மேலும் அறிய
Advertisement
பத்து எண்றதுக்குள்ள சமந்தா பட பாணியில் காரை பார்க் செய்த நபர்...!
திரைப்பட சண்டைக்காட்சியின் போது கார் வானில் பறப்பது போல், மகேஷ் ஓட்டிச்சென்ற காரும் பறந்து சென்று அருகில் இருந்த ஒரு வீட்டின் மீது பாய்ந்து தலைகீழாக தொங்கி கொண்டிருந்தது.
கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை அகரம் மெயின் ரோடு பகுதியை சேர்ந்த ஞானசேகரன் என்பவரின் மகன் மகேஷின் (40). உறவினர் ஒருவர் கடந்த வாரம் விபத்தில் சிக்கி புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரை பார்ப்பதற்காக மகேஷ், உட்பட பரங்கிப்பேட்டை அகரம் பகுதியை சேர்ந்த அறிவழகன் (40), சாந்தி (55), கஜம் மூர்த்தி (21), கார்த்திக் (25), சதீஷ் (23), சிவக்குமார் (26) ஆகிய 7 பேரும் காலையில் காரில் புதுச்சேரி புறப்பட்டனர்.
இந்நிலையில் காரை மகேஷ் அதிவேகமாக ஓட்டிச்சென்றதாக கூறப்படுகிறது. அப்பொழுது பரங்கிப்பேட்டை அருகே உள்ள கரிக்குப்பம் பகுதியில் கார் சென்றபோது கார் ஆனது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து மரத்தின் மீது மோதி உள்ளது, மேலும் அந்த கார் மரத்தில் மோதிய வேகத்தில் திரைப்பட சண்டைக்காட்சியின் போது கார் வானில் பறப்பது போல், மகேஷ் ஓட்டிச்சென்ற காரும் பறந்து சென்று அருகில் இருந்த ஒரு வீட்டின் மீது பாய்ந்து தலைகீழாக தொங்கி கொண்டிருந்தது. திடீர் என்று வீட்டின் மீது இடி விழுந்தது போல் சத்தத்தை கேட்டு வீட்டில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து அந்த வீட்டை விட்டு வெளியே அலறியடித்து கொண்டு ஓடிவந்தனர். சத்தம் கேட்டு உடனடியாக வீட்டை விட்டு வெளியேறியதால் அதிர்ஷ்டவசமாக அவர்கள் யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை.
ஆனால் இந்த விபத்தில் மகேஷ் உள்பட அவருடன் வந்த 7 பேரும் பலத்த காயம் அடைந்தனர். இதில் மகேஷுக்கு மற்றவர்களை விட காயம் அதிகமாக ஏற்பட்டதால் அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின் மகேஷுடன் வந்த மற்றவர்கள் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
காயமடைந்தவர்களுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இது குறித்த அளிக்கப்பட்ட புகாரின் பேரில் பரங்கிப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். தொடர்ந்து விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவ்வாறு சம்மந்தா, விக்ரம் நடித்த பத்து எண்ணுறதுக்குள்ள திரைப்பட பாணியில் கார் பறந்து சென்று வீட்டில் மீது பாய்ந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
க்ரைம்
க்ரைம்
தொழில்நுட்பம்
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion