Christmas Decoration | எல்லாருக்கும் இது இனிய கிறிஸ்துமஸ்.. உங்க வீட்டை அழகுபடுத்த அசத்தல் ஐடியாஸ்..
அனைவரின் வீடுகளிலும் வண்ணமயமான அலங்காரங்களுடன் கிறிஸ்துமஸ் தாத்தாவையும், வருகின்ற புத்தாண்டையும் வரவேற்று உற்சாகத்துடன் பண்டிகையைக் கொண்டாடலாம்.

பாரம்பரிய முறையையும், இன்றைய நவீன காலத்தையும் கருத்தில் கொண்டு கிறிஸ்துமஸ் பண்டிகைகளில் வீடுகளை பல வகைகளில் அலங்கரிக்கலாம்.
உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 25-ஆம் தேதி வெகுவிமரிசையாக கொண்டாடப்படும். பொதுவாக பண்டிகை வந்தாலே அனைவருக்கும் நினைவுக்கு வருவது வண்ண வண்ண விளக்குகளும், கிறிஸ்துமஸ் மரம், இனிப்புகள், குடில், பரிசுப்பொருள்களும்தான். வீதிகளிலும், அனைத்து வீடுகளிலும் வண்ண விளக்குகளால் அலங்கரிப்புகள் கண்களைக்கவரும். மேலும் கிறிஸ்துமஸ் நாள்களில் நண்பர்களை வீடுகளுக்கு அழைத்து மகிழும் இந்நாளில் ஒவ்வொருவரும் தங்களது வீடுகளைப் பிரம்மாண்டமாக அலங்கரிக்க விரும்புவார்கள். இந்நிலையில் என்னென்ன டிசைன்களை வீடுகளை அலங்கரிக்கலாம் என இங்கே தெரிந்துகொள்வோம்.
மேன்டில் அலங்காரம் : உங்களது வீட்டில் மிகவும் முக்கியமான பகுதி என்பதால், பார்ப்போர் அனைவரையும் வியக்க வைக்கும் அளவிற்கு அலங்காரங்கள் இருக்க வேண்டும். உங்களது வீட்டு அலமாரியைப் பரிசுப்பொருள்கள், பொம்மைகள் கொண்டு அலங்கரித்துகொள்ளலாம்.
வண்ணங்களுடன் அலங்கரிப்பு : கிறிஸ்துமஸ் என்றாலே நம் நினைவுக்கு வருவது சிவப்பு மற்றும் வெள்ளை நிறங்களுடன் மிளிரும் வண்ண விளக்குகள்தான். எனவே இந்த இரு வண்ணங்களைத் தவிர அனைவரின் கண்களைக் கவரும் வகையில் கருப்பு, பிரவுன், பச்சை மற்றும் நீல நிறம் போன்ற வண்ணங்களுடன் அலங்கரிக்கலாம். இதுபோன்றவை பண்டிகைக்காலங்களில் நமக்கு மட்டுமில்லாமல் நம் சொந்தங்களுக்கும் அதிக உற்சாகத்தை அளிக்கும். இதோடு உங்கள் வீட்டுப் படுக்கையறையில் வண்ணமயமாக விளக்குள் மற்றும் கிறிஸ்துமஸ் மரம், பலூன் மற்றும் பரிசுப்பொருள்களுடன் அலங்கரிக்கும்போது குழந்தைகள் உற்சாகத்துடன் இதனை ரசிப்பார்கள்.
டைனிங் டேபிள் அலங்காரங்கள்: அடுத்ததாக நம் வீட்டில் மிகவும் முக்கியமானது இடம்தான் டைனிங் டேபிள். மகிழ்ச்சியுடன் உணவருந்தும் நேரத்தில் அனைவரையும் மகிழ்விக்கும் விதமாக டைனிங் டேபிளைச்சுற்றி மெழுகுவர்த்திகள் மற்றும் pine cones போன்றவற்றைக்கொண்டு அலங்கரிக்கலாம். இதோடு வீட்டின் மாடிப்படிக்கட்டுகளைச்சுற்றியும் விளக்குகளைப் பயன்படுத்தலாம். மேலும் அனைவரையும் கவரும் வகையில் பருத்தி, வெள்ளைத்துணி, கையுறைகள் கொண்ட பனிமனிதனை உருவாக்கி வீட்டின் முன்வாசலில் வைக்கலாம்.. இது கிறிஸ்துமஸ் விருந்தினருக்கு பிடித்த ஈர்க்கக்கூடிய விஷயமாக இருக்கும்.
இதுபோன்று ஒவ்வொரு வீடுகளிலும் அலங்காரங்கள் மேற்கொள்ளும் போது நம்மை மட்டுமில்லை, நம் விருந்தினரையும் பண்டிகை நாள்களில் உற்சாகத்துடன் இருக்கச்செய்யும். மேலும் கொரோனா காலக்கட்டத்தில் கொண்டாடக்கூடிய இந்த பண்டிகையை நல்ல முறையில் கொண்டாடுவதற்கு நிச்சயம் இந்த டிப்ஸ் உங்கள் அனைவருக்கும் மிகுந்த பயனுள்ளதாக இருக்கும். எனவே இதுபோன்ற வண்ணமயமான அலங்காரங்களுடன் கிறிஸ்துமஸ் தாத்தாவை வரவழைத்தும், வருகின்ற புத்தாண்டை வரவேற்றும் உற்சாகத்துடன் இந்தாண்டு கொண்டாடலாம்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

