மேலும் அறிய

Kalaga Thalaivan Review: கலகத்தை உண்டாக்கியதா ‘கலகத்தலைவன்’ - உதய்க்கு கிடைத்தது வெற்றியா.. தோல்வியா? - விமர்சனம்!

Kalaga Thalaivan Review in Tamil: கலகத்தலைவன் படத்தின் ஆக்‌ஷன் அவதாரத்தை முயற்சி செய்து பார்த்திருக்கிறார் உதய்.

Kalaga Thalaivan Review: நடிகர் உதயநிதி நடிப்பில், இயக்குநர் மகிழ்திருமேனி இயக்கத்தில் இன்று வெளியாகியிருக்கும் திரைப்படம் ‘கலகத்தலைவன்’.

கதையின் கரு: 

தனியார் ஆட்டோமொபைல் நிறுவனமொன்று, கனரக வாகனமொன்றை சந்தையில் அறிமுகப்படுத்த இருப்பதாக அறிவிக்கிறது. ஆனால், வாகனம் அறிமுகமாகும் இறுதி நேரத்தில், அந்த வாகனத்தில் குறை ஒன்று இருப்பது  தெரியவர, அதை மறைப்பதற்கான முயற்சிகள் நடக்கிறது. ஆனால், இந்த தகவல் வெளியே வந்து விட, நிறுவனத்தின் உரிமையாளர், கடந்த காலங்களில்தான் தொழிலில் சறுக்கிய சம்பவங்களை புள்ளிகளாக இணைத்து பார்க்கிறார்.

Kalaga Thalaivan Review: கலகத்தை உண்டாக்கியதா  ‘கலகத்தலைவன்’ - உதய்க்கு கிடைத்தது வெற்றியா.. தோல்வியா? - விமர்சனம்!

அந்தப்புள்ளிகள் அவருக்கு, நிறுனவத்தின் ரகசியங்களை இங்கு இருப்பவர்கள்தான் வெளியே கொடுக்கிறார்கள் என்பதை தெரிய வைக்கிறது. இதனையடுத்து அவர்களை கண்டுபிடிக்க, கொலைகள் செய்வதன் மீது கொள்ளைப்பிரியம் கொண்ட ஆரவை நியமிக்கிறார். அதன் பின்னர் ஆரவ் ஆடும் வேட்டையும், இந்த வேட்டையில் உதய் சிக்கினாரா..இல்லையா? என்பதற்கான பதிலை, கார்ப்ரேட் ரகசியங்கள் வெளியே செல்வதால் சாமானியன் எதிர்கொள்ளும் பிரச்னைகளையோடு சொன்னால், அதுதான் கலகத்தலைவனின் கதை.

Kalaga Thalaivan Review: கலகத்தை உண்டாக்கியதா  ‘கலகத்தலைவன்’ - உதய்க்கு கிடைத்தது வெற்றியா.. தோல்வியா? - விமர்சனம்!

கலகத்தலைவன் படத்தின் ஆக்‌ஷன் அவதாரத்தை முயற்சி செய்து பார்த்திருக்கிறார் உதய். ஆனால், அவரின் உடல்மொழியும், அவர் வெளிப்படுத்தும் நடிப்பும், அவர் ஏற்றுக்கொண்ட கதாபாத்திரத்தின்தன்மைக்கு அந்நியமாக செல்கிறதோ என்ற கேள்வி எழுப்புகிறது. இன்னும் மெனக்கெட்டு இருக்க வேண்டும் உதய். படம் பெரும் பலம் ஆரவ். ஆரம்பித்தது முதல் இறுதிகாட்சிக்கு முன்னர் வரை படம் ஆரவ் கைகளிலேயே இருக்கிறது. அவரது முரட்டு உடம்பும், இரக்கத்தை வெளிப்படுத்தாத கண்களும், அவர் தொடர்பான இன்வெஸ்டிகேஷன் சம்பந்தமான காட்சிகளும் நம்மை மிரள வைக்கின்றன. கதாநாகியாக, நிதி அகர்வால். உதய்க்கும், அவருக்குமான காதலில் பெரிய கனெக்ட் இல்லை. இதனால் அவர்களின் எமோஷனும் மக்களுக்கு கனெக்ட் ஆகவில்லை. இதரகதாபாத்திரங்களும் அதே ரகமே. 

Kalaga Thalaivan Review: கலகத்தை உண்டாக்கியதா  ‘கலகத்தலைவன்’ - உதய்க்கு கிடைத்தது வெற்றியா.. தோல்வியா? - விமர்சனம்!

மகிழ் திருமேனியின் க்ரைம் த்ரில்லர் ஜானரிலேயே இந்தப்படமும் வெளியாகி இருக்கிறது. ஆனால் இதில் அவர் புகுத்தியிருக்கும் புதுமை, கார்ப்ரேட் ரகசிய கசிவு. கார்ப்ரேட் நிறுவனங்களுக்கு இடையே நடக்கும் போட்டியால், அவர்களின் ரகசியங்கள் வெளியே விற்கப்படுவதும், அதனால் சாமானியன் எதிர்கொள்ளும் அவலநிலையும், அதற்கு துணைபோகும் அரசும் என கார்ப்ரேட் நிறுவனத்தின் இன்னொரு கருப்பு பக்கத்தை திரையில் காண்பித்திருக்கிறார்.

படம் ஆரம்பித்தது முதல், இறுதிவரை புரோட்டகனிஸ்டை (முக்கிய கதாபாத்திரம்) ஆரவ் பிடிக்க முயற்சி எடுக்கும் சம்பந்தமான ஒவ்வொரு காட்சியும் சுவாரஸ்யமாக இருந்தது நம்மை போராடிக்கமால் பார்த்துக்கொண்டது. ஆக்‌ஷனில் அதுவே. ஆக்‌ஷன் என்றால் குறைந்தது 5 பேரை அடிக்க வேண்டும் என்று இருக்கும் எழுதப்படாத சினிமா விதியை உடைத்து, ரியல் ஆக்‌ஷனை கொடுத்ததும் சிறப்பு.

ஆனால், ஆரவ் கதாபாத்திரத்தை அவ்வளவு நேர்த்தியாக கையாண்ட மகிழ், உதய்நிதியின் கதாபாத்திரத்தில் கோட்டை விட்டது ஏனோ? . ஸ்ரீகாந்த் தேவாவின் இசையில் வழக்கம்போல பாடல்கள் கவனம் ஈர்க்கவில்லை. பின்னணி இசையிலும் புதுமை இல்லை. கலகத்தலைவனின் திரைக்கதை சுவாரசியமாக இருந்தாலும்,மகிழ் திருமேனியின் படங்களில் இயல்பாகவே இல்லாத கொண்டாட்டம், நம்மையும் அதை  இயல்பாகவே கடக்க வைத்திருக்கிறது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

PM Modi: ”நான் மனிதன்தான்; கடவுள் இல்லை.” பிரதமர் மோடி பாட்காஸ்ட் உரையில் சொன்னது என்ன?
PM Modi: ”நான் மனிதன்தான்; கடவுள் இல்லை.” பிரதமர் மோடி பாட்காஸ்ட் உரையில் சொன்னது என்ன?
Erode East By Election: ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல்; தி.மு.க.வா? காங்கிரசா? நாளை வேட்பாளர் அறிவிப்பு?
Erode East By Election: ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல்; தி.மு.க.வா? காங்கிரசா? நாளை வேட்பாளர் அறிவிப்பு?
Donald Trump: தப்பித்த டொனால்டு டிரம்ப்: அதிபர் பதவிக்கான சிக்கலில் இருந்த வழக்கில் விடுவிப்பு.!
தப்பித்த டொனால்டு டிரம்ப்: அதிபர் பதவிக்கான சிக்கலில் இருந்த வழக்கில் விடுவிப்பு.!
Actor Ajith:
Actor Ajith: "இனி நடிக்கமாட்டேன்" அஜித் தந்த ஷாக்! பேரதிர்ச்சியில் ரசிகர்கள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Taiwan Couple Marriage in India : அம்மி மிதித்து..அருந்ததி பார்த்து திருமணம் செய்த தைவான் தம்பதிTirupati Stampede |  Pawan  VS Jagan Mohan டவுன் டவுன் ஜெய் ஜெய் கோஷம் போர்களமான திருப்பதி HOSPITALSeeman Periyar Issue : Vadakalai Vs Thenkalai fight : வடகலை Vs தென்கலை”யார் பெரியவா..?”களேபரமான காஞ்சிபுரம் கோயில்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PM Modi: ”நான் மனிதன்தான்; கடவுள் இல்லை.” பிரதமர் மோடி பாட்காஸ்ட் உரையில் சொன்னது என்ன?
PM Modi: ”நான் மனிதன்தான்; கடவுள் இல்லை.” பிரதமர் மோடி பாட்காஸ்ட் உரையில் சொன்னது என்ன?
Erode East By Election: ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல்; தி.மு.க.வா? காங்கிரசா? நாளை வேட்பாளர் அறிவிப்பு?
Erode East By Election: ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல்; தி.மு.க.வா? காங்கிரசா? நாளை வேட்பாளர் அறிவிப்பு?
Donald Trump: தப்பித்த டொனால்டு டிரம்ப்: அதிபர் பதவிக்கான சிக்கலில் இருந்த வழக்கில் விடுவிப்பு.!
தப்பித்த டொனால்டு டிரம்ப்: அதிபர் பதவிக்கான சிக்கலில் இருந்த வழக்கில் விடுவிப்பு.!
Actor Ajith:
Actor Ajith: "இனி நடிக்கமாட்டேன்" அஜித் தந்த ஷாக்! பேரதிர்ச்சியில் ரசிகர்கள்
நேற்று ”யார் அந்த சார்” பேட்சுடன் அதிமுக; இன்று ”இவன்தான் அந்த சார்” பலகையுடன் திமுக: பரபரப்பில் சட்டப்பேரவை
நேற்று ”யார் அந்த சார்” பேட்சுடன் அதிமுக; இன்று ”இவன்தான் அந்த சார்” பலகையுடன் திமுக: பரபரப்பில் சட்டப்பேரவை
Pongal Holidays: பொங்கலுக்கு இந்த 2 நாளும் விடுமுறை: புதுச்சேரி அரசு அறிவிப்பு
Pongal Holidays: பொங்கலுக்கு இந்த 2 நாளும் விடுமுறை: புதுச்சேரி அரசு அறிவிப்பு
Tim David: RCBடா! பிக்பாஷ் லீக்கில் பொளந்து கட்டிய டிம் டேவிட்! IPL-க்கு ட்ரெயிலரா?
Tim David: RCBடா! பிக்பாஷ் லீக்கில் பொளந்து கட்டிய டிம் டேவிட்! IPL-க்கு ட்ரெயிலரா?
விவசாயிகளே! காட்டுப்பன்றிகளை இனி சுட்டுத் தள்ளலாம் - யாருக்கு அந்த அதிகாரம்?
விவசாயிகளே! காட்டுப்பன்றிகளை இனி சுட்டுத் தள்ளலாம் - யாருக்கு அந்த அதிகாரம்?
Embed widget