மேலும் அறிய

Irugapatru Review: “திருமணமானவர்கள்.. காதலிப்பவர்கள் பார்க்க வேண்டிய படம்” .. இறுகப்பற்று படத்தின் முழு விமர்சனம் இதோ..!

Irugapatru Movie Review in Tamil:விவாகரத்து, காரணம் இல்லா சண்டை, நிராகரிக்கப்படும் எதிர்பார்ப்பு , பிரச்சினையை தீர்க்க வழி என அனைத்து நிகழ்வுகளுக்கும் இறுகப்பற்று படம் பதில் சொல்கிறது. 

Irugapatru Movie Review in Tamil:  யுவராஜ் தயாளன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, ஸ்ரீ, விதார்த், ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபர்ணதி, சானியா ஐயப்பன், மனோபாலா உள்ளிட்ட பலரும் நடித்துள்ள படம் “இறுகப்பற்று” (Irugapatru). ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ள இப்படம் அக்டோபர் 6 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. ஏற்கனவே இந்த படத்தின் ட்ரெய்லர் ரசிகர்களிடையே மிகப்பெரிய அளவில் கவனம் பெற்றிருந்த நிலையில் இறுகப்பற்று படத்தின் விமர்சனத்தை (Irugapatru Movie Review) இங்கு காணலாம். 

படத்தின் கதை 

காலங்கள் மாறிவிட்ட இவ்வுலகில் காதல் எவ்வளவு எளிது என்ற நிலையை அடைந்து விட்டதோ, அதேபோல் பிரேக் அப், விவாகரத்து உள்ளிட்ட சம்பவங்களும் சர்வ சாதாரண ஒன்றாக மாறிவிட்டது. வார்த்தைப்போர் தொடங்கி உடல் ரீதியான தாக்குதல், தம்பதிகளுக்குள் சண்டையே வராமல் இருப்பது உள்ளிட்ட பல காரணங்களை சொல்லி விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தை நாடுபவர்களின் செய்தியை நாம் தினமும் கேட்டுக் கொண்டு தான் இருக்கிறோம். இவை அனைத்திற்கும் மிக அழகாக விடை சொல்லியிருக்கிறது “இறுகப்பற்று” படம்..!

விக்ரம் பிரபு - ஷ்ரத்தா ஸ்ரீநாத், விதார்த் - அபர்ணதி, ஸ்ரீ - சானியா ஐயப்பன் ஆகியோர் வெவ்வேறு வாழ்க்கை நிலையை வாழும் தம்பதியினர். திருமண பிரிவு பிரச்சினைகளுக்கு கவுன்சிலிங் கொடுக்கும் மருத்துவராக வரும் ஷ்ரத்தாவுடன் கணவர் விக்ரம் பிரபுவுக்கு சண்டையே வந்தது இல்லை. அதையே ஒரு ஏக்கமாக கொண்டு வாழும் நிலையில் இருவருக்குள்ளும் பிரச்சினை வெடிக்கிறது.

அதற்கு எதிர்மாறாக மனைவி அபர்ணதியின் உடல் எடை தொடங்கி வாய் துர்நாற்றம் வரை அவருடன் நெருக்கமாக இருக்க விடாமல் பல பிரச்சினைகள் காரணமாக அமைவதால் விவாகரத்து கேட்கும் விதார்த், தான் சொல்வது தான் சரி என கூறி மனைவி சானியா ஐயப்பனை மட்டமாக மதிக்கும் ஸ்ரீ ஆகிய 3 பேரை சுற்றித்தான் இந்த கதை அமைக்கப்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் இந்த 3 தம்பதியினர் உறவில் அதிகப்படியான விரிசல் ஏற்படுகிறது. அது எதனால்? இத்தகைய பிரச்சினைகளுக்கு என்னதான் தீர்வு? என்பதை கவிதை பாணியில் அழகாக சொல்லியிருக்கிறார் யுவராஜ் தயாளன். 

பிரச்சினைக்கான அர்த்தமே தெரியாமல் பிரிவு 

தொழில்நுட்பங்கள் பெருகிவிட்ட இன்றைய காலக்கட்டத்தில்  அடுத்தவர் முகத்தை பார்த்து கூட பேச முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். இதனால் அனைத்து விதமான உறவுகளிலும் விரிசல் என்பது சர்வ சாதாரணமாக ஏற்படுகிறது.  இதில் குடும்பங்களில் தம்பதியினர் தொடங்கி காதலிக்கும் இளம் வயதினர் வரையிலானோரை பற்றி சொல்லவே வேண்டாம். இதனால் இருபாலரும் எதிர்கொள்ளும் உளவியல் மற்றும் உள்ளம் ரீதியிலான சிக்கல்கள் அதிகம். 

Irugapatru Review: “திருமணமானவர்கள்.. காதலிப்பவர்கள் பார்க்க வேண்டிய படம்” .. இறுகப்பற்று படத்தின் முழு விமர்சனம் இதோ..!

விவாகரத்து, காரணமே இல்லாமல் போடப்படும் சண்டை, எதிர்பார்ப்பை தூண்டி விட்டு பின்பு அது நிராகரிக்கப்படும் போது ஏற்படும் வலி, பிரச்சினை ஏற்பட்டால் அதனை எப்படி தீர்க்க வேண்டும் என அனைத்து விதமான நிகழ்வுகளுக்கும் இப்படம் பதில் சொல்கிறது. 

நடிப்பு எப்படி? 

தொடர் தோல்விகளால் துவண்டு கிடந்த விக்ரம் பிரபுவுக்கு மட்டுமல்லாமல் விதார்த், ஸ்ரீ ஆகிய அனைவருக்கும் இப்படம் கம்பேக் கொடுத்துள்ளது. ஹீரோவுக்கு சற்றும் சளைக்காமல் ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபர்ணதி, சானியா ஐயப்பன் என 3 ஹீரோயின்களும் கொடுத்த கேரக்டரை சிறப்பாக செய்துள்ளார்கள். இந்த படத்தில் 3 தம்பதியினர் இடையே ஏற்படும் பிரச்சினைகளில் அவர்களின் கேரக்டர்களில் நம்மை நாமே பொருந்தி பார்க்க முடிவதால் இயக்குநர் யுவராஜ் தயாளன் உட்பட ஒட்டுமொத்த குழுவும் ஜெயித்துள்ளது.

படம் எப்படி?

இறுகப்பற்று படத்தை கவிதைப் போல அழகாக அடுக்கி கதை சொல்லியிருக்கிறார் யுவராஜ் தயாளன். தம்பதியினர் இடையேயான பிரச்சினைகளை திரையில் காட்டி அதற்கு தீர்வு சொல்லும் போது பலருக்குள் இறுகப்பற்று படம் நிச்சயம் மாற்றத்தை நிகழ்த்தும் என்பதே உண்மை. நிஜத்தில் இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு என லாஜிக் பார்க்காமல், கொஞ்சம் யோசித்து பார்த்தால் வாழ்க்கையில் நாம் செய்யும் சின்ன தவறுகள் பெரிய மகிழ்ச்சியை சீர்குலைக்கும் என்ற உண்மை புரியும். 

ஈகோ மட்டும் கணவன் -மனைவி , காதலன் - காதலிக்குள் பிரச்சினையை ஏற்படுத்தாது. என்னென்ன காரணங்கள் இங்கு பிரிவுக்கான ஆணிவேராக உள்ளது என தெளிவாக சொல்லப்பட்டுள்ளது. வசனங்களும் லைக்ஸ் போட வைக்கிறது.  விக்ரம் பிரபு - ஷ்ரத்தா ஸ்ரீநாத் இடையேயான இடைவேளைக்கு முன்பான உரையாடல் உள்ளிட்ட பல காட்சிகள் ரசித்து கைதட்ட வைக்கிறது. ஜஸ்டின் பிரபாகரன் இசையில் பாடல்கள் காட்சிகளை கடத்த பயன்படுத்தப்பட்டாலும் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. ஆனால் பின்னணி இசையில் வழக்கம்போல மேஜிக் தான். 

அதேசமயம் பெண்கள் மீது தான் தவறு, ஆண்கள் தான் பிரச்சினைக்கு காரணம் என கூறாமல், இரு தரப்பிலும் சரிசமமான பார்வை அணுகப்பட்டுள்ளது. 

இறுகப்பற்று படத்தின் மைனஸ் என பார்த்தால் மெதுவாக நகரும் திரைக்கதை தான். மற்றபடி இறுகப்பற்று படம் திருமணம் ஆனவர்கள், ஆகப்போகிறவர்கள், காதலிப்பவர்கள் குடும்பத்துடன் பார்த்து ரசிக்ககூடிய சிறந்த படமாகும்..!

View More
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Weather Report: நாளை உருவாகும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி; 24-ம் தேதி வரை சம்பவம் இருக்கு; வானிலை மைய தகவல் என்ன.?
நாளை உருவாகும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி; 24-ம் தேதி வரை சம்பவம் இருக்கு; வானிலை மைய தகவல் என்ன.?
IND vs BAN: திக்.. திக்..! சூப்பர் ஓவரில் 0 ரன்.. வங்கதேசத்திடம் இறுதிப்போட்டி வாய்ப்பை இழந்த இந்தியா!
IND vs BAN: திக்.. திக்..! சூப்பர் ஓவரில் 0 ரன்.. வங்கதேசத்திடம் இறுதிப்போட்டி வாய்ப்பை இழந்த இந்தியா!
Trump Ukraine Peace Plan: ட்ரம்ப்பின் 28 அம்ச அமைதித் திட்டம்; ‘வேதனை தரும் சலுகைகள்‘-ஜெலன்ஸ்கி; என்ன நிபந்தனைகள்.?
ட்ரம்ப்பின் 28 அம்ச அமைதித் திட்டம்; ‘வேதனை தரும் சலுகைகள்‘-ஜெலன்ஸ்கி; என்ன நிபந்தனைகள்.?
பொம்மை முதல்வராக மாறுகிறாரா நிதிஷ்குமார்? முக்கிய துறைகளை கைவசப்படுத்திய பாஜக!
பொம்மை முதல்வராக மாறுகிறாரா நிதிஷ்குமார்? முக்கிய துறைகளை கைவசப்படுத்திய பாஜக!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

சித்தராமையாவுக்கு ஆப்பு? டெல்லியில் குவிந்த MLA-க்கள்! DK சிவக்குமார் ப்ளான்
விழுந்து நொறுங்கிய தேஜஸ்! பறிபோன விமானி உயிர்! பதறவைக்கும் வீடியோ
Madurai School Bus Fire | திடீரென தீப்பற்றிய SCHOOL BUSHERO-வாக மாறிய டிரைவர் மதுரையில் பரபரப்பு
cyclone season starts |
Divya Bharathi Angry | ’’என்னையே தப்பா பேசுறியா வேடிக்கை பார்க்குறவன் ஹீரோவா’’பொளந்த திவ்யபாரதி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather Report: நாளை உருவாகும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி; 24-ம் தேதி வரை சம்பவம் இருக்கு; வானிலை மைய தகவல் என்ன.?
நாளை உருவாகும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி; 24-ம் தேதி வரை சம்பவம் இருக்கு; வானிலை மைய தகவல் என்ன.?
IND vs BAN: திக்.. திக்..! சூப்பர் ஓவரில் 0 ரன்.. வங்கதேசத்திடம் இறுதிப்போட்டி வாய்ப்பை இழந்த இந்தியா!
IND vs BAN: திக்.. திக்..! சூப்பர் ஓவரில் 0 ரன்.. வங்கதேசத்திடம் இறுதிப்போட்டி வாய்ப்பை இழந்த இந்தியா!
Trump Ukraine Peace Plan: ட்ரம்ப்பின் 28 அம்ச அமைதித் திட்டம்; ‘வேதனை தரும் சலுகைகள்‘-ஜெலன்ஸ்கி; என்ன நிபந்தனைகள்.?
ட்ரம்ப்பின் 28 அம்ச அமைதித் திட்டம்; ‘வேதனை தரும் சலுகைகள்‘-ஜெலன்ஸ்கி; என்ன நிபந்தனைகள்.?
பொம்மை முதல்வராக மாறுகிறாரா நிதிஷ்குமார்? முக்கிய துறைகளை கைவசப்படுத்திய பாஜக!
பொம்மை முதல்வராக மாறுகிறாரா நிதிஷ்குமார்? முக்கிய துறைகளை கைவசப்படுத்திய பாஜக!
Tejas Accident: துபாய் வானில் சாகசம்; விழுந்து நொறுங்கிய இந்திய தேஜஸ் போர் விமானம்; விமானி உயிரிழந்த சோகம்
துபாய் வானில் சாகசம்; விழுந்து நொறுங்கிய இந்திய தேஜஸ் போர் விமானம்; விமானி உயிரிழந்த சோகம்
கிரெடிட் கார்டு EMI: வாங்க ஆசையா? ஜாக்கிரதை! இந்த ரகசியங்களை தெரிஞ்சிக்கோங்க!
கிரெடிட் கார்டு EMI: வாங்க ஆசையா? ஜாக்கிரதை! இந்த ரகசியங்களை தெரிஞ்சிக்கோங்க!
Modi Vs Congress: பிரதமர் மோடியின் தென்னாப்பிரிக்க(G20) பயணம்; காங்கிரஸ் கிண்டல் - என்ன இப்படி சொல்லிட்டாங்க.?!
பிரதமர் மோடியின் தென்னாப்பிரிக்க(G20) பயணம்; காங்கிரஸ் கிண்டல் - என்ன இப்படி சொல்லிட்டாங்க.?!
தெற்கு ரயில்வேயின் புதிய சாதனை! பார்சல் சேவை: வர்த்தகர்களுக்கு ஒரு பொன்னான வாய்ப்பு!
தெற்கு ரயில்வேயின் புதிய சாதனை! பார்சல் சேவை: வர்த்தகர்களுக்கு ஒரு பொன்னான வாய்ப்பு!
Embed widget