kitchen Hacks: சின்ன வெங்காயம் கெடாமல் இருக்க! வாழைத்தண்டில் இருந்து நார் நீக்க - பயனுள்ள சமையல் குறிப்புகள்!
சின்ன வெங்காயம் கெடாமல் இருக்க, நறுக்கிய வாழைத்தண்டில் இருந்து நார் நீக்க பயனுள்ள டிப்ஸ்களைப் பார்க்கலாம்.
சின்ன வெங்காயம் கெட்டுப் போகாமல் இருக்க
சின்ன வெங்காயம் கெட்டுப் போகாமல் இருக்க, சின்ன வெங்காயத்தை ஸ்டோர் செய்யும் போது அதன் நடுவில் ஒரு கொட்டாங்குச்சியை வைத்து விட வேண்டும். வெங்காயத்தை திறந்த நிலையில் வைக்க வேண்டும். சின்ன வெங்காயத்தை இப்படி ஸ்டோர் செய்து வைத்தால் நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும்.
ஊதுபத்தியின் சாம்பல் தரையில் விழாமல் இருக்க
நாம் பூஜை அறையில் ஊதுபத்தியை ஏற்றி வைத்தால், அந்த இடத்தில் ஊதுபத்தியின் சாம்பல் விழும் இதை தனியாக களீன் செய்ய வேண்டும். நீங்கள் ஒரு தட்டு அல்லது சற்று அகலமான பிளாஸ்டிக் டப்பாவை வைத்து அதன் மீது ஊதுபத்தி ஸ்டாண்ட் வைத்து ஊதுபத்தியை ஏற்றி வைக்க வேண்டும். இப்படி வைத்தால் ஊதுபத்தியின் சாம்பல் தரையில் விழாமல் நாம் வைத்திருக்கும் தட்டில் விழும். இதை நாம் எளிமையாக டிஸ்போஸ் செய்து விடலாம்.
உருளைக்கிழங்கு கருக்காமல் இருக்க
உருளைக்கிழங்கை வெட்டியதும் அதன் நிறம் மாறாமல் இருக்கு நம் அதை தண்ணீரில் போட்டு வைப்போம். அப்படி போட்டு வைத்தாலும் அரை மணி நேரத்தில் உருளைக்கிழங்கின் நிறம் மாறிவிடும். அப்படி மாறாமல் இருக்க உருளைக்கிழங்கை போட்டு வைக்கும் தண்ணீரில் இரண்டு ஸ்பூன் பால் சேர்த்து கலக்கி விடவும். இப்படி வைத்தால் உருளைக்கிழங்கு நிறம் மாறாமல் இருக்கும்.
வாழைத்தண்டில் இருந்து நார் நீக்க
நாம் வாழைத்தண்டை நறுக்கும் போது அதன் நார்களை எடுக்க வேண்டும் என்பதால் அதை கட் பண்ணி எடுக்கவே நேரம் ஆகும் இனி நீங்கள் வாழைத்தண்டை நறுக்கி தண்ணீரில் சேர்த்து ஒரு ஃபோர்க் ஸ்பூனை வைத்து முட்டையை பீட் செய்வது போல், இரண்டு நிமிடம் பீட் செய்து விட்டால் வாழைத்தண்டில் இருக்கும் நார் ஃபோர்க் ஸ்பூனில் சுற்றிக் கொள்ளும். இந்த முறையில் நாம் வாழைத்தண்டில் உள்ள நாரை எளிமையாக நீக்கி விடலாம். வாழைத்தண்டை தண்ணீரில் சேர்த்து அதனுடன் இரண்டு ஸ்பூன் பால் சேர்த்து வைத்தால் வாழைத்தண்டு கருக்காமல் இருக்கும்.
சாம்பார் சுவை அதிகரிக்க
சிலருக்கு துவரம் பருப்பு சாம்பார் எப்படி வைத்தாலும் பிடிக்காது. அப்படிப்பட்டவர்கள், இனி பருப்பு தக்காளி உள்ளிட்டவற்றை வேக வைக்கும் போது அதில் கால் ஸ்பூன் சீரகவும், கால் ஸ்பூன் வெந்தயமும் சேர்த்து வேகவைத்து சாம்பார் செய்தால் சாபாரின் சுவை சூப்பராக இருக்கும்.