மேலும் அறிய

Aavin milk: ஆவின் டிலைட் பால் விற்பனையை ஊக்குவிக்க முடிவு- அமைச்சர் மனோ தங்கராஜ்!

பச்சை நிற பாக்கெட் பாலை ஊக்குவிப்பதற்கு பதிலாக ஊதா நிற பாக்கெட் பாலை ஊக்குவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியுள்ளார்.

பச்சை நிற பாக்கெட் பாலை ஊக்குவிப்பதற்கு பதிலாக ஊதா நிற பாக்கெட் பாலை ஊக்குவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று (நவம்பர் 22) வெளியிட்டுள்ள அறிக்கையில், ”ஆவின் நிறுவனம் மூன்றடுக்கு நிருவாக அமைப்பு முறையை கொண்டு விவசாய பெருங்குடி மக்கள் உற்பத்தி செய்யும் பாலை நியாயமான மற்றும் நிலையான விலை கொடுத்து வாங்குவதையும் வாடிக்கையாளர்களுக்கு தரமான பால் மற்றும் பால் பொருட்களை குறைந்த விலையில் வழங்குவதையும் நோக்கமாக கொண்டு செயல்பட்டு வருகிறது.

ஆவின் நிறுவனத்தில் 4 வகையான பால் விற்பனையில் உள்ளது.

ஆவின் டிலைட்:

1. இந்திய நாட்டின் பசு மாடுகளின் பாலில் சராசரியாக 3.3% முதல் 4.3% கொழுப்பு சத்தும் 8.0% முதல் 8.5% இதர சத்துக்கள் அடங்கியிருக்கும். வாடிக்கையாளர்களுக்கு தரமான பசும்பாலின் தரத்தில் வழங்கும் நோக்கத்தோடு 3.5% கொழுப்பு மற்றும் 8.5% இதர சத்துக்கள் அடங்கிய பாலுடன் வைட்டமின் ஏ மற்றும் டி தரக்கட்டுப்பாட்டு விதிமுறைகளுக்குட்பட்டு செறிவூட்டி ஊதா நிற பாக்கெட்டுகளில் ஆவின் டிலைட் என்ற பெயரில் லிட்டர் ஒன்றை 44 ரூபாய்க்கு வழங்கி வருகிறோம்.

சந்தை மதிப்பைஒப்பிட்டால் பல நிறுவனங்கள் இப்பாலை விற்கும் விலையை விட இது மிக மிக குறைந்த விலையாகும். இந்த பால் பசும்பாலின் முழுமையான தரத்தில் வழங்கப்படுவதால் கொழுப்பு கூடுதலாக சேர்த்த பச்சை நிற பாலைவிட சராசரி மனிதனின் ஆரோக்கியத்திற்கு மிகவும் உகந்தது.எனவே இந்த வகை பாலை முன்னிலைப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

2. சில வாடிக்கையாளர்கள், குறிப்பாக மருத்துவர்களின் ஆலோசனை பெற்றவர்கள், தீவிர உடற்பயிற்சி செய்கின்றவர்கள் கொழுப்பு சத்து குறைந்த பாலை விரும்புவார்கள். அதற்காக கொழுப்புச்சத்து குறைக்கப்பட்ட சமன்படுத்தப்பட்ட பால் லிட்டர் ஒன்று 40 ரூபாய்க்கு விற்கப்பட்டு வருகிறது. இது ஒப்பீட்டளவில் சந்தையில் உள்ள மற்ற பால் நிறுவனங்களின் விலையை விட 16 ரூபாய்க்கும் குறைவாக ஆவின் விற்பனை செய்கிறது.

கொழுப்பு குறைவு:

3. வளரும் குழந்தைகள், குறிப்பாக கொழுப்புச்சத்து குறைவாக உள்ளவர்கள் அதிக கொழுப்பு உள்ள பாலை விரும்பினால் அவர்களுக்காக நிறை கொழுப்பு பால் 6% கொழுப்பு மற்றும் 9.0 % இதர சத்துக்கள் அடங்கிய பால் ஆரஞ்சு நிற பாக்கெட்டுகளில் லிட்டர் ஒன்று 60 ரூபாய்க்கு விற்கப்பட்டு வருகிறது. இதுவும் ஒப்பீட்டளவில் சந்தையில் உள்ள மற்ற பால் நிறுவனங்களின் விலையை விட 14 ரூபாய்க்கும் குறைவாக ஆவின் விற்பனை செய்கிறது.

ஆவின் நீண்ட காலமாக வழங்கி வரும் பச்சை நிற நிலைப்படுத்தப்பட்ட பாலை பொருத்தவரை பசும்பாலில் கூடுதலாக 1% கொழுப்பு சேர்த்து பதப்படுத்தி விற்கப்பட்டு வருகிறறது. இந்த கொழுப்பு இன்றைய வாழ்க்கைத் தரத்திற்கு ஏற்ப அறிவியல் பூர்வமாக பார்த்தால் தேவையற்ற ஒன்றாகும்.

4.அதிலும் பல வாடிக்கையாளர்கள் கூடுதலாக கொழுப்பு அல்லது புரதம் உள்ளிட்டதிடப்பொருட்கள் சேர்ப்பதை விரும்பவில்லை எனவேதான் Aavin for Healthy TN என்ற அடிப்படையில் அதன் விற்பனையை மேலும் ஊக்குவிக்காமல், அதற்கு பதிலாக ஊதா நிற ஆவின் டிலைட் பாலை முன்னிலைப்படுத்தி வருகிறோம்.

இந்த நடவடிக்கைகள் எதுவும் இலாப நோக்கிலோ அல்லது வியாபார உத்தியாகவோ கையாளப்படவில்லை, இன்றைய சூழலில் பசும்பாலின் தரம் எந்த விதத்திலும் மாற்றத்திற்கு உட்படுத்தப்படாமல் வாடிக்கையாளர்களுக்கு வழங்கவேண்டும் என்ற உயர்ந்த நோக்கில் மக்களின் ஆரோக்கியத்தை மட்டும் கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டு வரும் முயற்சியாகும்” என கூறியுள்ளார் மனோ தங்கராஜ்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thiruchendur temple : முருகனை பார்க்க ஆயிரமா? கொந்தளிக்கும் பக்தர்கள்!திருச்செந்தூரில் நடப்பது என்ன?Rowdy John : ”கேட்ட இழுத்து மூடு டா” நீதிமன்றத்துக்குள் புகுந்த போலீஸ்! தட்டி தூக்கப்பட்ட ரவுடி!Thirumavalavan on Aadhav Arjuna : ”நான் பேசியது தவறு தான்”ஒப்புக்கொண்ட ஆதவ் அர்ஜுனா! - திருமாவளவன்Hindu Temple Attack : அமெரிக்காவில் எதிரொலிக்கும் go back Hindu! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
தமிழக அரசு பழைய ஓய்வூதிய திட்டத்தினை  அமல்படுத்த வேண்டும் - பாலகிருஷ்ணன்
தமிழக அரசு பழைய ஓய்வூதிய திட்டத்தினை அமல்படுத்த வேண்டும் - பாலகிருஷ்ணன்
"இந்தியாவில் முதலீடு செய்ய உலக நாடுகளே விரும்புகிறது" பெருமிதத்துடன் சொன்ன பிரதமர் மோடி!
சொந்த காசில் சூனியம்.... அதிமுக நகரச் செயலாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சில் திருப்பம்
சொந்த காசில் சூனியம்.... அதிமுக நகரச் செயலாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சில் திருப்பம்
சினிமாவை மிஞ்சிய நிஜம்: கட்டுக்கட்டாக பணம்; கன்டெய்னர் லாரியில் சென்ற கொள்ளையர்கள்- சுட்டுப்பிடித்த போலீஸ்!
சினிமாவை மிஞ்சிய நிஜம்: கட்டுக்கட்டாக பணம்; கன்டெய்னர் லாரியில் சென்ற கொள்ளையர்கள்- சுட்டுப்பிடித்த போலீஸ்!
Embed widget