Chengalpattu Local Trains: செங்கல்பட்டு பயணிகளே உங்களுக்கு தான்..! மின்சார ரயில் சேவை திடீர் மாற்றம்..!
செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால், சில மின்சார ரயில்களின் சேவை நாளை பகுதியாக ரத்து செய்யப்படுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.
தென் மாவட்டங்களில் இருந்து வரும் பொதுமக்களுக்கு சென்னையில் நுழைவு வாயிலாக இருக்கும் செங்கல்பட்டில் இருந்து நாள்தோறும் இருபதிற்கும் மேற்பட்ட மின்சார ரயில்கள் சென்னை கடற்கரை வரை சென்று வரும். சென்னை புறநகர் பகுதிகளில் இருந்து சென்னை நோக்கி வேலைக்கு செல்லும் பொதுமக்கள் மின்சார ரயிலில் பயன்படுத்தி விரைவாக தங்களுடைய பணிகளுக்கு சென்றுவிட்டு வீடு திரும்புவார்கள். அதேபோன்று வார இறுதி நாட்களில் சென்னைக்கு, பொருட்கள் வாங்க செல்பவர்களும் பெரும்பாலானோர் மின்சார ரயில் நிலையத்தில் பயன்படுத்துவார்கள். பேருந்து பயணத்தை காட்டிலும் மின்சார ரயில் பயணம் செய்வது மிகவும் குறைந்த விலை என்பதால் நடுத்தர மக்கள் பெரும்பாலானோர் மின்சார வாரியங்களை பயன்படுத்துகின்றனர். இதனால் மின்சார ரயில்கள் ஒருநாள் அல்லது இரண்டு நாள் பராமரிப்பு பணிக்காக செயல்படாமல் போனாலும் பொதுமக்கள் அவதி அடைவார்.
பராமரிப்பு பணிகள்
பொதுவாக பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளும் பொழுது முடிந்த அளவிற்கு மின்சார ரயில்கள் பாதிப்படையாமல் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள ரயில்வே நிர்வாகம் திட்டமிடும். அப்படி ஒரு சில சமயங்களில் முறையாக, தவிர்க்க முடியாத காரணத்தினால் ரயில்கள் வந்து செய்யப்படும் அல்லது தாமதம் முன்னேற்றத்தை குறித்து பொதுமக்களுக்கு முன்கூட்டியே அறிவுறுத்தல் கொடுப்பது வழக்கம். அந்த வகையில் சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு செல்லும் புறநகர் ரயில்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு செல்லும் சென்னை புறநகர் மின்சார ரயில் ஞாயிற்றுக்கிழமை ( May 12 ) சிங்கப்பெருமாள் கோவில் வரை மட்டுமே இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே சென்னை கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
செங்கல்பட்டு ரயில் நிலைத்தில் ஞாயிற்றுக்கிழமை (May 12) காலை 11.10 முதல் பிற்பகல் 12.20 மணி வரை பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளன. இதனால், மே 12-இல் கடற்கரையிலிருந்து காலை 9.25, 10 மணிக்கு செங்கல்பட்டு செல்லும் புகா் ரயில்கள் சிங்கபெருமாள்கோவிலுடன் நிறுத்தப்படும். மறுமாா்க்கமாக அதே நாளில் காலை 11.20, பிற்பகல் 12 மணிக்கு செங்கல்பட்டிலிருந்து கடற்கரைக்கு புறப்படும் ரயில்கள் செங்கல்பட்டுக்கு பதிலாக சிங்கப்பெருமாள் கோவிலில் இருந்து புறப்படும்.
கூடுதல் பெட்டி இணைப்பு: பயணிகளின் வசதிக்காக, விசாகப்பட்டினம் - சென்னை சென்ட்ரல் இடையே இயங்கும் வாராந்திர அதிவிரைவு ரயிலில் (எண்: 22869/22870) மே 13 முதல் ஜூன் 11-ஆம் தேதி வரை ஒரு கூடுதல் படுக்கை வசதிகொண்ட பெட்டி தற்காலிகமாக இணைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.