மேலும் அறிய
Advertisement
Mindful Eating:கவனத்துடன் உண்பதை ஊக்குவிக்கும் Mindful Eating முறை... பின்பற்ற வேண்டியவை என்னென்ன?
உள்ளுணர்வு அல்லது விழிப்புணர்வுடன் ஒருவர் உணவு உண்ணுதல் 'mindful eating’ எனப்படுகிறது. ஒரு நபருக்கும் அவரது உணவுக்கும் இடையேயான உறவை மேம்படுத்துவதே இம்முறையின் முக்கிய நோக்கம்.
இன்றைய அவசர உலகில் உணவு உண்ணும்போதுகூட கவனத்தைக் குவித்து சாப்பிட பலரும் முனைவதில்லை.
தங்களுக்குக் கிடைக்கும் சிறு உணவு இடைவெளியிலும் பலரும் அலுவல் வேலைகளை செய்தவாறும், செல்போன்களை நோண்டியபடியும், தொலைக்காட்சி பார்த்தபடியும் உண்ணும் பழக்கத்தை தங்களுக்கே தெரியாமல் கடைபிடித்து வருகின்றனர்.
உணவுக்கும் உண்பவருக்கும் இடையேயான உறவு
இச்சூழலில் Mindful eating எனப்படும் கவனத்தைக் குவித்து சாப்பிடுதல் குறித்த பதம் தற்போது பேசுபொருள் ஆகியுள்ளது. Mindfulness என்பதன் பொருள் ஒரு செயல் பற்றிய விழிப்புணர்வு மன நிலையைக் குறிக்கிறது.
உள்ளுணர்வு அல்லது விழிப்புணர்வுடன் ஒருவர் உணவு உண்ணுதல் 'mindful eating’ எனப்படுகிறது. ஒரு நபருக்கும் அவரது உணவுக்கும் இடையேயான உறவை மேம்படுத்துவதே இம்முறையின் முக்கிய நோக்கம்.
Mindful eating எப்படி வேலை செய்கிறது?
- ஒருவர் தன் உடலுக்கு எவ்வளவு உணவு தேவைப்படுகிறது என்பதை அறிந்து சாப்பிடுவதை இந்த முறை ஊக்குவிக்கிறது, வலியுறுத்துகிறது.
- அவசரகதியாக உண்ணாமல் பொறுமையாக உண்ண வேண்டும்.
- உண்ணும்போது ஏற்படும் கவனச்சிதறல்களைத் தவிர்க்கவும்.
- வயிற்றுக்குத் தேவையான அளவு மட்டுமே சாப்பிடுங்கள்.
- உண்ணும் உணவின் நிறம், ஒலி, அமைப்பு, மணம் ஆகியவற்றை அறிந்து உண்ணுதல் வேண்டும்.
- நல்ல உடல் மற்றும் மன நலனைப் பேண எண்ணி உண்ண வேண்டும்.
- நம் உடல் மற்றும் எண்ணங்களை உணவு எவ்வாறு பாதிக்கிறது என்பதை அறிந்து உண்ண வேண்டும்.
- நாம் உண்ணும் உணவுக்கு மகிழ்ச்சி, நன்றி தெரிவித்தல் சிறப்பான விஷயம்.
கவனத்துடன் உணவருந்துதல்...சாதக, பாதகங்கள்!
- மன நலன், ஒட்டுமொத்த உடல் நலன் மேம்பாட்டுக்கு வழிவகுக்கிறது. இன்றைய நவீன உலகில் சமீபத்தில் அதிகம் விவாதிக்கப்படும் மனச்சோர்வு, பதட்டம், eating disorder எனப்படும் சாப்பிடுதல் தொடர்பான பிரச்சினை ஆகியவற்றை எதிர்கொள்ள இந்த விழிப்புணர்வுடன் உணவருந்தும் முறை உதவுவதாகக் கூறப்படுகிறது.
- கவனச்சிதறல்களின்றி உணவு அருந்துவது மகிழ்ச்சி அளிக்கும் ஹார்மோன்களின் உற்பத்தியை அதிகரிக்க உதவுகிறது. இதனால் இதய ஆரோக்கியமும் மேம்படலாம்.
- உடல் மனதுக்கு இடையேயான தொடர்பை மேம்படுத்தி உடலுக்குத் தேவையான சிறந்த எரிபொருளை வழங்க உதவுகிறது.
- கவனத்துடன் உண்ணும் இந்த முறை ஒரு வகையான தியான முறையாகவே இருப்பதால் அதிக நேரமும் பொறுமையும் இதற்கு தேவைப்படுகிறது.
- இந்த முறையில் உணவின் மீது நாம் செலுத்தும் கவனம் பசியார்வத்தைத் தூண்டுவதால் உடல் எடைக்குறைப்பு இதில் சாத்தியமில்லை.
- இவற்றையெல்லாம் தாண்டி உணவு தொடர்பான பிரச்சினைகள் உடையவர்கள் கவனத்துடன் உண்பதை ஊக்குவிக்கவே இம்முறை அதிகம் பின்பற்றப்படுகிறது. எனினும் கவனச்சிதறல் உடைய பிறரும் இம்முறையைப் பின்பற்றலாம்.
சமீபத்திய லைப்ஸ்டைல் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் லைப்ஸ்டைல் செய்திகளைத் (Tamil Lifestyle News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
உலகம்
தமிழ்நாடு
கிரிக்கெட்
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion