Teddy day தெரியுமா உங்களுக்கு! இந்த பிப்ரவரியில் தெரிந்து கொள்ளுங்கள்
பிப்ரவரி வந்துவிட்டால் போதும் சட்டென மாறும் வானிலை என்பது போல் காதல் ஃபீல் இளைஞர்களின் மனதை சூழ்ந்து கொள்கிறது. யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே என்பது போல் சாக்கலேட் டே, ரோஸ் டே, டெட்டி டே என்று காதலர் தினத்திற்கு முன்னால் நிறைய நாட்கள் வந்து சென்றுவிடுகின்றன.
பிப்ரவரி வந்துவிட்டால் போதும் சட்டென மாறும் வானிலை என்பது போல் காதல் ஃபீல் இளைஞர்களின் மனதை சூழ்ந்து கொள்கிறது. யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே என்பது போல் சாக்கலேட் டே, ரோஸ் டே, டெட்டி டே என்று காதலர் தினத்திற்கு முன்னால் நிறைய நாட்கள் வந்து சென்றுவிடுகின்றன. ரொமான்டிக் வாரத்தின் நான்காம் நாளான நாளை பிப்ரவரி 10 -ம் தேதி டெட்டி தினம் ஆகும்.
இந்த டெட்டி பியர்கள் மென்மையானது மற்றும் உறவை மேம்படுத்த ஒரு சிறந்த கிப்டாக கருதப்படுகிறது. அதனால் நீங்கள் இதை உங்கள் பிரியமானவர்களுக்கு வழங்கலாம். இந்த டெட்டி பியர்கள் ஒருபோதும் பூக்களைப் போல காய்ந்துவிடாது. உங்கள் காதலை எப்போதும் நினைவூட்டுவதால், பல ஆண்டுகளுக்கு இதை நீங்கள் உங்களுடனே வைத்திருக்க முடியும். இவை உங்கள் காதலை வெளிப்படுத்த ஒரு அருமையான பொருளாகவும்.
டெட்டிகள் ஒரு உள்ளார்ந்த அழகைக் கொண்டிருக்கிறது, விவரிக்க முடியாத அப்பாவித்தனம் அவற்றில் பொதிந்துள்ளது. குறிப்பாக, பெண்களுக்கு இது மிகவும் பிடித்தமான ஒன்றாகும். இரவில் கட்டியனைத்து தூங்கவும் செய்வார்கள். எனவே உங்கள் நினைவாக டெட்டிப் பியர் வாங்கிக் கொடுத்தால் நீங்கள் இல்லாத சமயத்தில் டெட்டியைக் கொஞ்சுவார்கள். உங்களுக்கு உங்கள் பார்ட்னரின் முத்தம் வேண்டும் என்றால், பெரிய அளவிலான டெட்டி பியரை வாங்கிக் கொடுத்து சர்ப்ரைஸ் செய்யுங்கள்.
காதலர் தின வரலாறு:
காதலர் தினம் பிப்ரவரி 14ம் தேதி கொண்டாடப்படுவது தொடர்பான பல கதைகள் வலம்வருகின்றன. அதில் பெரும்பான்மையானவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றுதான் ரோமில் வாழ்ந்த கத்தோலிக்க மதகுருவான செயிண்ட் வாலண்டைனின் பெயரால் காதலர் தினம் அழைக்கப்படுவது.
பிப்ரவரி 13 முதல் பிப்ரவரி 15 வரை ரோமானியர்கள் லுபர்காலியாவின் எனும் பண்டிகையை கொண்டாடினர். அதில், ஆண்கள் ஒரு நாயையும் ஆட்டையும் பலியிட்டு அதன் ரோமத்தால் திருமணமாக பெண்ணை அடிப்பார்கள். இது கருவுருதலை வலுப்படுத்தும் என்பதால் பெண்களும் அதை விருப்பப்பட்டு ஏற்றுக்கொண்டனர். பின்னர் ஒரு குவளையில் இருக்கும் பெண் பெயரை தேர்ந்தெடுத்து தங்களது காதலை வெளிப்படுத்துவர். சில சமயங்களில் இது திருமணமாக மாறும்.