(Source: Poll of Polls)
Valentine Day: காதல் சின்னம் ரோஜாவின் விலை தாறுமாறாக உயர்வு..! பீலிங்கில் லவ்வர்ஸ்..!
Valentine Day: இன்னும் ஓரிரு தினங்களில் காதலர் தினம் வரவுள்ள நிலையில் ரோஜக்களின் விலை கணிசமாக உயரத் தொடங்கியுள்ளது.
Valentine Day: இன்னும் ஓரிரு தினங்களில் காதலர் தினம் வரவுள்ள நிலையில் ரோஜக்களின் விலை கணிசமாக உயரத் தொடங்கியுள்ளது. காதலர் தினம் என்றாலே அனைவருக்குள்ளும் ஒருவித குஷி ஏற்பட்டு விடுகிறது. இந்த பிப்ரவரி 14-ல் ஆவது பலநாட்களாக சொல்ல தவித்த காதலை தனது காதலக்குரியவரிடம் எப்பாடு பட்டாவது சொல்லிவிட வேண்டும் என ஒருதலை காதலர்கள் முடிவு செய்திருக்க கூடும்.
காதலர் தினம்
காதலை வெளிப்படுத்த காதலர்கள் பயன்படுத்தும் பல அன்பிற்குரிய பொருட்களில் மலர்கள் முக்கிய இடம் பெற்றுள்ளது. அப்படியான மலர்களில் ரோஜா மிகவும் முக்கியமான ஒன்றாக உள்ளது. உலகம் முழுவதும் உள்ள காதலர்கள் தங்களது காதலருக்கு அன்பின் மிகுதியால் வழங்கும் பொருட்களில் ரோஜாவுக்கு தனிச் சிறப்பிடம் உள்ளது.
இந்தியாவைப் பொறுத்த வரையில் ஒரு சில தரப்பினர் காதலர் தினம் இந்தியக் கலாச்சாரம் இல்லை என கூறிவருகின்றனர். ஆனால் அன்பை (காதல்) வெளிப்படுத்தும் தினம் என்று ஒன்று இந்திய கலாச்சாரத்தில் இல்லை என்றால் அதனை மேற்கத்திய கலாச்சாரத்தில் இருந்தோ அல்லது வேறு எந்த கலாச்சாரத்தில் அன்பை வெளிப்படுத்தும் பண்டிகை உள்ளதோ அதனை கிரகித்துக் கொள்வதில் தவறு இருப்பதாக தெரியவில்லை.
எகிறும் ரோஜா விலை:
காதலர் தினக் கொண்டாட்டங்கள் இப்படி இருக்க இதனைக் குறிவைத்து நடக்கும் வியாபாரங்களை யாரும் மறுக்க மாட்டார்கள். அப்படி, தமிழ்நாடு மட்டும் இல்லாமல், தமிழ்நாட்டைச் சுற்றியுள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ஏன் இந்தியாவின் பல பகுதிகளுக்கும் கூட தமிழ்நாட்டின் ஊட்டி, கொடைக்கானல், தர்மபுரி, ஒசூர் பகுதிகளில் இருந்து ரோஜாக்கள் விற்பனைக்காக செல்கின்றன. குறிப்பாக இந்த பகுதியில் ரோஜாக்கள் அதிகமாக உற்பத்தியாக இந்த பகுதியில் நிலவும் தட்பவெட்ப சூழல் மிகவும் முக்கியமானது.
அப்படி இந்த இடங்களில் இருந்து உற்பத்தி செய்யப்பட்டு விற்பனைக்கு வரும் இந்த ரோஜாக்களுக்கு மற்ற தினங்களை விட, அதாவது மூகூர்த்த தினங்களை விடவும் விலை அதிகமாக விற்பனை செய்யப்படுகிறது என்பதும் கவனிக்கத்தக்கது. ா
விற்பனை:
வழக்கமான நாட்களில் ரோஜாவின் விலை ரூபாய் 10. ஆனால் காதலர் தினத்தில் ஒரு ரோஜாவின் விலை ரூபாய் 100க்கும் விற்பனை செய்யவடுவது வழக்கமாக உள்ளது. ஆனால் விலை ஏற்றத்தால் ரோஜாக்கள் விற்பனை செய்யப்படாமல் கடைகளில் தேங்கி விடுவதில்லை. காரணம் ஆண்டு முழுவதும் எத்தனையோ ரோஜாக்கள் வாங்கித் தந்தாலும், காதலர் தினத்தில், பிறந்த நாளில், காதல் சொன்ன நாளில் என இப்படியான நாட்களில் வாங்கித் தந்த ரோஜாக்களுக்கு காதலர்கள் மத்தியில் தனி மரியாதையே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
காதலித்து திருமணம் செய்து கொண்ட பின்னரும் அந்த தம்பதியர்களில் மனைவிக்கு மல்லிகை பூ பிடிக்கும் என யாரேனும் கூறினால் அது தவறு. காதலி மனைவியான பிறகும் அவர்களுக்கு மிகவும் பிடித்த பரிசுகளில் என்றைக்கும் ரோஜா இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.