மேலும் அறிய
May Day Wishes: “பிறர் வாழ்வதே எங்க வேர்வையில் தான்” - உழைப்பாளர் தின வாழ்த்துகளை தட்டி விடுங்க!
May Day: உழைப்பாளர் தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், இந்த நாளில் வாழ்த்துகளை பரிமாறி தொழிலாளர்களை உற்சாகப்படுத்துங்கள்.

தொழிலாளர் தினம்
”உழைப்பாளி இல்லாத நாடே இங்கில்லேயா” என்ற வரிகள் ரஜினி நடித்த உழைப்பாளி படத்தில் இடம் பெற்றிருக்கும். தொழிலாளர்களை பெருமைப்படுத்தும் வகையில் எழுதப்பட்ட இந்த பாடலில் ஒவ்வொரு வரியும் முத்துக்கள் தான்.
இந்த உலகமே உழைப்பாளர்களால் கட்டமைக்கப்பட்டது தான். இன்றைக்கு நாம் வியந்து பார்க்கும் பல நிகழ்வுகளின் பின்னாலும் பல தொழிலாளர்களின் உழைப்பு தான் மின்னும். நேரம், காலம் பாராமல் தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்து வாழும் தொழிலாளர்களுக்கு இந்த நாளில் நாம் தெரிவிக்கும் வாழ்த்துகள் பற்றி காணலாம்.
#உழைப்பாளி இல்லாத நாடு pic.twitter.com/j5X3OowWpN
— Rajini (@rajini198080) April 30, 2024
உழைப்பாளர் தின வாழ்த்துகள்
- உழைப்பவரே உயர்ந்தவர்.. உழைப்பே உயர்வு தரும்.. இனிய உழைப்பாளர் தின வாழ்த்துகள்..!
- வியர்வையை மூலதனமாக்கி உழைப்பை உரமாக்கி தினம் தினம் உயரும் உழைப்பாளர்களுக்கு தொழிலாளர் தின வாழ்த்துகள்..!
- உழைப்பாளர்கள் இன்றி இந்த உலகம் இல்லை.. இனிய மே தின வாழ்த்துகள்!
- உழைப்பில்லாமல் உயர்வில்லை.. பூமி கூட உழைக்காமல் இந்த நிலையில் இல்லை.. இனிய உழைப்பாளர் தின வாழ்த்துகள்
- ஏர் உழுபவன் முதல் ஏரோபிளேன் ஓட்டுபவர் வரை உழைப்பாளிகள் தான்.. இனிய உழைப்பாளர் தின வாழ்த்துகள்
- மே தினத்தின் நாட்டின் முன்னேற்றத்திற்கு முதுகெலும்பாக திகழும் உழைப்பாளர்களுக்கு வாழ்த்துகள்..!
- உலகம் உழைப்பாளர்களை என்றும் போற்றும்.. உங்களையும் கூட.. இனிய உழைப்பாளர் தின வாழ்த்துகள்..!
- உயிர் வாழ்தலின் அடிப்படையே உழைப்பு தான்.. இனிய தொழிலாளர் தின வாழ்த்துகள்!
- உழைப்பின் வளர்ச்சியில் ஆண், பெண் பேதமில்லை.. அனைவரும் உயர்வானர்வர்களே..உழைப்பாளர் தின வாழ்த்துகள்!
- உழைப்பாளியே உலகின் முதல் கடவுள்..உலகையும் உழைப்பால் உருவாக்கிய கடவுளுக்கு நன்றி!
தொழிலாளர் தின சினிமா பாடல்கள்
- உழைப்பாளி இல்லாத நாடு - உழைப்பாளி
- கருத்தவனெல்லாம் கலீஜா - வேலைக்காரன்
- கண்ணை கசக்கும் சூரியனோ - ரெட்
- நிலமே எங்கள் உரிமை - காலா
- எரிமலை எப்படி பொறுக்கும் - சிவப்பு மல்லி
சமீபத்திய லைப்ஸ்டைல் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் லைப்ஸ்டைல் செய்திகளைத் (Tamil Lifestyle News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
சேலம்
இந்தியா
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion