உடலில் எங்கு மச்சம் இருந்தால் என்ன பலன்? சாமுத்ரிகா லட்சண சாஸ்திரம் சொல்வது என்ன?
உடலில் உள்ள மச்சத்திற்கு என்னென்ன பலன் என்பது குறித்து கீழே பார்க்கலாம்.
![உடலில் எங்கு மச்சம் இருந்தால் என்ன பலன்? சாமுத்ரிகா லட்சண சாஸ்திரம் சொல்வது என்ன? What is the benefit of having a mole anywhere on the body Samutrikka Lakshana Shastra உடலில் எங்கு மச்சம் இருந்தால் என்ன பலன்? சாமுத்ரிகா லட்சண சாஸ்திரம் சொல்வது என்ன?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/01/df057dc90b9574fb7a84664f82b54dc81704101770080102_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
சாமுத்திரிக்கா லட்சண சாஸ்திரத்தில் உடலில் தோன்றும் மச்சம் குறித்து பல்வேறு குறிப்புகள் குறிப்பிடப்பட்டுள்ளன. ஆண்களுக்கும் இது பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது. மச்சத்தின் இருப்பை வைத்து, அதிர்ஷ்டத்தை கணக்கிடும் வழக்கம் ஜோதிட சாஸ்திரத்திலும் காண முடியும். அதன்படி எங்கு மச்சம் இருந்தால், எந்த மாதிரியான பலன்கள் கிடைக்கும் என்பதை பார்க்கலாம்.
உதட்டில் மச்சம்
உதட்டின் வலது பக்கத்தில் மச்சமிருந்தால், அவர்கள் எந்த வேலை செய்தாலும் அதில், அவர்களுக்கு வெற்றி கிடைக்கும். ஒருவேளை உதட்டின் இடதுப் பக்கத்தில் மச்சம் அமைந்துவிட்டால், அவர்களுக்கு காதல் ஆசை அதிகம் இருக்கும். அவர்களுக்கு பல்வேறு காதல்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் குறிப்பிட்ட நபர்கள் பல்வேறு பிரச்னைகளை சந்திக்க நேரிடலாம்.
கட்டைவிரல் மச்சம்
உங்கள் கட்டை விரலில் மச்சம் இருந்தால் நீங்கள் உண்மையிலேயே அதிர்ஷ்டசாலி. கட்டை விரலில் மச்சம் உள்ளவர்கள் மிகவும் புத்திசாலிகளாகவும், ஸ்டைலானவர்களாகவும் இருப்பார்களாம்.
இடது கன்னத்தில் மச்சம்
இடது கன்னத்தில் மச்சம் உள்ளவர்களுக்கு பெரிய கனவுகள் இருக்கும். அவர்கள் தங்கள் வாழ்க்கையில் நிறைய சாதிக்க விரும்புவார்கள். மாறிவரும் காலத்திற்கு ஏற்ப புதிய விஷயங்களை தேட விரும்புவார்கள். இவர்கள் புத்திக்கூர்மை உடையவர்களாக இருப்பார்களாம்.
நெற்றியில் மச்சம்
நெற்றியில் மச்சம் அமைவது ஞானத்தின் அம்சத்தை குறைக்குமாம். நெற்றியில் மச்சம் இருந்தால் விருப்பம்போல் வாழ்க்கை அமையுமாம். வாழ்க்கைத் துணைவரின் அன்பு வாழ்நாள் முழுவதும் கிடைக்கும். ஆண்களுக்கு நெற்றியின் வலது பக்கத்தில் மச்சம் இருப்பின் மிகுந்த செல்வங்களை பெறும் யோகம் ஏற்படும். பெண்களுக்கு நெற்றியின் வலது புறத்தில் மச்சம் இருந்தால் தைரியமாக இருப்பதுடன், பிறருக்கு பணிந்து போகாத தன்மையும் இருக்குமாம். பெண்களின் நெற்றியில் இடதுபுறம் மச்சம் இருந்தால், அவர்கள் முன் கோபக்காரர்களாகவும், அற்ப குணமுடையவராகவும் இருப்பார்களாம்.
கண்ணில் மச்சம்
ஆண்களுக்கு வலது கண்ணில் மச்சம் இருந்தால் அவர்கள் நண்பர்களால் ஆதாயம் பெற வாய்ப்புண்டு. ஆண்களின் வலது கண் வெண்படலத்தில் மச்சமிருந்தால் மிகுதியான புகழ் பெற்றவர்களாகவும், ஆன்மீக நாட்டம் உடையவர்களாகவும் இருப்பார்கள். பொதுவாக பெண்களுக்கு எந்த கண்ணில் மச்சம் இருந்தாலும் அவர்களின் வாழ்வில் கஷ்டங்கள் அதிகம் உண்டாகலாம்.
மேலும் படிக்க:
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)