறை முடிவு வந்துள்ளது என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது .
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கல்வி
அரசியல்
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion