மேலும் அறிய

World Environment Day 2023: இன்று உலக சுற்றுச்சூழல் தினம் கடைபிடிப்பு...இந்தாண்டின் கருப்பொருள் என்ன?

சுற்றுச்சூழல் தினம் இன்று கடைபிடிப்பதன் மூலம் காடுகளையும், இயற்கை வளங்களை பாதுகாக்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

சுற்றுச்சூழல்

நம்மையும் நம்மை சுற்றியிருக்கும் இயற்கையான சூழலான  மரம் , செடி , கொடி , பிற உயிர்கள் அனைத்தையும் சுற்றுச்சூழல் என அழைக்கிறோம்.18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தொழிற்புரட்சி தொடங்கி, புவி வெப்பமடைதல், காற்று, நீர் மற்றும் நிலத்தின் மாசுபாடு மற்றும் பல்லுயிர் இழப்பு போன்ற பரவலான சுற்றுச்சூழல் பாதிப்புகளை மனிதன் ஏற்படுத்த துவங்கிவிட்டான்.

சுற்றுச்சூழலை பேணி பாதுகாக்க வேண்டிய அவசியத்தை உணர்ந்து செயல்பட தவறியதன் விளைவுகளை மனிதர்கள் தற்போது அனுபவிக்க தொடங்கி விட்டனர். மரங்களுக்கும், மனிதர்களுக்கும் இடையிலான உறவு மிகவும் முக்கியமானதாகும். மனிதனின் இருப்புக்கு மரங்கள் அத்தியாவசியம் என்பதை பலரும் உணருவதில்லை. 

மரங்கள் இல்லையெனில் நாம் சுவாசிக்க காற்று கிடைக்காது. வெப்பநிலை பல மடங்கு உயரும் அபாயம் உள்ளது. அதே நேரத்தில் ஒரு பகுதியில் கடும் வறட்சி, மற்றொரு பகுதியில் கடும் வெள்ளம், சூறாவளி இயற்கை சீற்றங்கள் தொடர்ந்து கொண்டே தான் இருக்கின்றனர்.

இன்று உலக சுற்றுச்சூழல் தினம் 

இதுபோன்ற ஆபத்துக்களை எடுத்துரைக்கவும், அதைப் பாதுகாக்க மக்களை வலியுறுத்தவும்தான் சுற்றுச்சூழல் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. ஆண்டுதோறும் ஜூன் 5 ஆம் தேதி உலக சுற்றுச்சூழல் தினம் (World Environment Day)கொண்டாடப்படுகிறது.

1972ஆம் ஆண்டு சுவீடன் தலைநகரனா ஸ்ரெக்ஹோமில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் மனித குடியிருப்பும், சுற்றுச்சூழலும் என்ற வரலாற்று புகழ்மிக்க உலக மாநாட்டில் உலக சுற்றுச்சூழலின் முக்கியத்துவம், இயற்கை வளங்கள், அதன் பயன்கள் என்பன பற்றி கலந்துரையாடப்பட்டது. முடிவில் ஜூன் 5ஆம் தேதி உலக சுற்றுச் சூழல் தினமாக அறிவித்து தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. 

தீம்

இந்நிலையில், இந்த ஆண்டு உலக சுற்றுச்சூழல் தினக் (World Environment Day ) கொண்டாட்டத்திற்கான கருப்பொருள் ‘பிளாஸ்டிக் பயன்பாட்டை முடியடி’ என்பது தான். நம் அன்றாட வாழ்க்கையில் நாம் அதிக பயன்படுத்துவது பிளாஸ்டிக் பொருட்கள் தான். அத்தகைய சுற்றுச்சூழலுக்கு கெடுதலாக விளங்கும் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்கும் விதமாக இந்தாண்டு கருப்பொருள் அமைந்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் (UN) படி, ஆண்டுதோறும் 400 மில்லியனுக்கும் அதிகமான பிளாஸ்டிக் உலகம் முழுவதும் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் 50 சதவீதம் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் மற்றும் 10 சதவீதம் மட்டுமே மறுசுழற்சி செய்யப்படுகிறது. இந்த பிளாஸ்டிக் கழிவுகள் இறுதியில் ஆறுகள், ஏரிகள் மற்றும் கடல்களில் நுழைந்து கடல் வாழ் உயிரினங்களுக்கு ஆபத்தை விளைவிக்கும்.  இதனின் அடிப்படையாக கொண்டு தான் இந்தாண்டின் கருப்பொருளாக ’Beatplasticpollution' என்று உள்ளது.

நோக்கம்

பிளாஸ்டிக் போன்ற பொருட்களை பயன்படுத்துவது கடவாழ் உயிரினங்களை எந்த அளவிற்கு பாதிக்கிறது என்பது நாம் அறிந்ததே. இது மனித இடமாற்றத்திற்கு வழிவகை செய்யலாம். அதே நேரம் புவியில் உள்ள தாவரங்கள் , விலங்குகள் , பறவைகள் உள்ளிட்ட உயிரினங்கள் அழியும் அபாயமும் உள்ளது. இது மனித அழிவிற்கு வித்தாக அமையும். 

எனவே அரசுகள், வணிக நிறுவனங்கள், அரசு சாரா நிறுவனங்கள் (என்ஜிஓக்கள்) மற்றும் பொதுமக்கள் உட்பட அனைத்து தரப்பு மக்களும் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க உறுதியான நடவடிக்கைகளை எடுக்க இந்த நாள் ஒரு வாய்ப்பாகும். கழிவுகளைக் குறைப்பதன் மூலமும், ஆற்றலைப் பாதுகாப்பதன் மூலமும், சுற்றுச்சூழலுக்கு உகந்த நடைமுறைகளைச் செயல்படுத்துவதன் மூலமும் மக்கள் மேலும் நீடித்து வாழ ஊக்குவிக்கிறது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Sunita Williams: சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்?  பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்;  புதிய சிக்கல் என்ன?
சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்? பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்; புதிய சிக்கல் என்ன?
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
Rahul Gandhi: ''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Ashwin Profile: ”நான் சொடுக்கு பந்து போடணுமா?”தலையெழுத்தை மாற்றிய COACH நாயகன் அஸ்வினின் கதை..!Rahul gandhi on MP injury: ”ஆமா...தள்ளிவிட்டேன்! என்னையவே தடுக்குறீங்களா?” ஆதாரத்துடன் பேசிய ராகுல்Vijay vs Vck | வாயை திறக்காத விஜய்.. பணிய வைத்த விசிக!ரவுண்டு கட்டும் நெட்டிசன்ஸ்! tvk | vckMLA Inspection : ‘’எல்லாம் அறிவு கெட்டவனா?’’LEFT & RIGHT வாங்கிய MLA திக்குமுக்காடிய அதிகாரிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Sunita Williams: சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்?  பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்;  புதிய சிக்கல் என்ன?
சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்? பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்; புதிய சிக்கல் என்ன?
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
Rahul Gandhi: ''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
TN Rain: மழை வருமா, வராதா? ;  தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
மழை வருமா, வராதா? ; தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
"ஒரு ஆணுக்கு இரண்டு மனைவிகள்.. லிவ் இன் ரிலேஷன்ஷிப் தவறு" நிதின் கட்காரி பரபர கருத்து!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Embed widget