மேலும் அறிய

இரண்டாவது நாளாக தொடரும் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் - திருவாரூரில் 600 கோடி பரிவர்தனை பாதிப்பு

’’ஒரு நாள் வங்கி செயல்படவில்லை என்றால் திருவாரூர் மாவட்டத்தில் மட்டும் 300 கோடி ரூபாய் பணம் பரிவர்த்தனை பாதிக்கப்படும்’’

மத்திய அரசு நடப்பு குளிர்கால நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அறிமுகப்படுத்த இருக்கும் வங்கிகள் தனியார்மயம் மசோதாவை கைவிடவேண்டும், அரசு பொதுத்துறை வங்கிகளை தனியாருக்கு தாரைவார்க்க கூடாது என்கிற கோரிக்கைகளை வலியுறுத்தி 2வது நாளளாக நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்க கூடாது, சீர்திருத்தம் என்ற பெயரில் வங்கி தொழிலை முடக்கக் கூடாது, வங்கிகள் சட்டத் திருத்த மசோதாவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து வங்கி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அரசு கொண்டு வரும் இந்த சட்டத்தின் காரணமாக 10 லட்சத்திற்கும் மேற்பட்ட வங்கி ஊழியர்கள் பாதிக்கப்படுவார்கள் என கூறப்படுகிறது.குறிப்பாக திருவாரூர் மாவட்டத்தில் 140 வங்கி கிளைகள் உள்ளன இதில் 717 வங்கி ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர் இதில் 237 பெண் ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள். ஒரு நாள் வங்கி செயல்படவில்லை என்றால் திருவாரூர் மாவட்டத்தில் மட்டும் 300 கோடி ரூபாய் பணம் பரிவர்த்தனை பாதிக்கப்படும்.

இரண்டாவது நாளாக தொடரும் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் - திருவாரூரில் 600 கோடி பரிவர்தனை பாதிப்பு

குறிப்பாக காசோலை மற்றும் பணம் எடுத்தல் மற்றும் பணம் செலுத்துதல் ஆகியவை மூலமாக நேற்றும் இன்றும் மட்டும் திருவாரூர் மாவட்டத்தில் 600 கோடி ரூபாய் பண பரிவர்த்தனை பாதிக்கப்பட்டுள்ளதாக வங்கி ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் குறிப்பாக மத்திய அரசு கொண்டு வரும் இந்த சட்டத்தினால் குக்கிராமங்களுக்கு வங்கி திட்டங்கள் சென்றடைய வாய்ப்பு மிகக் குறைவு, லாப நோக்கம் இல்லாமல் வங்கியின் திட்டங்களை கொண்டு செல்வது அரசு நிறுவனமும், பொதுத்துறை நிறுவனமும் தான். அதே நேரத்தில் பொதுத்துறை வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகள் அனைத்தும் மக்களுக்காக சேவை செய்வதற்கான வாய்ப்புகள் இருக்காது. அது மட்டுமன்றி பயிர் காப்பீடு திட்டம், மாணவர்களுக்கான கல்விக் கடன் உள்ளிட்ட திட்டங்கள் அனைத்தும் ரத்து செய்வதற்கான வாய்ப்புகள் இருக்கும். இதனை கண்டித்து வங்கி ஊழியர்கள் நாடு முழுவதும் நேற்று முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்

தமிழகம் முழுவதும் 80 ஆயிரம் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர் கிளை மேலாளர்கள் உள்ளிட்ட பணியாளர்கள் வேலைக்கு செல்லவில்லை இதன் காரணமாக பெரும்பான்மையான வங்கிகள் செயல்படவில்லை வேலைநிறுத்தப் போராட்டத்தை பொருத்தமட்டில் கிளை மேலாளர் பதவிக்கு உயர்பதவி வகிப்பவர்கள் போராட்டத்தில் பங்கேற்க முடியாது இதனால் கிளை மேலாளர் பொறுப்பில் உள்ள பெரும்பாலான வங்கிகள் மூடப்பட்டன கிளை மேலாளர் பதவிக்கு மேல் உயர் பதவிகளை கொண்ட வங்கிக் கிளைகளை பொறுத்தமட்டில் வழக்கம் போல் காலை 10 மணிக்கு வங்கி கிளை திறக்கப்பட்டன இருந்தபோதிலும் பணியாளர்கள் வேலைக்கு வராததால் அங்கு வங்கிப் பணிகள் எதுவும் நடைபெறவில்லை சில இடங்களில் போராட்டத்தில் பங்கு பெறாத அமைப்பைச் சேர்ந்த பணியாளர்கள் சிலர் மட்டும் வேலைக்கு வந்தனர் இது போன்ற வங்கிகளில் வாடிக்கையாளர்களுக்கான சேவையை வங்கி பணியாளர்கள் வழங்க முடியாமல் திணறினர்

இரண்டாவது நாளாக தொடரும் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் - திருவாரூரில் 600 கோடி பரிவர்தனை பாதிப்பு

வேலை நிறுத்தம் காரணமாக வாடிக்கையாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர் வங்கிகளுக்கு நேரடியாக சென்று பணம் செலுத்த முடியாமலும் முதிர்வடைந்த நிரந்தர டெபாசிட் பணத்தை எடுக்க முடியாமலும் காசோலை பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியாமலும் பொதுமக்கள் வியாபாரிகள் தொழிலதிபர்கள் தவித்தனர் வங்கி வேலை நிறுத்தம் குறித்து வாடிக்கையாளர்கள் வங்கி சேவைக்காக தங்கள் கணக்கு வைத்துள்ள வங்கிகளுக்கு சென்றனர் அங்கு சென்ற பின்பு தான் வேலை நிறுத்தம் குறித்து தெரிந்ததால் வங்கி தொடர்பான பணிகளை முடிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் வாடிக்கையாளர்கள் திரும்பினர் இந்த நிலையில் வங்கி ஊழியர்களின் கோரிக்கைகள் குறித்து மத்திய அரசு உடனடியாக பரிசீலிக்க வேண்டும் மேலும் வங்கி ஊழியர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் இல்லையென்றால் எங்களுடைய போராட்டம் தொடரும் என வங்கி ஊழியர்கள் தெரிவித்துள்ளனர் மத்திய அரசு பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு உடனடியாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்பதே அனைவரின் வேண்டுகோளாக உள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ஜெயராஜ்-பென்னிக்ஸ் மரணத்தில் வானத்துக்கும் பூமிக்கும் குதித்த ஸ்டாலின்! இப்போ? - கொதித்தெழும் இபிஎஸ்
ஜெயராஜ்-பென்னிக்ஸ் மரணத்தில் வானத்துக்கும் பூமிக்கும் குதித்த ஸ்டாலின்! இப்போ? - கொதித்தெழும் இபிஎஸ்
நாளை பள்ளி, கல்லூரிகளில் இது கட்டாயம்: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு- என்ன தெரியுமா?
நாளை பள்ளி, கல்லூரிகளில் இது கட்டாயம்: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு- என்ன தெரியுமா?
IND Vs AUS 1st Test: மிரட்டிய பும்ரா, சொந்த மண்ணில் ஆஸ்திரேலியா படுதோல்வி - பெர்த் டெஸ்டில் இந்தியா வரலாற்று வெற்றி
IND Vs AUS 1st Test: மிரட்டிய பும்ரா, சொந்த மண்ணில் ஆஸ்திரேலியா படுதோல்வி - பெர்த் டெஸ்டில் இந்தியா வரலாற்று வெற்றி
”அதிரப்போகிறது சட்டப்பேரவை” டிசம்பர் 9ஆம் தேதி தொடங்குகிறது கூட்டம்..!
”அதிரப்போகிறது சட்டப்பேரவை” டிசம்பர் 9ஆம் தேதி தொடங்குகிறது கூட்டம்..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kongu Eswaran on Aadhav Arjuna : ’’ஜாக்கிரதை திருமா!ஆதவ்-ஆல் விசிக உடையும்’’எச்சரிக்கும்  ஈஸ்வரன்Ravichandran Ashwin on CSK : ’’வாழ்க்கை ஒரு வட்டம் மீண்டும் மஞ்சள் ஜெர்சி!’’உணர்ச்சிவசப்பட்ட அஸ்வின்IPL Auction 2025 | மீண்டும் இந்திரன் சந்திரன் Combo!CSK வில் RRR கேங்!தோனியின் மாஸ் ப்ளான் | AshwinIPL Auction 2025 | ராகுலின் STATS தெரியுமா?கோட்டைவிட்ட RCB - CSK..தட்டி தூக்கிய டெல்லி | KL Rahul

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஜெயராஜ்-பென்னிக்ஸ் மரணத்தில் வானத்துக்கும் பூமிக்கும் குதித்த ஸ்டாலின்! இப்போ? - கொதித்தெழும் இபிஎஸ்
ஜெயராஜ்-பென்னிக்ஸ் மரணத்தில் வானத்துக்கும் பூமிக்கும் குதித்த ஸ்டாலின்! இப்போ? - கொதித்தெழும் இபிஎஸ்
நாளை பள்ளி, கல்லூரிகளில் இது கட்டாயம்: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு- என்ன தெரியுமா?
நாளை பள்ளி, கல்லூரிகளில் இது கட்டாயம்: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு- என்ன தெரியுமா?
IND Vs AUS 1st Test: மிரட்டிய பும்ரா, சொந்த மண்ணில் ஆஸ்திரேலியா படுதோல்வி - பெர்த் டெஸ்டில் இந்தியா வரலாற்று வெற்றி
IND Vs AUS 1st Test: மிரட்டிய பும்ரா, சொந்த மண்ணில் ஆஸ்திரேலியா படுதோல்வி - பெர்த் டெஸ்டில் இந்தியா வரலாற்று வெற்றி
”அதிரப்போகிறது சட்டப்பேரவை” டிசம்பர் 9ஆம் தேதி தொடங்குகிறது கூட்டம்..!
”அதிரப்போகிறது சட்டப்பேரவை” டிசம்பர் 9ஆம் தேதி தொடங்குகிறது கூட்டம்..!
”அதிமுக கூட்டத்தில் அடிதடி” முன்னாள் அமைச்சர்கள் முன்னிலையிலேயே மோதல்..!
”அதிமுக கூட்டத்தில் அடிதடி” முன்னாள் அமைச்சர்கள் முன்னிலையிலேயே மோதல்..!
”ராமதாஸுக்கு வேறு வேலை இல்லை; பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை” - கடுப்பான முதல்வர் ஸ்டாலின் 
”ராமதாஸுக்கு வேறு வேலை இல்லை; பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை” - கடுப்பான முதல்வர் ஸ்டாலின் 
”தலைமைக்கு நீங்க ஆலோசனை சொல்லாதீங்க” அதிமுக கூட்டத்தில் கடுப்பான நத்தம் விஸ்வநாதன்..!
”தலைமைக்கு நீங்க ஆலோசனை சொல்லாதீங்க” அதிமுக கூட்டத்தில் கடுப்பான நத்தம் விஸ்வநாதன்..!
TNPSC: தேர்வர்களுக்கு டிஎன்பிஎஸ்சி எச்சரிக்கை- ’’இதையெல்லாம் செய்தால் விடைத்தாள் செல்லாதது ஆக்கப்படும்’’
TNPSC: தேர்வர்களுக்கு டிஎன்பிஎஸ்சி எச்சரிக்கை- ’’இதையெல்லாம் செய்தால் விடைத்தாள் செல்லாதது ஆக்கப்படும்’’
Embed widget