Udaipur Tourism: டூர் போகணும்னு முடிவு பண்ணிட்டீங்களா? சின்ன பட்ஜெட் போதும்.. உதய்ப்பூரின் மேஜிங் இடங்கள்..
உதய்ப்பூர் நகரம் நாம் வாழ்நாளில் தவறவிடக்கூடாத ஒரு நகரம் ஆகும். இங்கு ஷில்ப்கிராம் திருவிழா, மான்சூன் பேலஸ், சிட்டி பேலஸ் என பல அரண்மனைகள் அமைந்துள்ளன.
கிழக்கின் வெனிஸ் என்று அழைக்கப்படும் உதய்பூர், ஆரவல்லியின் பசுமையான மலைகள் மற்றும் நீல நிற நீர் கொண்ட ஏரிகளால் சூழப்பட்டது. அமைதியான ஒரு நகரத்தை தேட விரும்பினீர்களேயானால், உதய்பூரை விட சிறந்த நகரம் எதுவுமில்லை. உதய்பூர் நகரம் மிகப் பழமையான மற்றும் அழகான கட்டிடக்கலை வடிவமைப்புகளால் நிரம்பிய நகரம். இதில் ஃபதே சாகர் ஏரியில் சூரிய ஆய்வு கூடம் அமைந்துள்ளது. ஷில்ப்கிராம் திருவிழா நடக்கும் நேரம் ஜெகஜோதியாக இருக்கும் என்பதால், உதய்பூருக்குச் செல்ல சிறந்த மாதம் டிசம்பர்தான்.
ஷில்ப்கிராம் திருவிழா
இந்த திருவிழா வழக்கமாக டிசம்பர் 21ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 30ஆம் தேதி வரை நடைபெறும். இது நடைபெறும் ஒவ்வொரு ஆண்டும் சுற்றுலா பயணிகள் மொய்த்து விடுவார்கள். இங்குள்ள பாரம்பரிய குடிசைகளை காண்பதற்கென்றே ஒரு கூட்டம் வரும். இந்த திருவிழாவில் நாடு முழுவதிலுமிருந்து கலைஞர்கள் வந்து தங்கள் கலை மற்றும் கைவினைகளை காட்சிப்படுத்துகிறார்கள். மைதானம் போல பள்ளமாக இருக்கும் இடத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகள் இந்த விழாவின் சிறப்பம்சமாகும். அங்கு தேசத்தின் ஏராளமான நாட்டுப்புறக் கதைகள் மற்றும் நடனங்களைக் காட்சிப்படுத்துவார்கள்.
தொடர்புடைய செய்திகள்: Vijay Sethupathi : "என் வாழ்க்கையிலயும் ஒரு ஜானு இருந்தாங்க...." : ஃப்ளாஷ்பேக் சொல்லி உருகிய விஜய் சேதுபதி..
உதய்ப்பூர் நகர அரண்மனை
பிச்சோலா ஏரியில் அமைந்துள்ள இந்த அரண்மனையின் பால்கனிகள், குபோலாக்கள் மற்றும் கோபுரங்களில் ஒரு அற்புதமான காட்சி உங்களுக்காக காத்திருக்கிறது. மேலும், இங்கிருந்து பார்த்தால் உதய்பூர் நகரமே நன்றாக தெரியும். இந்த அரண்மனையின் முக்கிய பகுதி கலைப்பொருட்களை சேமிக்க இன்றளவும் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
மான்சூன் பேலஸ்
நகரின் வெளியே அமைந்துள்ள இந்த அரண்மனை 19 ஆம் நூற்றாண்டில் பன்ஸ்தாரா மலைகளின் உச்சியில் கட்டப்பட்டது. இது ஒரு மழைக்கால அரண்மனையாகவும், வேட்டையாடும் விடுதியாகவும் பயன்படுத்தப்பட்டதாக தொல்பொருள் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். சில நூல்களில், மகாராணா சஜ்ஜன் சிங் முதலில் இதை ஒரு வானியல் மையமாக மாற்ற திட்டமிட்டார் என்பதும் கண்டறியப்பட்டுள்ளது, பின்னர் அந்த திட்டம் ரத்து செய்யப்பட்டது. இந்த மான்சூன் அரண்மனையிலிருந்து கண்கவர் காட்சிகள், வானலைகள் மற்றும் பிரமிக்க வைக்கும் காட்சிகளைக் காணலாம்.
ஜக் மந்திர்
இந்த கனவு அரண்மனை பிச்சோலா ஏரியில் உள்ள ஒரு தீவில் கட்டப்பட்டுள்ளது. இது லேக் கார்டன் பேலஸ் என்று குறிப்பிடப்படுகிறது. இது ராஜஸ்தானி அரச பரம்பரையின் கோடைகால ஓய்வு விடுதி போல இருக்கும். உலக அதிசயங்களான தாஜ்மஹாலை உருவாக்க பேரரசர் ஷாஜகானுக்கு இது ஒரு இன்ஸ்பிரேஷன் என்று கூறப்படுகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்