மேலும் அறிய

இரவில் கார் ஓட்டுகிறீர்களா?பயணத்தில் கவனிக்க வேண்டிய மிக முக்கிய விஷயங்கள்

சோர்வு காரணமாக எதிர்வினை ஆற்றும் திறன் குறைய வாய்ப்புள்ளது. எனவே, இரவு நேரப் பயணத்தைச் பாதுகாப்பானதாக மாற்ற நீங்கள் கடைபிடிக்க வேண்டிய விஷயங்களை காணலாம்

இரவு நேரப் பயணம் பகல் நேரத்தைப் போல எளிதானது அல்ல. குறைவான வெளிச்சம், உடல் சோர்வு மற்றும் எதிர்பாராத தடைகள் என இரவு நேரப் பயணம் சவாலானது. போதிய வெளிச்சமின்மை தூரத்தைக் கணிக்க சிரமத்தை ஏற்படுத்துகிறது. எதிரே வரும் வாகனங்களின் முகப்பு விளக்குகள் (Headlights) பார்வையைப் பாதிக்கலாம். சோர்வு காரணமாக எதிர்வினை ஆற்றும் திறன் குறைய வாய்ப்புள்ளது. எனவே, இரவு நேரப் பயணத்தைச் பாதுகாப்பானதாக மாற்ற நீங்கள் கடைபிடிக்க வேண்டிய விஷயங்கள் இதோ:

1. பார்வைத் திறன் - முகப்பு விளக்குகளின் பராமரிப்பு

இரவில் சாலை அடையாளங்கள் மற்றும் திருப்பங்களைக் கண்டறிவது கடினம். எனவே, வாகனத்தின் முகப்பு விளக்குகள் எப்போதும் சுத்தமாகவும், சரியாகப் பொருத்தப்பட்டும் இருக்க வேண்டும்.இருட்டான சாலைகளில் 'ஹை பீம்' (High beam) பயன்படுத்தலாம், ஆனால் எதிரே வாகனம் வரும்போது உடனடியாக 'லோ பீம்' (Low beam) முறைக்கு மாற வேண்டும்.முன்பக்கக் கண்ணாடி மற்றும் கண்ணாடிகளில் (Mirrors) தூசி இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

2. சிறிய இடைவேளைகள் கட்டாயம்

நாள் முழுவதும் வேலை செய்துவிட்டு இரவு பயணத்தைத் தொடங்கும்போது தூக்க உணர்வு ஏற்படலாம். கொட்டாவி விடுவது மற்றும் கவனம் சிதறுவது ஆபத்தின் அறிகுறி.ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கும் ஒருமுறை சிறிய இடைவேளை எடுப்பது உடலைப் புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கும்.காபி போன்ற பானங்கள் தற்காலிகமாக விழிப்புணர்வைத் தந்தாலும், அவை தூக்கத்திற்கு மாற்றாகாது. பயணத்திற்கு முன் நல்ல உறக்கம் அவசியம்.

3. எதிரே வரும் வாகனங்களின் வெளிச்சத்திலிருந்து பாதுகாப்பு

ஒற்றைச் சாலைகளில் வரும் வாகனங்களின் அதிகப்படியான வெளிச்சம் கண்களைப் பறிக்கலாம். அப்போது நேரடியாக அந்த விளக்குகளைப் பார்க்காமல், சாலையின் விளிம்பைப் பார்த்து வாகனத்தை ஓட்டவும். அதே போல் பின்னால் வரும் வாகனங்களின் வெளிச்சம் கண்ணாடியில் பட்டுத் தெரியாமல் இருக்க, உள்ளே இருக்கும் ‘ரியர் வியூ மிரரை’ (Rear View Mirror) ‘நைட் மோடில்’ (Night mode) மாற்றவும்.

4. வேகக் கட்டுப்பாடு

குறைந்த வெளிச்சத்தில், ஒரு தடையைப் பார்த்த பிறகு எதிர்வினை ஆற்ற குறைந்த நேரமே கிடைக்கும். எனவே, வேகத்தைக் குறைத்து ஓட்ட வேண்டும். மேலும் முன்னால் செல்லும் வாகனத்திற்கும் உங்கள் வாகனத்திற்கும் இடையே போதிய இடைவெளியைப் பராமரிக்கவும். இது திடீரென பிரேக் போட வேண்டிய சூழலில் உதவும்.

5. கவனம் சிதறாமல் இருக்க..

அதே போல் காரின் டேஷ்போர்டு விளக்குகள் அதிக வெளிச்சத்துடன் இருந்தால் அது உங்கள் பார்வையைப் பாதிக்கும். எனவே, கண்களுக்கு அசௌகரியம் இல்லாதவாறு அதன் வெளிச்சத்தைச் சீரமைக்கவும். காரில் செல்லும் போது சத்தமான இசை, அலைபேசி பயன்பாடு, சக பயணிகளுடன் அதிக உரையாடல் போன்றவை கவனத்தைச் சிதறடிக்கும். மேலும் மழை மற்றும் பனி மூட்டமான காலநிலையில் வாகனம் ஓட்டுவது மிகவும் கடினம். அப்போது 'ஃபாக் லேம்ப்' (Fog lamps) விளக்குகளைப் பயன்படுத்தி, மிகக் குறைந்த வேகத்தில் பயணம் செய்ய வேண்டும். 


About the author ஜேம்ஸ்

I, James, am a passionate journalist with 3 years of experience in the media industry. I studied Digital Journalism, driven by a strong desire to excel in this field. I began my career as a Video Producer and have since evolved into a dedicated and enthusiastic content writer, with a strong focus on sports and crime reporting. In addition, I cover infrastructure, politics, entertainment, and other important world events, striving to deliver accurate and engaging news to the public. I currently work as an Assistant Producer at the ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்: பூரணம் வெளியே வராமல் பஞ்சு போன்ற கொழுக்கட்டை செய்வது எப்படி?
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்: பூரணம் வெளியே வராமல் பஞ்சு போன்ற கொழுக்கட்டை செய்வது எப்படி?
பெட்ரோல், டீசல், கரண்ட் எதுவுமே வேணாம்! மணிக்கு 110 கி.மீ வேகம்! சாதனைக்கு தயாராகும் ரயில்வே!
பெட்ரோல், டீசல், கரண்ட் எதுவுமே வேணாம்! மணிக்கு 110 கி.மீ வேகம்! சாதனைக்கு தயாராகும் ரயில்வே!
மதுரை மீனாட்சி கோவில்: விநாயகர் சதுர்த்தி கொழுக்கட்டை நெய்வேத்தியம் ரத்து - காரணம் தெரியுமா?
மதுரை மீனாட்சி கோவில்: விநாயகர் சதுர்த்தி கொழுக்கட்டை நெய்வேத்தியம் ரத்து - காரணம் தெரியுமா?
Sugar Cut: ஒரு மாதம் சர்க்கரை சாப்பிடுவதை நிறுதினால்...! உடலில் ஏற்படும் முக்கிய 5 மாற்றங்கள் என்ன?
ஒரு மாதம் சர்க்கரை சாப்பிடுவதை நிறுதினால்...! உடலில் ஏற்படும் முக்கிய 5 மாற்றங்கள் என்ன?

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay Ajith London Video: நண்பா....! ஓடிச்சென்று அஜித்தை கட்டித்தழுவிய CM விஜய்; லண்டனில் ‘தல‘, ‘தளபதி‘ உற்சாக சந்திப்பு.!
நண்பா....! ஓடிச்சென்று அஜித்தை கட்டித்தழுவிய CM விஜய்; லண்டனில் ‘தல‘, ‘தளபதி‘ உற்சாக சந்திப்பு.!
Modi Xi Jinping Meet: டெல்லியில் பிரதமர் மோடி - சீன அதிபர் ஷி ஜின்பிங் முக்கிய சந்திப்பு; விவாதித்த விஷயங்கள் என்ன.?
டெல்லியில் பிரதமர் மோடி - சீன அதிபர் ஷி ஜின்பிங் முக்கிய சந்திப்பு; விவாதித்த விஷயங்கள் என்ன.?
RS Bharathi: நாயை குளிப்பாட்டி நடுவீட்டில் வச்சாலும்.. முதல்வர் விஜயை தரக்குறைவாக பேசிய ஆர்.எஸ்.பாரதி!
RS Bharathi: நாயை குளிப்பாட்டி நடுவீட்டில் வச்சாலும்.. முதல்வர் விஜயை தரக்குறைவாக பேசிய ஆர்.எஸ்.பாரதி!
Putin Warns Europe: பிரிக்ஸ்-க்கு வந்து ஐரோப்பாவை பிரித்து மேய்ந்த புதின்.! உக்ரைன் போர் குறித்து கடும் எச்சரிக்கை; என்ன அது.?
பிரிக்ஸ்-க்கு வந்து ஐரோப்பாவை பிரித்து மேய்ந்த புதின்.! உக்ரைன் போர் குறித்து கடும் எச்சரிக்கை; என்ன அது.?
Modi Speech in BRICS: 'ஒவ்வொரு நாட்டின் குரலையும் கேளுங்கள், சில நாடுகள் முடிவுகளை எடுத்து வருகின்றன': பிரதமரின் ரகசிய செய்தி
'ஒவ்வொரு நாட்டின் குரலையும் கேளுங்கள், சில நாடுகள் முடிவுகளை எடுத்து வருகின்றன': பிரதமரின் ரகசிய செய்தி
Xi Jinping on Middle East War: “மத்திய கிழக்கு போரில் நாங்கள்...“ பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் சீன அதிபர் ஷி ஜின்பிங் கூறியது என்ன.?
“மத்திய கிழக்கு போரில் நாங்கள்...“ பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் சீன அதிபர் ஷி ஜின்பிங் கூறியது என்ன.?
பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகமா?
பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகமா? "ஒருபோதும் அமையவிடமாட்டோம்" - சீமான் அதிரடி எச்சரிக்கை!
Power Cut: தமிழ்நாட்டில் அறிவிக்கப்படாத மின்வெட்டு, தவிக்கும் தென்மாநிலங்கள் - அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்
தமிழ்நாட்டில் அறிவிக்கப்படாத மின்வெட்டு, தவிக்கும் தென்மாநிலங்கள் - அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்
Embed widget