மேலும் அறிய
Advertisement
Breaking News LIVE: வங்கக்கடலில் உருவாகியது புதிய வளிமண்டல சுழற்சி
Breaking LIVE News 14th December 2024: தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே லைவ் ப்ளாக்கில் உடனுக்குடன் காணலாம்.
LIVE
Key Events
Background
- தொடர்ந்து பெய்து வரும் மழை; தாமிரபரணி ஆற்றில் கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தால் 3 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை
- தாமிரபரணி ஆற்றில் கரைபுரண்டு ஓடும் வெள்ளம்; தூத்துக்குடியில் கரையோர பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல அறிவுறுத்தல்
- நெல்லையில் கொட்டித் தீர்த்த கனமழை; மார்பு அளவு தண்ணீரில் தத்தளிக்கும் மக்கள் – மீட்பு பணியில் அதிகாரிகள்
- தாமிரபரணி ஆறு கடலில் கலக்கும் இடத்தில் அடைப்பு; ஆறு கடலில் கலக்கும் இடத்தில் உள்ள அடைப்பை கொட்டும் மழையில் அகற்றிய பொதுமக்கள்
- தூத்துக்குடியில் கொட்டும் மழையால் நோயாளிகள் அரசு மருத்துவமனையில் இருந்து வேறு மருத்துவமனைக்கு மாற்றம்; கைதிகள் வேறு சிறைக்கு மாற்றம்
- நெல்லை, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
- தெற்கு அந்தமான் கடல்பகுதியில் இன்று உருவாகிறது வளிமண்டல மேலடுக்கு சுழற்சி – தமிழகத்தில் மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
- தஞ்சை மாவட்டத்தில் மணலூர் சாஸ்திரி நகரைச் சூழ்ந்த வெள்ளம்; தொடர் மழையால் சதுரகிரி மலையில் வெள்ளப்பெருக்கு
- திருச்சியில் கனமழையால் சம்பா பயிர்கள் சேதம்; வீடுகளுக்குள் புகுந்த மழைநீர் – விவசாயிகள், மக்கள் வேதனை
- கனமழையால் பாதிக்கப்பட்ட தென்காசி பகுதிகளில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ராமச்சந்திரன் ஆய்வு
- கனமழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை முழுமையாக கணக்கெடுத்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும் – எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ் வேண்டுகோள்
- செம்பரம்பாக்கம் ஏரியில் தண்ணீர் திறப்பு; அடையாறு ஆறில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் ஆய்வு
- திருச்செந்தூரில் சுமார் 100 அடிக்கு உள்வாங்கிய கடல்; பச்சைப்பாசிகளை பார்த்துச் செல்லும் மக்கள்
- ஜாமின் கிடைத்தும் சிறையில் அடைக்கப்பட்ட அல்லு அர்ஜூன்; இன்று விடுதலை ஆனார்
- அல்லு அர்ஜூன் சிறையில் அடைக்கப்பட்டதை கண்டித்து சிறையின் முன்பு அவரது ரசிகர்கள் போராட்டம்
- ரஷ்ய ராணுவத்தில் வலுக்கட்டாயமாக சேர்க்கப்பட்ட பெரும்பாலான இந்தியர்கள் மீட்பு
- தற்போது ரஷ்ய ராணுவத்தில் 19 இந்தியர்கள் மட்டுமே பணியாற்றி வருகின்றனர்
- ஆதார் அட்டையை புதுப்பிக்க இன்றே கடைசி நாள்; 10 ஆண்டுகளாக புதுப்பிக்காமல் உள்ளவர்கள் பயன்படுத்திக் கொள்ள அறிவுறுத்தல்
08:44 AM (IST) • 14 Dec 2024
வங்கக்கடலில் உருவாகியது புதிய வளிமண்டல சுழற்சி
வங்கக்கடலில் வளிமண்டல சுழற்சி இன்று உருவானது. தெற்கு அந்தமான் பகுதியில் உருவாகிய இந்த வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த சில நாட்களுக்கு மழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளது.
07:03 AM (IST) • 14 Dec 2024
சிவகங்கை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
கனமழை காரணமாக சிவகங்கை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
07:02 AM (IST) • 14 Dec 2024
சிறையில் அடைக்கப்பட்ட அல்ல அர்ஜூன் ரிலீஸ்
கூட்ட நெரிசலில் சிக்கி பெண் ரசிகை உயிரிழந்த வழக்கில், சிறையில் அடைக்கப்பட்ட அல்லு அர்ஜூன் இன்று காலை விடுதலை ஆனார்.
Load More
அனைத்து தமிழ் ப்ரேக்கிங் செய்திகளையும் முதலில் அறிய ABP நாடு படியுங்கள். பாலிவுட், விளையாட்டு, கோவிட்-19 தடுப்பூசி தகவல்கள் அனைத்துக்கும், மிக நம்பகமான தமிழ் இணையதளம் Abpநாடு | இது தொடர்பான அனைத்து செய்திகளை அறிய தொடரவும்: தமிழில் பிரேக்கிங் செய்திகள்
New Update
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion