Chunchi Waterfalls : ட்ரிப் ப்ளான் இருக்கா? பெங்களூரிலிருந்து 100 கிலோமீட்டர்.. சுஞ்சி அருவின்னு ஒரு அற்புதம் இருக்கு..
பெங்களூரின் ஐடி நகரத்திலிருந்து நூறு கிலோமீட்டர் தொலைவில் கனக்புரா சாலையைத் தொட்டுவிட்டால் விடுதலை ரெடி. அக்ரவதி நதியை ஒட்டி அமைந்திருக்கும் சுஞ்சி அருவி இங்குதான் இருக்கிறது.
பெங்களூரின்பிஸியான வேகத்திலிருந்தும், அடர்த்தியிலிருந்தும் தள்ளிச்செல்ல வசதியான ஒரு இடம் அருகிலேயே, கொஞ்சம் தொலைவிலேயே அமைந்திருப்பது பலருக்கும் தெரியாது... அதுதான் சுஞ்சி அருவி!
பெங்களூரின் ஐடி நகரத்திலிருந்து நூறு கிலோமீட்டர் தொலைவில் கனக்புரா சாலையைத் தொட்டுவிட்டால் விடுதலை ரெடி. அக்ரவதி நதியை ஒட்டி அமைந்திருக்கும் சுஞ்சி அருவி இங்கு தான் இருக்கிறது. சுன்ச்சா, சுஞ்சி என்ற பழங்குடியின இணையரின் ஞாபகமாக இது பெயர் சூட்டப்பட்டிருக்கிறது.
இந்த அருவியின் உயரத்திலிருந்து சுற்றிலும் ஓடும் நதி, மரங்கள், மலைகளின் விளிம்புகளைக் கண்டு ரசிக்கலாம். அருவியின் மடியை அடைய இரண்டு கிலோமீட்டர் தொலைவு மலைப்பாதையில் நடக்க வேண்டும். அதற்கு உடல் அளவில் தயாராய் இருப்பவர்கள் கீழ் வரை சென்று பார்க்கலாம். ஆனால், அந்த அனுபவம் நிச்சயம் இரண்டு கிலோமீட்டர் வியர்வை சிந்தி நடப்பதற்கு உகந்தது. பருவகாலத்தில் ஆகஸ்ட் முதல் அக்டோபர் வரையான நாட்களில் இந்த அருவியைப் பார்ப்பது அதன் முழு வீச்சில் தரிசிப்பதற்கான நாட்கள் இவைதான்
இளநீர், மோர், பழங்கள் முதலான சிற்றுண்டிகளை விற்கும் சிறு வியாபாரிகள் தவிர உண்பதற்கு இங்கு வேறு உணவகங்கள் கிடையாது. ஆதலால், கனக்புரா நெடுஞ்சாலையைத் தொட்ட உடனேயே சாப்பாட்டை முடித்துக்கொண்டு இங்கு செல்வது நல்லது. தவன்கரே பென் தோஸ் உணவகம் இங்கு பெயர் பெற்றது.
அருகில் அமைந்திருக்கும் விமான நிலையம் மைசூர். அங்கிருந்து ஒரு டாக்ஸி பிடித்து இங்கு செல்லலாம். மைசூர் ரயில் நிலையம் இங்கிருந்து 60 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. சாலை வழி பயணிகள் இருசக்கர வாகனங்களில் பயணிக்கலாம். அந்த வாகனங்களை நிறுத்துவதற்கான கட்டணம் 30 ரூபாய். காலை எட்டு மணி முதல் மாலை ஐந்து மணி வரை இங்கு இருக்கலாம். முதலைகள் மற்றும் காட்டாறு வெள்ளத்தைக் கருத்தில் கொண்டு நதியில் நீந்துவதைத் தவிர்க்க வேண்டும்.
மேலும் லைஃப்ஸ்டைல் செய்திகளைப் படிக்கவேண்டுமா? இதைக் க்ளிக் செய்யவும்..
Migraine | ஒற்றைத் தலைவலி பாடாய்படுத்துதா? இந்த 7 விஷயமும் உங்களுக்கான மந்திரம்..
இந்த பாகங்களில் தொடர்ச்சியாக வலி இருந்தால் கவனிங்க.. மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம்..
Jaw Pain and Heart Attack | தாடை வலி, மாரடைப்பு வருவதற்கான அறிகுறியா?
முடி கொட்டுதா? பிரச்னை இதுதான்..! தலைமுடியும்.. தெரியாத தகவல்களும்!
Diabetes | சர்க்கரை நோய் குறித்து பரப்பப்படும் டாப் 10 பொய்கள் இவைதான்.. இதையெல்லாம் நம்பாதீங்க..
மழைக்காலத்தில் உடலை கதகதப்பாக்கும் உணவுகள் இதோ!
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய லைப்ஸ்டைல் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் லைப்ஸ்டைல் செய்திகளைத் (Tamil Lifestyle News) தொடரவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்