Phir Aayi Hasseen Dillruba Movie Review: விறுவிறு நெட்ப்ளிக்ஸ் த்ரில்லர்.. டாப்ஸி, விக்ரம் மாஸியின் பிர் ஆயி ஹசீன் தில்ரூபா எப்படியிருக்கு?
‘Phir Aayi Hasseen Dillruba’ Movie review : காதலனை கொன்றுவிட்டு தப்பிக்கும் ராணியும் (டாப்ஸி), ரிஷுவும் (விக்ரம் மாஸி) டெல்லியின், ஆக்ராவில் அடையாளங்களை மாற்றிக்கொண்டு வாழ்கிறார்கள்..
Jayprad Desai
Taapsee Pannu, Vikrant Massey, Sunny Kaushal
Netflix
‘Phir Aayi Hasseen Dillruba’ Movie review : டாப்ஸியும், விக்ரம் மாஸியும் நடித்து மாஸ் வரவேற்பைப் பெற்ற ஹசீன் தில்ரூபாவின் இரண்டாம் பாகமான பிர் ஆயி ஹசீன் தில்ரூபா நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாகியுள்ளது. முதல் பாகத்தை கனிகா தில்லோன் எழுதி, வினி மேத்யூ இயக்கியிருந்த நிலையில், இரண்டாம் பாகத்தையும் கனிகா தில்லோன் எழுதி, ஜெய்பிரத் தேசாய் இயக்கியிருக்கிறார்.
பிரச்சனை கொடுக்கும் ராணியின் (டாப்ஸி) காதலன் நீலைக் கொன்றுவிட்டு, ஜ்வாலாபூரில் இருந்து ஆக்ராவில் தங்களை அடையாளங்களை மறைத்துக்கொண்டு வாழும் ராணிக்கும், கணவன் ரிஷுவுக்கும் (விக்ரம் மாஸி) தாய்லாந்துக்குச் சென்று மகிழ்ச்சியாக வாழவேண்டும் என்பதுதான் இறுதி இலக்கு. திருமணத்துக்கு பின் வரும் காதல்.. வில்லனாய் மாறும் காதலன்.. டாக்ஸிக் காதலனிடம் இருந்து மனைவியைக் காப்பாற்றும் கணவன் ரிஷூ..
சமூகம் வரிந்துகட்டிக்கொண்டு கிசுகிசுக்கும் வழக்கமான உறவுச்சிக்கலில் பெண்ணை மட்டும் மோசமாக காட்டி ஒப்பாரி வைக்காமல், இயல்பாக நகர்கிறது பிர் ஆயி ஹசீன் தில்ரூபா.
சந்தித்த ஏமாற்றங்களையும் தாண்டி, மரியாதையை குலைக்காமல் நேசிக்கும் ரிஷுவின் மீது, ராணிக்கு வரும் காதலுக்கு, சுப்ரமணியபுரம் பிஜிஎம்மை எடிட் செய்து இன்ஸ்டா ரீல்ஸில் உலவ விடுகிறார்கள் இன்ஸ்டாவாசிகள்.
த்ரில்லர் கதைகளின் பிதாமகனாக கருதப்படும் தினேஷ் பண்டிட்டின் த்ரில்லர் பாணிகளைப் பயன்படுத்தி, மனைவியை பயமுறுத்தும் நீலைக் கொன்றுவிட்டு, இறந்துவிட்டதாக நினைப்பதற்காக கையை வெட்டிப்போட்டு போகும் கணவன் ரிஷுதான், ராணிக்கு உயிர். செய்த கொலையில் இருந்து தப்பித்து தாய்லாந்து போவதுதான் அந்த ஜோடியின் இலக்கு. சந்தேகத்துடன் அலையும் போலீஸ்காரர் கிஷோரிடமும், மோண்ட்டு சாச்சாவிடமும் இந்து தப்பித்து, இந்த ஜோடி வாழ்ந்ததா என்பதுதான் கதை.
போலீஸிடம் இருந்து தப்பிப்பதற்காக தன்னை உருகி உருகி காதலிக்கும் ’அப்பாவி’ அபிமன்யுவை மணந்துகொள்ளும் ராணிக்கு, தன்னை விட பெரிய கொலைகாரனிடம் மாட்டியிருப்பது பின்புதான் புரிகிறது. தினேஷ் பண்டிட் கதையின் எதிர்பாராத திருப்பங்களுடன், படம் முழுக்க ட்விஸ்ட்டுகளுடன் நகரும் இந்த நெட்ப்ளிக்ஸ் ட்ராமா, வார இறுதியில் பொழுதுபோக்குவதற்கான சிறந்த ஆப்ஷன். டாப்ஸியும், விக்ரமும் நடிப்பில் பின்னியெடுக்க, பார்வையிலும் சிரிப்பிலுமே திகில் கொடுக்கிறார் சன்னி கெளஷல்.
சீரியல் கில்லர், அமானுஷ்யம் எனும் த்ரில்லர் வகைகளையே பெரும்பாலும் கையாலும் பாலிவுட், காதலுக்கான ரிஸ்க்கில் இறங்கும் ராணி, ரிஷுவின் சாகசங்களை த்ரில்லாக்கியிருப்பது புதுசு.
நல்ல வீக்கெண்ட் Watch.