காதலிக்கு 11 கன்டிஷன் போட்ட காதலன்: ஒத்துவராமல் முறிந்த காதல்: வைரலான விதிகள்!
காதலர் ஒருவர் தன்னுடைய காதலிக்கு விதித்த 11 நடத்தை விதிமுறைகளால் அவர்களுடைய காதலே முறியும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
பொதுவாக காதல் ஜோடிகளில் ஒருவர் மற்றவர் மீது அதிக அன்பு வைத்திருப்பார்கள். ஆனால் அந்த உறவில் நம்பிக்கை என்றால் பெரும்பாலும் சில ஜோடிகளில் ஒருவர் மீது மற்றவர் அந்தளவிற்கு வைத்திருக்க மாட்டார்கள். இதுவே நாளடைவில் அவர்களுக்குள் சண்டை வர ஒரு முக்கிய காரணமாக அமைந்துவிடுகிறது. அந்தவகையில் தற்போது ஒரு காதலர் தன்னுடைய காதலியை நம்பாமல் போட்ட 11 நடத்தை விதிகள் அவர்களுடைய காதலை முறிக்கும் நிலைக்கு தள்ளியுள்ளது.
பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த கெரோலின் என்ற பெண் தன்னுடைய காதலர் தனக்கு விதித்துள்ள கட்டுப்பாடுகள் தொடர்பாக சமூக வலைதளத்தில் வீடியோவாக பதிவிட்டுள்ளார். அதில் அவர் அமெரிக்காவிற்கு படிக்க ஒரு பல்கலைக்கழகத்திற்கு செல்ல உள்ளதாக தன்னுடைய காதலரிடம் கூறியுள்ளார். அதற்கு அவர் 11 நடத்தை விதிமுறைகளை இந்த பெண்ணிற்கு தெரிவித்துள்ளதாக கூறுகிறார். அதன்பின்னர் அந்த வீடியோவில் அவர் தன்னுடைய காதலர் தெரிவித்த விதிகளை ஒன்று ஒன்றாக தெரிவிக்கிறார்.
அதன்படி கெரோலின் பல்கலைக் கழகத்தில் இருக்கும் போது மது உள்ளிட்டவற்றை அருந்த கூடாது. அத்துடன் எந்தவித பார்டிகளுக்கும் செல்ல கூடாது என்று கூறியுள்ளார். அத்துடன் அவர் மிகவும் இறுக்கமான ஆடைகள் மற்றும் ஷார்ட்ஸ் உள்ளிட்ட ஆடைகள் எப்போதும் அணிய கூடாது. மேலும் எந்த ஓரு ஆண் நண்பராக இருந்தாலும் அவரிடமிருந்து 25 அடி தள்ளி நின்று தான் பேச வேண்டும். அத்துடன் ஸ்போர்ட்ஸ் விளையாட்டு பயன்படுத்தப்படும் உள்ளாடைகளை அணிய கூடாது. மேலும் தினமும் இரவு 9 மணிக்கு ஹாஸ்டலுக்கு வந்து அவருக்கு வீடியோ கால் செய்து தனியாக தான் இருக்கிறார் என்பதை காட்ட வேண்டும். அவர் கொடுத்த மோதிரத்தை எந்தச் சூழ்நிலையிலும் கழற்ற கூடாது. கடைசியாக அவர் கொண்டு செல்லும் ஆடைகளை அவரிடம் வந்து காட்டி ஒப்புதல் பெற வேண்டும் என்று விதிகளை காதலர் கெரோலினிற்கு விடுத்துள்ளார்.
இந்த விதிகள் அனைத்தையும் படித்து கெரோலின், "இது எல்லாம் ஒரு பெண்ணை சுதந்திரமாக இயங்கவிடாமல் அடுக்கும் வகையில் உள்ளது. இதற்கு பெயர் காதல் அல்ல வன்முறை. இப்படிப்பட்ட ஒரு உறவில் நீங்கள் இருந்தால் உடனடியாக சட்ட உதவியை நாடி அதிலிருந்து நிச்சய ம் வெளியே வர வேண்டும்"எனக் கூறியுள்ளார். மேலும் அவர் தன்னுடைய காதலருடன் உறவை முடித்து கொள்ள போவதாகவும் தெரிவித்துள்ளார்.
காதலருக்கு காதலி மீது உடைமை பாராட்டலாம். ஆனால் அது எந்தவகையிலும் காதலியின் உரிமைகள் மற்றும் சுதந்திரத்தில் பாதிப்பு ஏற்படுத்த கூடாது. ஒரு பெண்ணின் கணவராக இருந்தாலும் அவர் இப்படி இருக்க வேண்டும் அப்படி இருக்க வேண்டும் என்று சொல்லும் உரிமை எந்த ஆணிற்கும் இல்லை. அதை போல் ஒரு பெண் இப்படி தான் இருக்க வேண்டும் என்று சொல்ல இந்த சமூகத்திற்கும் எந்தவித உரிமையையும். பெண்கள் அவர்களுக்கு பிடித்த முறையில் அவர்களுடைய உரிமைகளை சுதந்திரமாக கடைபிடித்து வாழ்வதே ஒரு நல்ல நவீன சமூகமாக இருக்க முடியும். அப்படி பெண்களை இன்னும் அடக்கும் சமூகத்தில் இருந்து கொண்டு மற்ற விஷயங்களை மாறியதால் நாம் நவீன சமூகத்திற்கு சென்றுவிட்டோம் என்று கூறவது நம்மை நாமே நம்பி ஏமாற்றும் மூடத்தனம் மற்றும் முட்டாள்தனமாகும். ஆகவே இதுபோன்ற செயல்களில் எந்த ஒரு ஆணும் ஈடபடாமல் இருப்பதே நல்ல சமூகத்திற்கு வழி வகுக்கும்.
மேலும் படிக்க: அட்டகாசமாக சுவற்றில் ஏறி அசர வைத்த 'ஸ்பைடர் கேர்ள்'- வைரல் வீடியோ !