‛டைட்’ ஜீன்ஸ் அணிபவரா... விரை புற்றுநோய் அபாயம் இருக்கிறதாம்.... எச்சரிக்கை!
நீண்ட காலத்துக்கு இறுக்கமான ஆடைகளை அணிவது சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகளுக்கு வழிவகுக்கும் . மேலும் சிறுநீர்ப்பை பலவீனம், விந்தணு எண்ணிக்கை குறைதல், பூஞ்சைத் தொற்று ஆகியவற்றுக்கும் வழிவகுக்கும்.
ஆண் உடலின் பிரத்தியேக யென உறுப்பான விரைப்பைகள், பொதுவாக உடலின் பிற பாகங்களைக் காட்டிலும் குளிர்ச்சியாகவே காணப்படும். இந்நிலையில், இன்றைய நவீன காலத்தில் ஆண்களின் பொதுவான உடையாக கோலோச்சி வரும் ஜீன்ஸ் பாண்ட்கள் விரைப்பைகளுக்கு மோசமான பாதிப்புகளை ஏற்படுத்துவதாக சமீபத்தில் பல்வேறு தகவல்கள் இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றன.
விரைப்பைகளை பாதிக்கிறதா ஜீன்ஸ்?
ஜீன்ஸ் பாண்ட்கள் விரைப்பைகளில் அழுத்தத்தை ஏற்படுத்தி அவற்றின் குளிர்ச்சியான தன்மையை மாற்றி, விந்தணுக்கள் எண்ணிக்கை குறைப்புக்கும், விரை புற்றுநோய் எனப்படும் டெஸ்டிகுலர் புற்றுநோய்க்கு வித்திடுகின்றன என்பன போன்ற அதிர்ச்சி தரும் தகவல்கள் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.
இந்தச் செய்திகள் எவ்வளவு நம்பத்தகுந்தவை, இது குறித்து மருத்துவர்கள் சொல்வது என்ன என்பன குறித்து இங்கே காண்போம்...
சிறுநீர்ப்பையை பாதிக்கும் இறுக்கமான ஆடைகள்....
“இறுக்கமான அல்லது பொருத்தமற்ற பாண்ட்களை ஆண்கள் அணிவதும், இடுப்புப் பகுதியை சுற்றி இறுக்கமான தளர்வற்ற ஆடைகள அணிவதும் ஆண்களின் ஆரோக்கியத்துக்கு பெரும் தீங்கு விளைவிக்கும்.
மேலும் நீண்ட காலத்துக்கு இப்படியான இறுக்கமான ஆடைகளை அணிவது சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகளுக்கும் வழிவகுக்கும் . மேலும் சிறுநீர்ப்பை பலவீனம், விந்தணு எண்ணிக்கை குறைதல், பூஞ்சைத் தொற்று, சிறுநீர்ப்பையின் அதிகப்படியான செயல்பாடு ஆகியவற்றுக்கும் வழிவகுக்கும்.
டெஸ்டிகுலர் புற்றுநோய்க்கான காரணம்...
விரை அல்லது டெஸ்டிகுலர் புற்றுநோய்க்கான சரியான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. எவருக்கு வேண்டுமானாலும் இந்த நோய் ஏற்படலாம். முழுமையடையாத விரைப்பைகளுடன் பிறந்த ஆண்களுக்கு இந்நோய் பொதுவாக ஏற்பட வாய்ப்பு உள்ளது. இந்த டெஸ்டிகுலர் புற்றுநோயில் பொதுவாக ஒரு பக்க விரைப்பை வீக்கத்துடன் காணப்படும்.
குடும்பத்தில் யாருக்கும் இருந்தால் ஜாக்கிரதை....
தங்கள் குடும்பத்தில் எவருக்கேனும் டெஸ்டிகுலர் புற்றுநோய் இருந்திருந்தால், குறிப்பாக தங்கள் சகோதரர், தந்தை உள்ளிட்டோருக்கு இந்த புற்றுநோய் ஏற்பட்டிருந்தால், ஆண்கள் தங்களையும் சோதனைக்கு உள்படுத்தி அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
அறிவியல் சான்று உள்ளதா...
இறுக்கமான ஜீன்ஸ் அல்லது இறுக்கமான ஆடைகள் டெஸ்டிகுலர் புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கின்றன என்பதற்கு நிரூபிக்கப்பட்ட அறிவியல் சான்றுகள் இதுவரை எதுவும் இல்லை.
ஆண்கள் தங்கள் உடலில் விரைப்பை வீக்கங்களைக் கண்டால் உடனடியாக அது குறித்து கவனம் செலுத்த வேண்டும். விரைப்பை புற்றுநோய்க்கான சிகிச்சைகள் பொதுவாக நல்ல பலன்தரக் கூடியவை. இச்சிகிச்சையில் குணமடைவோரின் விகிதமும் அதிகம்” எனத் தெரிவிக்கின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )