மேலும் அறிய

செஞ்சி அருகே மணல் கொள்ளை குறித்து சுவரொட்டி ஒட்டிய விவகாரம் - ஊராட்சி மன்ற தலைவர் கைது

செஞ்சி அருகே மணல் கொள்ளை குறித்து சுவரொட்டி ஒட்டிய விவகாரம், இருதரப்பினரிடையே மோதலில் ஊராட்சி மன்ற தலைவர் உள்பட 2 பேர் கைது.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள மீனம்பூர் ஊராட்சி மன்ற தலைவராக பதவி வகித்து வரும் திமுகவைச் சேர்ந்த முன்வர் அலி பாஷா என்பவரும் அவரது மகனான லியாகத் அலி என்பவரும் இணைந்து மீனம்பூர் ஏரியில் இருந்து அனுமதியின்றி சட்ட விரோதமாக மணல் எடுத்து கடத்தி வருவதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் செஞ்சி, மீனம்பூர், அப்பம்பட்டு உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் மீனம்பூர் கிராமத்தைச் சேர்ந்த ஷாலிக் உசேன் என்பவர் சுவரொட்டிகளை ஒட்டியிருந்தார். 

இந்நிலையில் ஏரியில் இருந்து மண் கடத்துவதாக புகார் தெரிவித்து சுவரொட்டிகளை ஒட்டிய ஷாலிக் உசேன் தனது உறவினர்களுடன் நேற்று மாலை காரில் சென்று கொண்டிருந்த போது அவரது காரை வழிமறித்து ரகளையில் ஈடுபட்டத்தோடு காரில் இருந்த ஷாலிக் உசேன் மற்றும் அவரது உறவினர்கள் மீது  திமுகவைச் சேர்ந்த மீனம்பூர் ஊராட்சி மன்ற தலைவர் முன்வர் அலி பாஷா, அவரது மகன்களான லியாகத் அலி, அன்வர் ஆகியோர் தனது கூட்டாளிகளுடன் ஒன்று சேர்ந்து கொலைவெறி தாக்குதல் நடத்தினர். திமுகவினர் நடத்திய இந்த கொலைவெறி தாக்குதலில் காயமடைந்த ஷாலிக் உசேன் மற்றும் அவரது உறவினர்களான அப்துல் சமத், அஸ்லாம், ஆதாம் உள்ளிட்ட 4  பேரும் செஞ்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இந்த கொலைவெறி தாக்குதல் தொடர்பாக புகார் அளிக்கப்பட்டும் தாக்குதல் நடத்தியவர்கள், திமுக அமைச்சர் செஞ்சி மஸ்தானின் தீவிர ஆதரவாளர்கள் என்பதால் செஞ்சி போலீசார் வழக்குப்பதிவு செய்யாமல் இருந்து வந்தனர். இது தொடர்பாக ஏபிபி நாடு செய்தி வெளியிட்ட நிலையில் தற்போது மீனம்பூர் ஊராட்சி மன்ற தலைவரான திமுகவைச் சேர்ந்த முன்வர் அலி பாஷா, அவரது மகன்களான லியாகத் அலி, அன்வர் மற்றும் அவரது ஆதரவாளர்களான அஸ்கர், உமரான், அர்பான், விர்பான் உள்ளிட்ட 7 பேர் மீது செஞ்சி காவல் நிலைய போலீசார் அவசர, அவசரமாக வழக்குப்பதிவு செய்தனர்.

இதனையடுத்து திமுக ஊராட்சி மன்ற தலைவர் முன்வர் அலி பாஷா, அவரது மகன் லியாகத் அலி உள்ளிட்ட 2 பேரை கைது செய்து செஞ்சி காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று தற்போது போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இவ்வழக்கில் தலைமறைவாக இருந்து வரும் மற்ற 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

உங்கள் கண்முன்னே நடக்கும் அநியாயங்களைத் தட்டிக் கேட்கத் தயக்கமாக இருக்கிறதா? காலங்காலமாக மாறவே மாறாத ஒன்றை, நாம் என்ன மாற்றத்தைக் கொண்டு வந்துவிட முடியும் என்று மலைப்பாக இருக்கிறதா?

என்ன செய்ய வேண்டும்?

நீங்கள்  ABP NADU-ன் 6382219633 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு, புகைப்படங்களுடன் பிரச்சினைகள் குறித்து சில வரிகளில் அனுப்பி வைக்கலாம். வீடியோ எடுத்தும் பிரச்சினைகளைப் பேசி அனுப்பலாம். pugarpetti@abpnetwork.com என்ற இ-மெயில் முகவரிக்கும் அனுப்பலாம்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர.

யூடியூபில் வீடியோக்களை காண.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Seeman : கொடுத்த காசிற்கு கூவ வேண்டும்! பிரசாந்த் கிஷோரை தாக்கி பேசிய சீமான்
Seeman : கொடுத்த காசிற்கு கூவ வேண்டும்! பிரசாந்த் கிஷோரை தாக்கி பேசிய சீமான்
Seeman:
Seeman: "கூட்டணி தேவைக்கு சொல்றவங்க கூத்து.." விஜய்யை விளாசித் தள்ளிய சீமான்
அம்மா பாட.. அப்பா இயக்க.. விஜய் ஆட்டம் போட்ட பாட்டு என்ன தெரியுமா?
அம்மா பாட.. அப்பா இயக்க.. விஜய் ஆட்டம் போட்ட பாட்டு என்ன தெரியுமா?
AFG vs ENG:
AFG vs ENG: "ஆப்பு ஸ்பெஷலிஸ்ட் ஆப்கானிஸ்தான்.." ஐசிசி வரலாற்றை பாருங்க ஜி..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

கண்டுகொள்ளாத EPS? விழாவுக்கு வராத தங்கமணி! அதிமுகவில் மீண்டும் சிக்கல்Selvaperunthagai | ”செ.பெருந்தகைய மாத்துங்க... காங். கட்டப்பஞ்சாயத்து கமிட்டியா?” டெல்லிக்கு படையெடுத்த நிர்வாகிகள்! | Congress”ரூ.12,000 வச்சுக்கோங்க” கையில் கொடுத்த மாணவி! பூரித்து போன அமைச்சர்Amman Arjunan MLA: வருமானத்திற்கு அதிகமாக சொத்து!  எம்எல்ஏ வீட்டில் ரெய்டு! எஸ்.பி.வேலுமணிக்கு செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Seeman : கொடுத்த காசிற்கு கூவ வேண்டும்! பிரசாந்த் கிஷோரை தாக்கி பேசிய சீமான்
Seeman : கொடுத்த காசிற்கு கூவ வேண்டும்! பிரசாந்த் கிஷோரை தாக்கி பேசிய சீமான்
Seeman:
Seeman: "கூட்டணி தேவைக்கு சொல்றவங்க கூத்து.." விஜய்யை விளாசித் தள்ளிய சீமான்
அம்மா பாட.. அப்பா இயக்க.. விஜய் ஆட்டம் போட்ட பாட்டு என்ன தெரியுமா?
அம்மா பாட.. அப்பா இயக்க.. விஜய் ஆட்டம் போட்ட பாட்டு என்ன தெரியுமா?
AFG vs ENG:
AFG vs ENG: "ஆப்பு ஸ்பெஷலிஸ்ட் ஆப்கானிஸ்தான்.." ஐசிசி வரலாற்றை பாருங்க ஜி..!
"ஒரு சீட்டு கூட குறையாது.. கவலைப்படாதீங்க" தமிழக மக்களுக்கு வாக்குறுதி அளித்த அமித் ஷா!
Tamilnadu Roundup: 10 மணி வரை தமிழ்நாட்டில் நடந்த பரபர சம்பவங்கள்- லிஸ்ட் இதுதான்!
Tamilnadu Roundup: 10 மணி வரை தமிழ்நாட்டில் நடந்த பரபர சம்பவங்கள்- லிஸ்ட் இதுதான்!
Rasipalan Today: இன்றைய நாள் எப்படி இருக்கும்? உங்களுக்கான ராசிபலன் இங்கே!
Rasipalan Today: இன்றைய நாள் எப்படி இருக்கும்? உங்களுக்கான ராசிபலன் இங்கே!
Today Power Shutdown Tamilnadu ; தமிழகத்தில் இன்று ( 27.02.25 ) மின்தடை ஏற்படும் இடங்கள்
Today Power Shutdown Tamilnadu ; தமிழகத்தில் இன்று ( 27.02.25 ) மின்தடை ஏற்படும் இடங்கள்
Embed widget