The Gray Man Review: தனுஷின் ஹாலிவுட் எண்ட்ரி.. மிரட்டும் சண்டைக்காட்சிகள்.. எப்படி வந்திருக்கிறது தி கிரே மேன்..?
The Gray Man Review Tamil: ரூசோ சகோதரர்கள் இயக்கத்தில் ரையான் கோஸ்லிங், கிறிஸ் எவன்ஸ், தனுஷ் நடிப்பில் வெளியாகியிருக்கும் தி கிரே மேன் படம் எப்படி இருக்கிறது என்பதை பார்க்கலாம்.
russo brothers
Ana de Armas, with Regé-Jean Page, Billy Bob Thornton, Jessica Henwick, Dhanush, Wagner Moura and Alfre Woodard. Based on the novel The Gray Man by Mark Greaney, the screenplay is by Joe Russo, Christopher Markus and Stephen McFeely.
ரூசோ சகோதரர்கள் இயக்கத்தில் ரையான் கோஸ்லிங், கிறிஸ் எவன்ஸ், தனுஷ் நடிப்பில் வெளியாகியிருக்கும் தி கிரே மேன் படம் எப்படி இருக்கிறது என்பதை பார்க்கலாம்.
கதையின் கரு என்ன?
ஜெயிலில் இருக்கும் ரையன் கோஸ்லிங், சிஐஏவின் வேலை ஒன்றுக்காக அழைக்கப்படுகிறார். அங்கு அவருக்கு அவர் செய்து முடிக்க வேண்டிய வேலை ஒன்று கொடுக்கப்படுகிறது. அந்த வேலை கிட்டத்தட்ட முடியும் வேளையில் சில உண்மைகள் வெளியாகின்றன.
தொடர்ந்து அவரது கையில் சிஐஏவுக்குள் நடக்கும் தவறுகள் அடங்கிய ஆதாரம் ஒன்றும் கிடைக்கிறது. இதனை தெரிந்த கொண்ட கும்பல் ஒன்று, அந்த ஆதாரத்தையும், ரையன் கோஸ்லிங்கையும் தீர்த்துக்கட்ட முடிவு செய்கிறது. அந்த கும்பலிடம் இருந்து ரையன் கோஸ்லிங் எப்படி தப்பித்தார்..? அவரின் கையில் இருந்த ஆதாரம் என்னவானது என்பதே தி கிரே மேனின் கதை
படத்தின் ட்ரைவிங் ஃபோர்சாக இருப்பது சண்டைக்காட்சிகதான். பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டிருக்கும் சண்டைக்காட்சிகள் புருவங்களை விரிய வைக்கின்றன. இந்தப்படத்தின் மூலம் ஹாலிவுட்டில் அறிமுகமாகியுள்ள தனுஷின் கதாபாத்திரம் ஆரம்பத்தில் வில்லன் போல வந்து பின்பு திருந்துவது போல வடிவமைக்கப்பட்டிருக்கிறது. படத்திலும் தமிழனாகவே வருகிறார் தனுஷ்.
View this post on Instagram
சண்டைக்காட்சிகளிலும் ஹாலிவுட் நடிகர்களுக்கு இணையாக நடித்து அசத்தியிருக்கிறார். குறிப்பாக படத்தில் கிறிஸ் எவன்ஸ் தனுஷை ‘ஹலோ மை செக்ஸி தமிழ் ஃப்ரண்ட்’ என்று கூறுவதும், நாயகன் ஒரு காட்சியில், நாயகன் தனுஷை ‘ பொடி பையன் என்று கூறுவதும் ரசிக்கும் படியாக அமைந்திருக்கிறது. கொஞ்சம் நேரம் வந்தாலும் அழுத்தமான நடிப்பை கொடுத்திருக்கிறார் தனுஷ். ரூசோ சகோதரர்களும் தனுஷிற்கு நடிப்பதற்கான ஸ்பேசை கொடுத்திருக்கின்றனர்.
ரையான் கோஸ்லிங், கிறிஸ் எவன்ஸ் இருவருக்கும் சமமான ஸ்பேஸ் கொடுக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு இடையேயான காட்சிகள் மிரட்டலாக வந்துள்ளன. படத்தின் திரைக்கதை போராடிக்கமால் நகர்ந்தாலும் ஹாலிவுட்டுக்கே உரித்தான டெம்ப்ளேட்டடில் படம் அமைந்திருப்பது, புதிதாக ஏதும் இல்லையா என்ற கேள்வியை எழுப்புகிறது. ஸ்டீஃபன் வின்டன் ஒளிப்பதிவு அபாரம். ஆக்ஷன் காட்சிகளில் அவரது கேமாரா புகுந்து விளையாடுகிறது. ‘தி கிரே மேன்’ நாவலை தழுவி எடுக்கப்பட்டுள்ள இந்தப்படத்தை நெட்ஃபிளிக்ஸில் தமிழிலும் பார்க்கலாம்.