பானி பூரி ஃபவுண்டெயினை கேள்விப்பட்டிருக்கீங்களா? இந்த வீடியோவை பாருங்க!
சிலருக்கு இது விருப்பமான உணவாக இருந்தாலும் சுகாதாரத்தை காரணம் காட்டி சிலர் தெருக்களில் சாப்பிட விரும்ப மாட்டார்கள்.
வட இந்தியாவில் அதிகமாக கிடைக்கும் பானி பூரி .இப்போது தென்னிந்தியாவிலும் பிரபலம் . வாரணாசிதான் பானிபூரியின் தாயகமாக பார்க்கப்பட்டாலும் , இந்தியா முழுவதுமே இது பிரபலமான ஸ்ட்ரீட் ஃபுட் வகைகளுள் ஒன்று . பானி பூரியை சில மாநிலங்களில் கோல் கப்பா, புச்கா என்றும் அழைக்கின்றனர். குட்டி குட்டியாக இருக்கும் பானி பூரிகளை உடைத்து அதில் உருளைக்கிழங்கும் , பட்டாணியும் சேர்ந்த மசாலா கலவைகளை வைத்து , புளித்தண்ணீர் , மல்லித்தண்ணீர் என வகை வகையாக வைத்திருக்கும் தண்ணீரை கலந்து அதனதுடன் ஒரு சில நறுக்கிய துண்டு வெங்காயத்தை சேர்த்து சாப்பிட்டால் அலாதியாக இருக்கும். சிலருக்கு இது விருப்பமான உணவாக இருந்தாலும் சுத்தத்தை காரணம் காட்டி சிலர் தெருக்களில் சாப்பிட விரும்ப மாட்டார்கள்.
View this post on Instagram
பானி பூரியை இப்படிதான் சாப்பிட வேண்டும் என்பதல்ல , அதற்கென பல வழிகளை அதன் பிரியர்கள் பின்பற்றுகின்றனர். அப்படியான ஒரு வீடியோதான் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது பானி பூரி நீரூற்று ஒன்றை தயார் செய்திருக்கின்றனர் . அதில் பானி பூரிக்குள் ஊற்றப்பயன்படுத்தும் பச்சை நிற மல்லி, புதினா, புளி , மிளகாய் சேர்ந்த கலவையை நீற்றுபோல செய்து , அந்த நீரை பூரிக்குள் எளிமையாக பிடித்து சாப்பிடுகின்றனர். வெளிநாடு வாழ் இந்தியர்களால் டிக்டாக்கில் பகிரப்பட்ட இந்த வீடியோவை மாடல், டிவி தொகுப்பாளர் பத்ம லட்சுமி தனது ட்விட்டரில் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். அதற்கு கேப்ஷனாக “ தேவையில்லை..ஆனால் வேண்டும் “ என குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ நெட்டிசன்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.
Not a want, but a need 🤩 pic.twitter.com/QKvfJlabhH
— Padma Lakshmi (@PadmaLakshmi) October 19, 2022