அன்னையர் தினத்திற்கு அம்மாவுக்கு ஆரோக்கியமான கிஃப்ட் கொடுக்கனுமா ? - இதை ட்ரை பண்ணுங்க!
உங்கள் தாய்க்கு யோகா அல்லது பைலேட்ஸ் பிடிக்கும் என்றால், அவர்களுக்கு பிரீமியம் தரமான யோகா மேட் ஒன்றை பரிசளியுங்கள் .
ஒவ்வொரு ஆண்டும் , மே மாதம் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை அன்னையர் தினமாக கொண்டாடப்படுகிறது. அமெரிக்காவில் ஆரமித்த இந்த பழக்கமானது , இன்று நம் ஊர்களிலும் கடைப்பிடிக்கப்படுகிறது. அட அம்மாவை கொண்டாடுவது யாருக்குத்தான் பிடிக்காது. இந்த வருடம் உங்க அம்மாவை சர்ப்ரைஸ் பண்ண தயாராகிருப்பீங்க. அவங்களுக்கு புடைவை , நகைகள் அப்படினு எக்கச்சக்கமா வாங்கி கொடுத்திருந்தாலும் கூட , அவங்க ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்தும் வகையில ஒரு பரிசு கொடுத்தாத்தானே சிறப்பாக இருக்கும் . அப்படியான சில பரிசுகளைத்தான் கீழே தொகுத்துள்ளோம் . நிச்சயமாக இந்த பரிசு உங்கள் வீட்டு இல்லத்தரசிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் என நம்புகின்றோம்
ஃபிட்னஸ் டிராக்கர்:
ஒரு காலத்தில்தான் அம்மாக்கள் வீட்டு அடுக்கணைக்குள்ளேயே அடங்கி கிடந்தனர். இன்றைக்கு இருக்கக்கூடிய தொழில்நுட்ப காலக்கட்டத்தில் எல்லோருமே ஸ்மார்ட் மாம்ஸாக மாறிவிட்டனர். அவர்களுக்கு ஏற்ற மாதிரியான ஃபிட்னஸ் டிராக்கரை நீங்கள் பயன்படுத்தலாம். இதில் அவர்கள் மணி பார்ப்பது மட்டுமல்லாமல் எவ்வளவு ஸ்டெப்ஸ் ஏறியிருக்கிறார்கள் , எவ்வளவு கலோரியை குறைத்திருக்கிறார்கள், உடற்பயிற்சிகள் மற்றும் தூக்க சுழற்சியை கண்காணித்துக்கொள்ளலாம். இந்த ஸ்மார்ட் டிராக்கர்களை அவர்கள் விருப்பத்திற்கு ஏற்ற மாதிரியாக ஆன்லைனில் வாங்கிக்கொடுக்கலாம்.
கிரீன் டீ கிட்
தாய்மார்கள் புத்துணர்ச்சியூட்டும் பானங்களை விரும்புகிறார்கள், குறிப்பாக தேநீர். பால் மற்றும் சர்க்கரை டீயை கிரீன் டீயாக மாற்றுவது எளிதல்ல என்றாலும், அது அவர்களுக்கு ஆரோக்கியமான மாற்றமாக இருக்கும். அவர்களது வளர்சிதை மாற்றத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க, ஒரு நல்ல பிராண்டிலிருந்து ஒரு க்ரீன் டீ கிட்டை பரிசாக கொடுக்கலாம்.
யோகா மேட்:
உங்கள் தாய்க்கு யோகா அல்லது பைலேட்ஸ் பிடிக்கும் என்றால், அவர்களுக்கு பிரீமியம் தரமான யோகா மேட் ஒன்றை பரிசளியுங்கள் .
ஒரு ஸ்பா பரிசு அட்டை:
ஓய்வெடுக்கும் ஸ்பா சிட்டிங் யார்தான் வேண்டாம் என்பார்கள் . நம் தாய்மார்களுக்கு இது மிகவும் தேவை என்பதில் சந்தேகமில்லை. முழு உடல் ஸ்பா சிட்டிங்கிற்காக கூப்பன் ஒன்றை வாங்கி கொடுங்கள்.அவர் அதை நிச்சயம் விரும்புவார்! உங்களைச் சுற்றியுள்ள புகழ்பெற்ற ஸ்பாவைக் கண்டுபிடித்து அவருக்காக ஒரு இடத்தைப் உடனே பதிவு செய்யுங்கள் ..ம்ம்ம் ஹரியப்!
கிரீன் சப்ளிமெண்ட்ஸ்:
இது ஊட்டச்சத்து மாத்திரைகள் போன்றது. இது தாவரத்தில் இருக்கும் கலவையான சத்துக்களை கொண்டது. இது அவர்களது ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். அம்மாக்கள் பொதுவாக தங்களுக்கென நேரம் ஒதுக்கி தங்களை பாதுகாத்துக்கொள்ள மாட்டார்கள். அவர்களுக்கு இந்த மாதியான ஆரோக்கியம் சார்ந்த உணவு பழக்கங்களை ஏற்படுத்தி கொடுக்க, உங்களை தவிர வேறு யாரால் முடியும். கிரீன் சப்ளிமெண்ஸை வாங்கி கொடுப்பதற்கு முன்னதாக உங்கள் குடும்ப மருத்துவர்களிடம் ஆலோசனை பெற்றுக்கொள்வது அவசியம்.
ஒவ்வொரு நாளும் அம்மாக்களை மகிழ்ச்சியாகப் பார்க்க விரும்புகிறோம். இந்த பரிசுகள் நிச்சயம் அவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்திக்கொடுக்கும் என நம்புகின்றோம்.