சர்க்கரை எவ்வளவு எடுத்துக்கணும்? எது அபாய அளவு? விளைவுகள் என்ன?
சர்க்கரை அதிகமாக சாப்பிட்டால், எடை கூடும், நீரிழிவு நோயில் முடியும் என நம் அனைவருக்குமே தெரியும். ஆனா அதுக்கு மேலயும் உபாதைகள் நடக்கும்.. என்னென்னு தெரிஞ்சுகோங்க..
Consuming Too much Sugar : இன்ஸ்டாகிராமில் டாக்டர்ஸ் கிட்சன் என்னும் பக்கத்தை நடத்திவரும் டாக்டர் ரூபி ஆஜ்லா, சமையல் கட்டுக்கும் உடல்நலத்துக்கும் இடையிலான நெருக்கமான தொடர்பையும், எந்தந்த வகை உணவு நம்முடலில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்த வல்லவை என்பதைப் பற்றியும் மிக எளிமையான விளக்கங்களை தரக்கூடியவர்.
அதிக அளவிலான சர்க்கரையை எந்த வகையில் எடுத்துக்கொண்டாலும், அந்த பின்வரும் விளைவுகளை உடலுக்கு ஏற்படுத்தும் என்பதைத் தவிர்க்கமுடியாது என்கிறார்.
”சாப்பிடும் அதீத ஆர்வம், பசி : சர்க்கரை உணர்வுகள் மீண்டும் மீண்டும் சர்க்கரை உணவுகளை எடுக்கத் தூண்டுவதுடன், பசியை அதிகப்படுத்தி, மீண்டும் உடல் எடை அதிகரிக்கும் வேலையை ஒரு சுழற்சி போல செய்யும்.
சோர்வு, தூக்கமின்மை : சோர்வை அதிகரித்து தூக்கமின்மையை அதிகரிப்பதுடன், தூக்க சுழற்சியிலேயே பெரிய பாதிப்பை ஏற்படுத்திவிடக்கூடும்.
குடல் நலம் : குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களின் அளவைக் குறைத்து, கெட்ட பாக்டீரியாக்களை அதிகரித்து, குடல் நலத்தையும் கெடுக்கும்” எனத் தெரிவித்திருக்கிறார்.
View this post on Instagram
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )