ஏசி போன்ற வீட்டு உபயோகப் பொருட்களை எங்கு வைக்க வேண்டும்? வாஸ்து சாஸ்திர டிப்ஸ்
ஏசி, ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின் போன்ற மின் உபகரணங்களை எங்கு வைத்தால் வாஸ்துப்படி சரியாக இருக்கும் என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்.
ஏசி, ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின் போன்ற மின் உபகரணங்களை எங்கு வைத்தால் வாஸ்துப்படி சரியாக இருக்கும் என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்.
வாஸ்து என்பது இந்து மதத்தின் அடிப்படையில் பின்பற்றப்படும்,கட்டிட கலைக்கான ஒரு தொழில்நுட்பமாகும். இந்த வாஸ்துவில் அறிவியலும் கலந்துள்ளதால் இன்று பெரும்பான்மையான மக்கள், அவர்கள் எந்த மதமாக இருந்தாலும், வாஸ்துவை பின்பற்றுகிறார்கள். வாஸ்து முறைப்படி கட்டப்படும் வீடோ அல்லது கடைகளோ அல்லது வியாபார தளங்களோ எவ்வளவு அளவுகளில் இருக்க வேண்டும்.
நாம் வசிக்கும் வீடு வாஸ்து சாஸ்திர படி இருக்க வேண்டும் என்று பலரும் நினைப்பதுண்டு. ஆனால் வாடகை வீட்டிலோ அல்லது கட்டிய வீட்டை வாங்கினாலோ சில சமயங்களில் இதை நம்மால் சரி செய்ய முடியாது. அது போன்ற நேரங்களில் சில வழிமுறைகளை நாம் செய்வதன் மூலம் நம்மால் ஓர் அளவிற்கு நன்மை அடைய முடியும் எனக் கூறுகிறது வாஸ்து சாஸ்திரம்.
அதேபோல் ஏசி, ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின் போன்ற மின் உபகரணங்களை எங்கு வைத்தால் வாஸ்துப்படி சரியாக இருக்கும் என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்.
அதற்கான டிப்ஸ் இதோ..
மை பண்டிட் நிறுவனத்தின் சிஇஓ கப்லேஷ் சர்மா தான் இந்த ஆலோசனைகளை வழங்கியுள்ளார். இவர் பிரபல வாஸ்து நிபுணராவார்.
ஏசியை நாம் தவறான திசை நோக்கி பொருத்தினால் அதனால் எதிர்மறை விளைவுகள் வரக்கூடும். அது நம் மனது, உடல்நலம் மற்றும் நிதிநிலையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. அதனால் வடகிழக்கு, வடமேற்கு அல்லது கிழக்கு நோக்கி ஏசியை பொருத்த வேண்டும். அதேபோல் ஏர் கூலர் பயன்படுத்தினால் அதில் உள்ள தண்ணீர் அசுத்தமாக இருக்கக் கூடாது. மேற்கு நோக்கி ஏர் கூலர் வைக்கக் கூடாது. ஏர் கூலர்களில் அதிக சத்தம் வரக்கூடாது.
ஃபிரிட்ஜ் எந்த திசையில் இருக்க வேண்டும்..
வாஸ்துப்படி ஃப்ரிட்ஜ் தெற்கு, மேற்கு, தென் கிழக்கு, வடக்கு நோக்கி ஃப்ரிட்ஜ் இருக்கலாம். வேறு திசையில் வைத்தால் உடல்நலனில் தாக்கத்தை ஏற்படுத்துமாம்.
* தொலைக்காட்சியை தென் கிழக்கு திசை நோக்கி வைக்கலாம். படுக்கை அறையில் தொலைக்காட்சியை வைக்கக் கூடாது. அவ்வாறாக வைத்தால் அது அமைதியை சீர்குலைக்கும். குடும்பத்தில் தேவையற்ற வாக்குவாதங்களை உண்டாக்கும்.
* டெஸ்க்டாப், லேப்டாப் கணினிகளை தென் கிழக்கு திசையில் வைக்க வெண்டும். அதேபோல் படுக்கைக்கு நேர் எதிராக கணினி டெஸ்க் போடக் கூடாது. அது திருமண வாழ்வில் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும்.
* ஒவ்வொரு எலக்ட்ரானிக் இயந்திரத்திலும் ஒரு சக்தி இருக்கிறது. அதில் உள்ள எதிர்மறை சக்தியை நீக்கி நேர்மறை சக்தியை அதிகரிக்க அவற்றை சரியான திசையில் வைக்க வேண்டும்.
இவ்வாறாக மை பண்டிட் நிறுவனத்தின் கபலேஷ் சர்மா ஆலோசனை சொல்லியிருக்கிறார். வாஸ்துவை கிண்டல் கேலி செய்யாமல் அதில் ஒளிந்திருக்கும் அறிவியலை அறிந்து எல்லாவற்றையும் பின்பற்றினால் வாழ்வில் வளமும் நலமும் செழிக்கும் என்றும் அவர் ஆலோசனை கூறுகிறார்.