மேலும் அறிய
Advertisement
அட இது சூப்பரா இருக்கே... 200 ஆண்டுகள் பழமையான மரம் மீண்டும் நடப்பட்டது..!
சாலை அமைப்பதற்காக இடையூறாக இருந்த 200 ஆண்டுகள் பழமையான புளியமரம், வேருடன் பிடுங்கி ராட்சத கிரேன்கள் உதவியுடன் மீண்டும் நடப்பட்டது
செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் அடுத்த அறப்பேடு பகுதியில் ஆக்சிஜன் சேமித்து வைக்கும் சிலிண்டர்களை உருவாக்கும் தனியார் நிறுவன கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த நிறுவனத்திற்கு செல்வதற்காக புதிய சாலைகள் அமைக்கும் பணி ஆனது தற்போது நடைபெற்று வருகிறது. நிறுவனத்திற்கு கனரக வாகனங்கள் வந்து செல்வதற்காக அந்த புதிய சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருவதால், நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான சில மரங்கள் அந்த சாலையின் காரணமாக வெட்ட வேண்டிய சூழல் ஏற்பட்டது. இந்த சாலையானது தனியார் நிறுவனம் அனுமதி வாங்கி சாலையை அமைத்து வருவது குறிப்பிடத்தக்கது.
நெடுஞ்சாலையில் இருக்கும் சுமார் 200 ஆண்டுகள் பழமையான புளிய மரத்தை வெட்ட வேண்டிய சூழல் ஏற்பட்டதால் புளிய மரத்தை உயிருடன் மீட்டு எடுக்க, அதற்கான நிபுணர்களின் உதவியை நாடியது அந்த நிறுவனம். இதனை அடுத்து சில மாதங்களுக்கு முன்பு 200 ஆண்டுகள் பழமையான புளிய மரத்தை வெட்டி, ரசாயன கலவை மூலம் பதப்படுத்தப்பட்டது. இதனை அடுத்து பதப்படுத்தப்பட்ட மரம் ராட்சத கிரேன்களின் உதவியுடன் உயிருடன் மீண்டும் நடப்பட்டது.
இதே சாலை பணி அமைக்கும் பொழுது நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான தேக்கு மரம், புங்கமரம் ஆகியவையும் உயிருடன் மீண்டும் நடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 200 ஆண்டுகள் பழமையான மரம் மீண்டும், நடப்பட்டிருக்கும் சம்பவம் அப்பகுதியில் இருக்கும் பொது மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
சென்னை
க்ரைம்
வேலைவாய்ப்பு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion