மேலும் அறிய
வெயிலில் வாடிப்போன சருமம் பளிச்சுன்னு மாறணுமா.. இதை செய்து பாருங்க !
கருமையான சருமத்தை வெள்ளையாக்க என்ன வழி உள்ளது என்று பலரும் தேடுவோம். அத்தகையவர்களுக்காக, விடுமுறை நாட்களில் வீட்டில் இருக்கும் போது, இதை செய்து பாருங்க

வெயிலில் கறுக்கும் சருமம்
வெயில் சுட்டெரிக்கத் தொடங்கியாச்சு... இனி சரும பிரச்சனைகளும் தொடங்கிடும்... அதுல ஒன்னுதான் சருமம் கருத்துப்போவது... சூரியக்கதிர்கள் சருமத்தை மிகவும் கடுமையாக பாதிக்கின்றன. சூரியக்கதிர்கள் அளவுக்கு அதிகமாக சருமத்தைத் தாக்கும் போது, அதனால் சருமத்தின் நிறம் கருமையாகிவிடுகிறது.
இப்படி கருமையான சருமத்தை வெள்ளையாக்க என்ன வழி உள்ளது என்று பலரும் தேடுவோம். அத்தகையவர்களுக்காக, விடுமுறை நாட்களில் வீட்டில் இருக்கும் போது, எப்படி வெயிலால் சருமத்தில் ஏற்பட்ட கருமையைப் போக்குவது என சில டிப்ஸ் இங்க இருக்கு...
கெமிக்கல் கலந்த பொருட்களை சருமத்தில் பயன்படுத்த வேண்டுமெனில் பலமுறை யோசிக்க வேண்டும். ஆனால் இயற்கைப் பொருட்களைக் கொண்டு முகத்தில் மாஸ்க் போட்டால், எந்த ஒரு பக்க விளைவும் இல்லாமல், சருமத்தில் உள்ள கருமை நீங்குவதோடு, சருமமும் ஆரோக்கியமாக இருக்கும்.

*எலுமிச்சை+தேன்*
எலுமிச்சை சாறு மற்றும் தேன் 2 டீஸ்பூன் எலுமிச்சை சாற்றில் 2 டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து, பின் முகத்தைக் கழுவ வேண்டும். இப்படி செய்து வந்தால், முகத்தில் வெயிலால் ஏற்பட்ட கருமை மறையும்.
*கடலைமாவு+மஞ்சள் தூள்*
கடலை மாவு மற்றும் மஞ்சள் தூள் இந்த ஃபேஸ் பேக், வெயிலால் ஏற்பட்ட கருமையை குறைப்பதோடு, பொலிவை அதிகரிக்கும். அதற்கு 4 டீஸ்பூன் கடலை மாவுடன், 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் சிறிது பால் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, முகம் மற்றும் கழுத்தில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.

*பேக்கிங் சோடா*
பேக்கிங் சோடாவைப் பயன்படுத்தி முகத்தில் உள்ள கருமையைப் போக்கலாம். அதற்கு பேக்கிங் சோடாவை ரோஸ் வாட்டரில் கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும்.
*ஓட்ஸ்+பால்*
ஓட்ஸ் ஒரு நேச்சுரல் ஸ்கரப்பர். இந்த ஸ்கரப் செய்வதற்கு சிறிது ஓட்ஸ் உடன், பால் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி மென்மையாக ஸ்கரப் செய்ய வேண்டும். பின் முகத்தைக் கழுவிய பிறகு, வைட்டமின் ஈ ஆயிலை முகத்தில் தடவி மசாஜ் செய்து விட வேண்டும்.

*எலுமிச்சை சாறு மற்றும் உப்பு*
எலுமிச்சை ஓரு சிறப்பான ப்ளீச்சிங் தன்மை வாய்ந்த பொருள். அந்த எலுமிச்சையின் சாற்றில் சிறிது உப்பு சேர்த்து கலந்து, குளிக்கும் போது இந்த கலவையைக் கொண்டு சருமத்தை மென்மையாக ஸ்கரப் செய்து, குளிர்ந்த நீரில் கழுவினால், சருமத்தில் உள்ள கருமைகள் அகலும்.

*வெள்ளரிக்காய்*
வெள்ளரிக்காய் கூட சரும கருமையை நீக்க உதவும். அதற்கு வெள்ளரிக்காயை பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து, பின் அலச வேண்டும். இதனால் சருமத்தில் இருக்கும் கருமை மட்டுமின்றி, கரும்புள்ளிகள், பருக்கள் போன்றவையும் நீங்கும்.
*கற்றாழை ஜெல்*
கற்றாழை ஜெல்லை சருமத்தில் பயன்படுத்தினால், சருமத்தில் ஏதேனும் தொற்றுகள் இருந்தால் நீங்குவதோடு, சருமமும் ஈரப்பசையுடன் இருக்கும். அதற்கு கற்றாழை ஜெல்லை முகத்தில் தடவி மென்மையாக சிறிது நேரம் மசாஜ் செய்து, பின் குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவ வேண்டும்.
சமீபத்திய லைப்ஸ்டைல் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் லைப்ஸ்டைல் செய்திகளைத் (Tamil Lifestyle News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement


470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk
தலைப்பு செய்திகள்
தேர்தல் 2025
இந்தியா
தமிழ்நாடு
ஆன்மிகம்
Advertisement
Advertisement