மேலும் அறிய
Advertisement
அடடே! லீவு போடாமல் வந்த அரசுப்பள்ளி மாணவர்கள் விமான பயணம்! நமக்கு இப்படி ஒரு டீச்சர் இல்லையே
chengalpattu: "லீவு போடாமல் வந்த மாணவர்கள் விமானத்தில் பறந்து மகிழ்ச்சி, அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு குவியும் பாராட்டுக்கள்"
தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் பல அரசு பள்ளிகள் இந்திய அளவில் முன்மாதிரியாக செயல்பட்டு வருகின்றன. அரசும் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்க வேண்டும் என பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. பொதுவாக மாணவர்கள் சேர்க்கை ஜூன் மாதத்தில் துவங்கும் நிலையில் கடந்த சில ஆண்டுகளாகவே, மாணவர் சேர்க்கை முன்னதாக துவங்கி நடைபெற்று வருகிறது.
மாணவர் சேர்க்கை
இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை மார்ச் 1ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. 5 வயது நிறைவடைந்த குழந்தைகள் பள்ளிக்கு செல்லாமல் இருப்பதை தவிர்க்க அனைத்து குழந்தைகளின் விவரங்கள் அடிப்படையில் அவர்களை பள்ளியில் சேர்க்க ஆசிரியர்கள் முனைப்பு காட்ட வேண்டும். குறிப்பாக அரசு பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க வலியுறுத்தி துண்டு பிரசுரங்களை ஆசிரியர்கள் விநியோகிக்க வேண்டும். அதேபோன்று அரசு பள்ளி மாணவர் சேர்க்கை குறித்த விழிப்புணர்வு பேரணியும் நடத்திட வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை சார்பில் வேண்டுகோள் விடப்பட்டுள்ளது.
மேலும் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை நடத்துவதற்கு தேவையான விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் குழுக்களை அமைத்து அதன் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பள்ளி மேலாண்மை குழுக்கள் மூலமாகவும் அந்த பகுதியில் உள்ள மாணவர்களை அரசு பள்ளிகளில் சேர்க்க உரிய விழிப்புணர்வு மேற்கொள்ள வேண்டும். கோடை விடுமுறைக்கு முன்பாகவே பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடத்துவதற்கான முகாம்களை நடத்த வேண்டும் என கோரிக்கையும் தமிழ்நாடு அரசு சார்பில் வைக்கப்பட்டுள்ளது.
இன்ப அதிர்ச்சி
தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு பள்ளிகளில் அரசு சொல்லும் உத்தரவுகளைத் தாண்டி ஆசிரியர்களே முன்வந்து மாணவர்களை பள்ளியில் சேர்ப்பதற்காகவும், மாணவர்கள் ஒழுக்கமாக நடந்து கொள்வதற்காகவும், மாணவர்கள் அதிக அளவு மதிப்பெண் பெறுவதற்கு பல்வேறு வகையில் பள்ளி ஆசிரியர்கள் ஊக்கம் அளித்து வருகின்றனர். அந்த வகையில் செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், வருடம் முழுவதும் விடுமுறை எடுக்காமல் வந்த மாணவர்களை விமானத்தில் அழைத்துச் சென்று பாராட்டி உள்ளது பள்ளி நிர்வாகம்.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த கருங்குழி என்ற பகுதியில் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் சுமார் 70க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். பொருளாதார ரீதியிலும் சமூக ரீதியிலும் பின் தங்கிய மாணவர்களே பெரும்பாலானோர் இந்த பள்ளியில் கல்வி கற்று வருகின்றனர். இப்பள்ளியை சேர்ந்த தலைமை ஆசிரியர் மற்றும் சக ஆசிரியர்கள் இணைந்து கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஒன்றாம் தேதி முதல் தொடர்ந்து பள்ளியில் விடுமுறை எடுக்காமல் வரும் மாணவ மாணவிகளை விமானத்தில் அழைத்துச் செல்ல முடிவு செய்திருந்தனர்.
லீவு போடாமல் வந்த மாணவர்கள்
அதன் ஒரு பகுதியாக விடுமுறை எடுக்காமல் வந்த ஒன்பது மாணவ மாணவிகளை பெற்றோர் அனுமதியுடன், சென்னையில் இருந்து பெங்களூர் வரை விமானத்தில் அழைத்துச் சென்று மாணவ மாணவிகளுக்கு இன்ப பரிசினை ஆசிரியர்கள் வழங்கினர். அருகில் இருக்கும் சென்னைக்கு கூட சென்றிராத பல மாணவர்களை விமானத்தில் அழைத்துச் சென்று அழகு பார்த்த ஆசிரியருக்கு பெற்றோர்கள் மனமார்ந்த நன்றியை தெரிவித்து வருகின்றனர்.
இதன் மூலம் தற்பொழுது நடைபெற இருக்கின்ற மாணவர்கள் சேர்க்கையில் அதிக மாணவர்கள் பள்ளியில் சேருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் மாணவர்களும் இக்காலத்தில் தேவையில்லாமல் இருக்கும் விடுமுறைகளை எடுக்காமல் ஒழுக்கமாக பள்ளிக்கு வருவார்கள் எனவும் ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர். அரசு பள்ளி ஆசிரியர்களின் தன்னலமற்ற செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கல்வி
தமிழ்நாடு
ஆட்டோ
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion