செக்ஸ் டாய்ஸ் கட்டுக்கதைகள்: பயன்படுத்துபவர்கள் அனைவரும் ஓரினச்செயற்கையாளர்களா?
அதை நீங்கள் எப்படி பயன்படுத்துகிறீர்கள் என்பதில்தான் சவாலும், இன்பமும் இருக்கிறது. திறந்த மனதுடன் அவற்றை நீங்கள் பயன்படுத்த முற்பட்டால் உங்களுக்கு பல உணர்ச்சிகர ஆச்சரியங்கள் காத்திருக்கும்.
இந்தியர்களிடம் இன்றளவும் செக்ஸ் டாய்ஸ் பயன்படுத்துவதில் தயக்கமும், பதட்டமும், பயமும், அதிகமாகவே இருக்கிறது. இதை வெளிப்படையாக பேசக்கூட தயங்குகிறார்கள். அவ்வாறு பயன்படுத்துவோர் இருந்தால் அவர்களை ஆச்சரியத்துடன் பார்க்கும் கூட்டம்தான் நம்மூரில் அதிகம். இப்படி இன்றளவும் செக்ஸ் டாய்ஸின் தேவையை புரிந்துகொள்ளாத சமூகமும், அதுகுறித்த முழுமையான விழிப்புணர்வும் இல்லாத நிலைதான் இருக்கிறது, அதோடு இருந்தால் பரவாயில்லை, அறியாமையால் பல கட்டுக்கதைகளை கண்மூடித்தனமாக உருவாக்கியுள்ள நம்பியும் வருகின்றனர். அப்படி நீங்கள் அது குறித்த எதிர்மறை கருத்துகளாக நம்பிக்கொண்டிருக்கும் விஷயங்கள் அனைத்தும் வெறும் கம்பி கட்டும் கதைகளே. எது உண்மை?
கட்டுக்கதை 1: செக்ஸ் டாய்ஸ் பயன்படுத்தினால் தனிமையை விரும்புவீர்கள். இது போன்ற ஒரு பொதுமைப்படுத்தும் கட்டுக்கதை வேறில்லை. செக்ஸ் டாய்ஸ் என்பது நம்முடைய பாலியல் உணர்வை அடக்கி வைக்காமல் அதை விருப்பம் போல் வெளிப்படுத்த உதவும் கருவிதான். அது உங்களை தனிமையில் தள்ளிவிடும் என்பதெல்லாம் முற்றிலுமான கட்டுக்கதைகளே. செக்ஸ் டாய்ஸை பார்ட்னருடன் இணைந்தும் பயன்படுத்தலாம். இதனால் உங்கள் செக்ஸ் தருணம் கூடுதல் சுவாரஸ்யமாகுமே தவிர எந்தவித தனிமையும் உருவாகிவிடப்போவதில்லை. இருவர் இணைந்திருப்பதே செக்ஸுக்காகதான் என்று கூறுவதும், இதுவும் வெவ்வேறு கூற்று அல்ல, அதே அளவு விஷத்தன்மை உள்ள கூற்றுதான் இதுவும்.
கட்டுக்கதை 2: செக்ஸ் வாழ்க்கையை பாதிக்கும். செக்ஸ் டாய்ஸ் பாலியல் வாழ்க்கையை அழிக்கும் என்ற கருத்து முற்றிலுமாக பொய். கின்சி இன்ஸ்டிடியூட் நடத்திய ஆய்வின்படி, அதிரக்கூடிய (vibrators) செக்ஸ் டாய்ஸ் பயன்படுத்துவதால் உணர்ச்சிகள் அதிகரிக்கின்றன, உச்சகட்ட செக்ஸ் அனுபவத்தை பெற முடிகிறது என்று தெரியவந்துள்ளது. அவர்களுக்கு பாலியல் ரீதியான பிரச்சனைகள் இருந்தாலும் செக்ஸ் டாய்ஸை பயன்படுத்தும்போது அவை சரி செய்யப்படுகின்றன என்கிறது அந்த ஆய்வு. பெண்களுக்கு வஜைனாவில் வலியை போக்கவும் உதவுகிறது. இதனால் துணையுடன் இணையும்போது இடையூறுகள் இன்றி செக்ஸ் உணர்வை அனுபவிக்கலாம்.
கட்டுக்கதை 3: இருபாலரும் பயன்படுத்த கூடிய செக்ஸ் டாய்ஸ் மிகக் குறைவு. உண்மையாக சொல்லப்போனால் அனைத்து செக்ஸ் டாய்ஸ்களையும் அனைத்து பாலினத்தவரும் பயன்படுத்தலாம். அதை எப்படி பயன்படுத்துகிறீர்கள் என்பதில்தான் சவாலும், இன்பமும் இருக்கிறது. திறந்த மனதுடன் அவற்றை பயன்படுத்த முற்பட்டால் பல உணர்ச்சிகர ஆச்சரியங்கள் காத்திருக்கும். எனவே இந்தக் கட்டுகதையை நம்பாதீர்கள்.
கட்டுக்கதை 4: இருபாலரும் பயன்படுத்த கூடிய செக்ஸ் டாய்ஸ் மிகக் குறைவு. உண்மையாக சொல்லப்போனால் அனைத்து செக்ஸ் டாய்ஸ்களையும் அனைத்து பாலினத்தவரும் பயன்படுத்தலாம். அதை நீங்கள் எப்படி பயன்படுத்துகிறீர்கள் என்பதில்தான் சவாலும், இன்பமும் இருக்கிறது. திறந்த மனதுடன் அவற்றை நீங்கள் பயன்படுத்த முற்பட்டால் உங்களுக்கு பல உணர்ச்சிகர ஆச்சரியங்கள் காத்திருக்கும். எனவே இந்தக் கட்டுகதையை நம்பாதீர்கள்.
கட்டுக்கதை 5: செக்ஸ் டாய்ஸ் பயன்படுத்தும் ஆண்கள் ஓரினச்சேர்க்கையாளர்கள். இது முற்றிலும் தவறான கருத்து. இது குறித்து அனைவரும் அறிந்துகொள்ள வேண்டும். பொதுவாகவே ஆண்கள் கைகளை பயன்படுத்தி இன்பம் அடையும் புணர்ச்சியைக் கூட தவறாகவே சித்தரிக்கின்றனர். உண்மை என்னவெனில் பெண்களுக்கு உச்சகட்ட இன்பத்தை அளிக்க G-spot இருப்பதுபோல் ஆண்களுக்கும் P-spot இருக்கிறது. இது மலக்குடலின் உள்ளே ஒரு அங்குலத்தில் இருக்கும். இது ஆண்களுக்கு உச்சபட்ச இன்பத்தை அளிக்கிறது. இந்த இன்பத்தை அனுபவிக்க ஆண்கள் செக்ஸ் டாய்ஸ் பயன்படுத்துவதில் தவறில்லை. இதற்காக அவர்கள் ஓரினச்சேர்கையாளர்களாக இருக்க வேண்டும் என்பதில் அவசியமும் இல்லை.