மழை காலத்தில் தாம்பத்ய உறவு வைத்து கொள்வது நல்லதா? -அறிவியல் கூறும் உண்மை என்ன?
மழை காலங்களில் தாம்பத்ய உறவு வைத்து கொள்வதில் உள்ள சிறப்பு அம்சங்கள் என்னென்ன?
தாம்பத்ய உறவு என்பது தம்பதிகளுக்கு இடையே மேலும் அன்பை அதிகரிக்கும் ஒரு நல்ல விஷயமாக பார்க்கப்படுகிறது. அந்த பந்தத்தால் ஆண் மற்றும் பெண் ஆகிய இரு பாலினத்தவரின் உடல்களிலும் சில முக்கியமான நன்மைகள் ஏற்படுகின்றன. இந்த உறவில் ஈடுபடும் போது இருவரின் உடலிலும் நல்ல வகையான உணர்வை தரும் சுரபிகள் சுரக்கும் என்பதால் அது அவர்களுக்கு மனநிறைவை தரும். அத்துடன் தாம்பத்ய வாழ்வு சிறப்பாக உள்ள தம்பதிக்கு ஆஸ்துமா, இரத்த அழுத்தம், இதய சார்ந்த கோளாறுகள், போன்ற நோய்கள் வருவது சற்று குறையும் என்று ஒரு மருத்துவ ஆய்வில் தெரிய வந்துள்ளது
அந்தவகையில் தம்பதிகளிடையே தாம்பத்ய உறவு வைத்து கொள்ள மழை காலம் எப்போதும் கூடுதல் சிறப்பை தரும் என்று ஆய்வு ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக ஒரு ஆங்கில பத்திரிகை வெளியிட்டுள்ள ஆய்வின்படி மழைக் காலத்தில் தம்பதிகளிடையே தாம்பத்ய உறவை மேம்படுத்தும் சில காரணிகள் ஏற்படும். அது அவர்களின் தாம்பத்ய உறவை மேலும் பலப்படுத்தும் வகையில் அமைந்திருக்கும் என்று கூறுகிறது. அந்த ஆய்வின்படி அதற்கு சில காரணங்களும் கூறப்பட்டுள்ளன. அவை
உடல் வெப்பம்:
மழை காலத்தில் வெளியே இருக்கும் சூழல் மிகவும் இதனமானதாக இருக்கும். அத்துடன் சற்று குறைந்த வெப்பத்துடன் காணப்படும். அந்த சமயத்தில் தாம்பத்ய உறவு வைத்து கொள்வதால் இருவரின் உடலும் சற்று வெப்பமாக இருக்கும். அது அவர்களின் உடலுக்கு ஒரு கத கதப்பான வெப்பத்தை தரும் என்று கூறப்படுகிறது.
மழையில் நனைந்த உடைகள்:
தம்பதிகள் இருவரும் மழையில் நனைந்து கொண்டு வீடு திரும்பும் போது அந்த ஈர உடை அவர்களுக்கு இயல்பாகவே தாம்பத்ய உறவு வைத்து கொள்ளும் தேவையை அதிகம் தூண்டும் என்று இந்த ஆய்வு தெரிவிக்கிறது.
மழைக்காலம்:
பொதுவாக கோடை காலம் மிகவும் வறண்டு இருக்கும் காலம். அத்துடன் அந்த காலத்தில் பலருக்கு அதிகமாக உடலில் விரைவாக சோர்வு ஏற்படும். இதனால் அவர்களுக்கு மற்ற சிந்தனைகள் சற்று குறைவாக தான் இருக்கும் என்று கூறப்படுகிறது. அதேபோல் தாம்பத்ய உறவில் ஈடுபடும் எண்ணமும் தம்பதிகளுக்கு அந்த காலத்தில் மிகவும் குறைவாக தான் இருக்கும் என்று ஆய்வு கூறுகிறது. அதே சமயம் மழை காலத்தில் வெளியே இருக்கும் சூழல் தம்பதிகளுக்கு ஒரு நல்ல சூழலை உண்டாக்கும் என்பதால் அவர்களுக்குள் உடலுறவு வைத்து கொள்ளும் எண்ணம் இயல்பாகவே ஏற்படும் என்று இந்த ஆய்வு தெரிவிக்கிறது.
மழை-இசை-காதல்:
உலகில் உள்ள எந்த மொழியில் பாடல்கள் அமைந்திருந்தாலும் அவற்றில் எப்போதும் மழை இசை மற்றும் காதல் ஆகிய மூன்று இணைந்து இருக்கும். அதாவது மழை காலத்தில் வரும் காதல் பாடல்கள் அதிகமாக இருக்கும். அதிலும் குறிப்பாக அந்தப் பாடல்களில் ரோமான்ஸ் அதிகமாக இருக்கும். அதேபோல் தான் தம்பதிகளுக்கு இடையேயும் மழை காலத்தில் இருக்கும் ரோமான்ஸ் சற்று கூடுதலாக இருக்கும்.
இவ்வாறு மழை காலத்தில் தாம்பத்ய உறவு வைத்து கொள்ளுதல் தம்பதிகளுக்கு எவ்வளவு முக்கியம் என்று இந்த ஆய்வு கூறுகிறது. மேலும் இது தம்பதிகளின் தாம்பத்ய உறவை மேலும் மேம்படுத்தும் காலம் என்றும் இந்த ஆய்வு குறிப்பிடுகிறது.
மேலும் படிக்க: இதய நோய் வராமல் இருக்க இதை சாப்பிடலாம்: ஆய்வு முடிகள் சொல்வது என்ன?