Breaking LIVE: தொடரும் மழை..! நாளை திருவள்ளூர், செங்கல்பட்டு பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை..!
Breaking LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை ஏபிபி நாடு இணையதளத்தில் கீழே உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

Background
பள்ளிகளுக்கு விடுமுறை
செங்கல்பட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
முறைகேடு வழக்கு..! அமைச்சர் ஐ. பெரியசாமி மனு தள்ளுபடி; உச்சநீதிமன்றம் அதிரடி..!
2008ல் அமைச்சராக இருந்தபோது முறைகேட்டில் ஈடுபட்டதாக தொடரப்பட்ட வழக்கில், அமைச்சர் ஐ. பெரியசாமியின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மேலும், வழக்கை சந்திக்கவும் உச்சநீதிமன்றம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னை பள்ளிகளுக்கு அரைநாள் விடுமுறை..!
தொடர் கனமழையால் சென்னையில் இன்று அரைநாள் மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை பள்ளிகளுக்கு அரைநாள் விடுமுறை..!
தொடர் கனமழையால் சென்னையில் இன்று அரைநாள் மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
26 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..!
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, கோவை, ஈரோடு, திருப்பத்தூர், சேலம், தர்மபுரி உள்ளிட்ட தமிழ்நாட்டின் 26 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

