Bafoon Movie Review: சிரிக்க வைக்கிறதா... சிந்திக்க வைக்கிறதா ‛பபூன்’... ரீல் பை ரீல் விமர்சனம் இதோ!
நடிகர் வைபவ் நடிப்பில் கார்த்திக் சுப்பராஜின் உதவி இயக்குநர் அசோக் வீரப்பன் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் திரைப்படம் பபூன். இந்தப்படம் எப்படி இருக்கிறது என்பதை பார்க்கலாம்.
Ashok Veerappan
Vaibhav, Anagha, Joju George, Anthakudi Ilaiyaraja, Naren, Moonar Ramesh, Tamizh,
நடிகர் வைபவ் நடிப்பில் கார்த்திக் சுப்பராஜின் உதவி இயக்குநர் அசோக் வீரப்பன் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் திரைப்படம் பபூன். இந்தப்படம் எப்படி இருக்கிறது என்பதை பார்க்கலாம்.
காரைக்குடியில் நாடகம் போட்டு பிழைப்பு நடத்தும் குமரனாக வரும் வைபவாக வரும் குமரனும், அவரது நண்பனாக வரும் முத்தையாவும் நாடகத்தை வைத்து இனி பிழைப்பு நடத்த முடியாது என முடிவு எடுத்து, வெளிநாடு போக முடிவெடுக்கிருகிறார்கள். அதற்கு பணத்தேவை ஏற்படுகிறது. அதனால் லாரி டிரைவராக குமரனும் அவருக்கு துணையாக முத்தையாவும் என இருவரும் போதைப்பொருள் கடத்தல் மன்னன் தனபாலன் கீழ் வேலைக்கு சேர்கிறார்கள்.
அவர்களது முதல் அசைமென்டிலேயே உப்புக்கு பதிலாக, போதைப்பொருளை வைத்து அனுப்புகிறது தனபால் டீம். இதனை மோப்பம் பிடிக்கும் போலீஸ் அந்த லாரியை மடக்கிப்பிடித்து இருவரையும் சிறையில் அடைக்க கொண்டு செல்லும் போது இருவரும் செல்லும் வழியிலேயே தப்பிக்கிறார்கள். தப்பித்த குமரனும், முத்த்தையாவும் என்ன ஆனார்கள்.. யார் அந்த தனபால்..? இதற்கிடையே முளைக்கும் திவ்யா உடனான குமரனின் காதல் என்ன ஆனது? உள்ளிட்டவைகளுக்கான பதில்களே பபூன் படத்தின் கதை..
நாடக கலைஞராக வரும் வைபவ், கடைசி வரை நமக்கு வைபவாகவே தெரிகிறார். பல இடங்களில் அவர் வெளிப்படுத்தும் நடிப்பு வைபவ் இன்னும் நடிப்பில் தேறவேண்டுமோ என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது. வைபவின் நண்பனாக வரும் ஆத்தங்குடி இளையராஜா ஆத்தங்குடி இளையராஜா நல்ல நடிப்பை கொடுத்து கவனம் ஈர்த்து இருக்கிறார். இலங்கை அகதியாக வரும் அனகா அந்த மக்களின் வலியையும், தன்னுள் முளைத்த காதலையும் அழகாக வெளிப்படுத்தி இருக்கிறார். இரண்டு சீன்களே வந்தாலும் மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ் அவருக்கான பாணியில் அசத்தி இருக்கிறார். இதர கதாபாத்திரங்களும் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்திற்கு நியாயம் செய்திருக்கிறது.
முதல் பாதியில் குமரனின் வாழ்கை, அவன் சந்திக்கும் பிரச்னைகள், இலங்கை மக்களின் வலி ஆகியவற்றை நன்றாக சொன்ன அறிமுக இயக்குநர் அசோக் வீரப்பன், இராண்டாம் பாதியில் குமரன் எப்படி பிரச்னைகளை கடந்து வந்தார், அவன் சந்திக்கும் அரசியல் உள்ளிட்டவற்றை இன்னும் சுவாரசியமாக சொல்லியிருக்கலாம். ஒளிப்பதிவாளர் தினேஷ் புருஷோத்தமன் இராமேஸ்வரத்தின காலை, மாலையை அழகாககாட்சிப்படுத்திருக்கிறார்.
சந்தோஷ் நாரயணன் இசை படத்தின் பெரும் பலம் என்றாலும், பின்னணி இசையில் முத்தையா கதாபாத்திரத்தின் நகைச்சுவை அடங்கி போனது ஏமாற்றம். த்ரில்லராக படம் நன்றாக இருந்தாலும் இலங்கை மக்களின் வலியையும், நாடக கலைஞர்களின் வலியையும் இன்னும் அழுத்தமாக சொல்லாதது ஏமாற்றம்.