மேலும் அறிய
Advertisement
Kilambakkam: கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்; தேதியை குறித்த முதலமைச்சர் - எப்போது திறப்பு?
kalaignar centenary bus terminus: மக்கள் மகிழ்ச்சியோடு பயன்படுத்துகின்ற நிலையிலே மக்களுக்கு இந்த பேருந்து நிலையம் தமிழக முதல்வர் திறந்து வைக்க உள்ளதாக தெரிவித்தார்
கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம் - kalaignar centenary bus terminus
கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து இயங்கக்கூடிய தென் மாவட்ட பேருந்துகளால், சென்னை புறநகர் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு கிளாம்பாக்கம் பகுதியில் சுமார் 400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் கட்டி முடிக்கப்பட்டு திறப்பு விழாவிற்காக காத்துக் கொண்டிருக்கிறது. கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக, திறப்பு விழா பல்வேறு காரணங்களால் தள்ளிப் போயிட்டு வருகிறது. இந்தநிலையில் இன்று கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை அமைச்சர்கள் தா.மோ அன்பரசன் மற்றும் சேகர்பாபு ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். திறப்பு விழாவிற்கு எங்கு மேடை அமைக்கப்பட வேண்டும், பேருந்து முனையும் திறப்பு விழா கல்வெட்டு அமைக்கப்படும் இடம், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில், கலைஞர் சிலை அமைக்கப்பட இருக்கும் இடம் ஆகியவற்றை ஆய்வு மேற்கொண்டனர். அதேபோன்று நிறைவடைந்துள்ள மழை நீர் வடிகால் பணியையும் ஆய்வு மேற்கொண்டனர்.
இதனை அடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு தெரிவித்ததாவது :
வெகு விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக, தமிழக முதல்வர் தொடர்ந்து பணிகள் குறித்த முன்னேற்றத்தை கேட்டு அறிந்து வருகிறார். கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம் முனையம் அனைத்து, பணிகளும் நிறைவுற்று வெகு விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. 86 ஏக்கர் நில பரப்பளவில் அமைந்திருக்கின்றது. இதற்கு தேவையான அனைத்து வசதிகளையும் ஏற்படுத்துகின்ற முயற்சி முழுமை பெற்று இருக்கின்றது . இரண்டு மூன்று மாதங்களுக்கு முன்பே இந்த பேருந்து நிலையம் திறக்கின்ற சூழ்நிலை இருந்தும், தள்ளி போனதற்கான காரணம் மழை காலங்களில், பெருமளவு தண்ணீர் தேங்கி நின்றது. 1200 மீட்டர் அளவிற்கு மழை நீர் வடிகால் அமைப்பு பணி நடந்தது அந்த பணி தற்போது நிறைவுற்றிருக்கின்றது.
பேருந்து நிலையம் திறக்கப்பட்டால் , 2310 பேருந்துகள் தினம் தோறும் அதில் 840 பேருந்துகள் ஆம்னி பேருந்துகள் உள்ளடக்கும். கிட்டத்தட்ட ஒரு லட்சம் மக்கள் இந்த பேருந்து நிலையத்தை பயன்படுத்தலாம். அப்படி வருகின்ற மக்களுக்கு தேவையான உணவு வசதி, அதே போல் திடீரென்று உடலில் குறைவு ஏற்பட்டால், அவர்களுக்கு உண்டான மருத்துவ சிகிச்சை, தேவைப்படுகின்ற மருது மாத்திரைகள் வாங்குவதற்கு மருந்து கடைகள், வருகின்ற ஓட்டுநர் மற்றும் நடத்துனர் ஓய்வு எடுப்பதற்கு ஓய்வறையில்,, அதேபோல் உணவகங்கள் தீயணைப்பு வாகனங்கள் குடிநீர் வசதி கழிப்பறை வசதி. பெட்ரோல் மற்றும் டீசல் நிலையங்கள். காவல் நிலையம் அமைப்பதற்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தமிழ் புத்தாண்டு ( தை 1 ) (kilambakkam bus terminus opening date )
பிறக்கின்ற புத்தாண்டில் மக்கள் மகிழ்ச்சியோடு இந்த பேருந்து நிலையத்திலிருந்து பயணிக்கின்ற வகையில் திறப்பு விழா அமையும். பிறக்கின்ற புத்தாண்டில் அதாவது தமிழ் புத்தாண்டில் ( தை 1 ) இந்த பேருந்து நிலையத்தை மக்கள் மகிழ்ச்சியோடு பயன்படுத்துகின்ற நிலையிலே மக்களுக்கு இந்த பேருந்து நிலையம் தமிழக முதல்வர் திறந்து வைக்க உள்ளதாக தெரிவித்தார்.
திமுக அரசு தென் மாவட்டங்களை வஞ்சிப்பதாக ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்த கருத்துக்கு பதில் அளித்த அமைச்சர் சேகர்பாபு பேசுகையில், முதலில் பாண்டிச்சேரி கவர்னர் வேலையை, அவர்களை பார்க்க சொல்லுங்கள். பாரதிய ஜனதா கட்சியின் செய்தி தொடர்பாளராக மாற வேண்டாம். அவர்களுக்கு இருக்கின்ற பணியை பார்க்க சொல்லுங்கள்.
தமிழிசை - விமர்சனம்
அவர்களுடைய எதிர்கால திட்டம் தமிழகத்தில் எங்கேயாவது நாடாளுமன்ற தொகுதியில் நின்று போட்டியிட வேண்டும்., நிச்சயமாக எங்கே போட்டியிட்டாலும் ஏற்கனவே தமிழக மக்கள் தோல்வியை தான் பரிசாக கொடுத்திருக்கிறார்கள், மீண்டும் தோல்வியை தான் பரிசாக தருவார்கள். எனவே பாண்டிச்சேரிக்கு உண்டான கவர்னர் அந்த பொறுப்பிற்கான பணியை மேற்கொள்ள கொள்ள வேண்டும் அதுதான் நல்லது என தெரிவித்தார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
தமிழ்நாடு
அரசியல்
விழுப்புரம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion