தொடரும் அதிரடி: 2வது நாளாக சென்னை, காஞ்சியில் 10 க்கும் மேற்பட்ட இடங்களில் ஐடி அதிகாரிகள் ரெய்டு!
சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனை
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஃப்ளெக்ஸ் தொழிற்சாலையிலும் வருமானவரித் துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சென்னையில் உள்ள ஃப்ளெக்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான மற்றும் தொடர்புடைய இடங்களில் இரண்டாவது நாளாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர் .
தமிழகத்தில் பல்வேறு இடங்களில்..
தமிழ்நாட்டில் கடந்த ஒரு வார காலமாக பல்வேறு இடங்களில் வருமானவரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. அதே போன்று கடந்த சில நாட்களாக அமலாக்கத்துறை சோதனையும் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு துறையிலும் நடைபெறும் முறைகேடுகள் குறித்த புகாரின் அடிப்படையில், இந்த சோதனைகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பல முக்கிய ஆவணங்கள்
குறிப்பாக, மணல் குவாரி உரிமையாளர்கள் தொழில் அதிபர்கள் ரியல் எஸ்டேட் அதிபர்கள் உள்ளிட்டவர்களுக்கு சொந்தமான இடங்களிலும் அவர்களுடைய நிறுவனங்களிலும், அலுவலகங்களிலும் வருமானவரித் துறையினர் சோதனை மேற்கொண்டனர். சோதனையின் முடிவில் பல முக்கிய ஆவணங்கள் மற்றும் பென்டிரைவ் உள்ளிட்ட பல்வேறு கோப்புகளை கைப்பற்றி அது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.
தனியார் நிறுவனங்களில் சோதனை
அந்த வகையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பாக கூட தமிழ்நாடு மின்சார துறைக்கு பல்வேறு மூலப்பொருட்கள் உள்ளிட்டவற்றை டென்டரின் அடிப்படையில், தமிழ்நாடு மின்சார துறைக்கு விநியோகித்து வரும், பல்வேறு தனியார் நிறுவனங்களை குறிவைத்து சுமார் 25க்கும் மேற்பட்ட இடங்களில், தமிழ்நாடு முழுவதும் வருமானத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்பொழுது பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் தகவல் வெளியாகி இருந்தது.
மென்பொருள் நிறுவனங்கள்
இந்தநிலையில் நேற்று மென்பொருள் நிறுவனங்களில் திடீரென வருமானத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். இந்தநிலையில் இன்று இரண்டாவது நாளாக காலை முதல் சென்னை, காஞ்சிபுரம் மற்றும் சென்னை புறநகர் மாவட்டங்களில் இயங்கி வரும் மென்பொருள் நிறுவனங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். முதற்கட்ட தகவலின் அடிப்படையில் மென்பொருள் நிறுவனங்கள் மீது எழுந்த வரி ஏய்ப்பு புகார் அடிப்படையில், சோதனைகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சுமார் சென்னை மற்றும் சென்னை புறநகர் மாவட்டங்களில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த சோதனைகள் நடைபெற்று வருகின்றன. பெங்களூரை சேர்ந்த அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஃப்ளெக்ஸ் தொழிற்சாலை
ஆனால் எத்தனை இடங்களில் முழுமையாக சோதனை நடைபெறுகிறது. எந்த காரணத்திற்காக இந்த சோதனை நடைபெறுகிறது என்பது குறித்த முழு விவரங்கள், இதுவரை வெளியாகவில்லை. சென்னையில் உள்ள பெருங்குடி கந்தன்சாவடி காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு உட்பட்ட ஸ்ரீபெரும்புதூர் ஃப்ளெக்ஸ் தொழிற்சாலை, ஆவடி சிப்காட் உள்ளிட்ட பல்வேறு இடங்களில், இயங்கி வரும் தனியார் நிறுவனங்களிலும், அதன் தொழிற்சாலைகளிலும் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. மென்பொருள் நிறுவனங்களை குறி வைத்து, மட்டுமே இந்த சோதனைகள் நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
உதிரி பாகம் தயாரித்தல்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் மட்டும் இரண்டு இடங்களில், சோதனை நடைபெற்று வருகிறது. சோதனை நடைபெற்று வரும், ஃப்ளெக்ஸ் தொழிற்சாலையில் பல்வேறு, மொபைல் போன்களுக்கு உதிரி பாகம் தயாரித்தல், சார்ஜர் ,ஹெட்செட் உள்ளிட்ட பொருட்கள் தயாரித்தல், டிஜிட்டல் கைக்கடிகாரம் தயாரித்தல் உள்ளிட்ட பல்வேறு மென்பொருள் சார்ந்த பொருட்கள் தயாரிக்கப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. நேற்று இரவு 7:00 மணி வரை இந்த இடங்களில் சோதனை நடைபெற்று வந்த நிலையில் இரண்டாவது நாளாக என்றும் சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது