மேலும் அறிய
Advertisement
International Coffee Day 2022: “சர்வதேச காபி தினம்” : காபி பற்றி இந்த சுவாரஸ்யமான தகவல்கள் உங்களுக்கு தெரியுமா?
காஃபியில் அதிக அளவு ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிரம்பியிருப்பதால் இது ஆயுளை நீட்டிக்கும் என கூறப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 1 ஆம் தேதி குளம்பி தினம் கொண்டாடப்படுகிறது. குளம்பி என்றால் காஃபி என பொருள்படுத்தப்பட்டுள்ளது. பிரேசிலியன் மொழியில் குளம்பு எனும் பொருளில் இருந்துதான் காஃபி என்னும் பெயர் உருவானது. இதனை அடிப்படையாக கொண்டுதான் பேரறிஞர் தேவநேயப் பாவாணர் தமிழில் காஃபியை குளம்பி எனும் சொல்லால் குறித்தார். காஃபி தோட்டங்களை வாழ்வாதாரமாக கொண்டு வேலை செய்யும் விவசாயிகளை ஊக்கப்படுத்தும் விதமாகவும் , காபியில் உள்ள நற்குணங்களை எடுத்துரைக்கும் விதமாகவும்தான் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 1 ஆம் தேதி சர்வதேச காஃபி தினம் கொண்டாடப்படுகிறது.
சரி இந்த காஃபி தினத்தில் நீங்கள் காஃபியின் வரலாறு மற்றும் அதன் சிறப்புகளை அறிந்துக்கொள்ள வேண்டியது அவசியம்.
- உலகில் அதிக அளவு மக்களால் விரும்பப்படும் பானங்களுள் காஃபிதான் இருக்கிறது.
- காஃபி மட்டும்தான் சூடாகவும் , குளிர்ச்சியாகவும் குடிப்பதற்கு சிறந்த பானமாக இருக்கிறது.
- காஃபி கி.பி 800 ஆண்டுகள் பழமையானது. உலகிலேயே பிரேசில்தான் அதிக அளவு காஃபி உற்பத்தி செய்கிறது.
- எத்தியோப்பியா நாட்டில் காஃபா (Kaffa) இந்த இடத்தில் முதன் முதலாக காப்பிச்செடி தோன்றியதாக நம்பப்படுகிறது.
- காபியில் இரண்டு முதன்மை வகைகள் உள்ளன: அரபிகா மற்றும் ரோபஸ்டா. விவசாயிகள் பெரும்பாலும் அராபிகா வகைகளை பயிரிடுகின்றனர்.ரோபஸ்டா அதிக கசப்பு சுவையுடையது.
- உலகில் அதிக அளவில் காஃபி பிரியர்களை கொண்ட நாடு நெதர்லாந்த். சராசரியாக ஒரு நாளைக்கு 8.3 கிலோகிராம் காஃபியை அருந்துகிறார்களாம். அடுத்ததாக பின்லாந்து மற்றும் ஸ்வீடன் உள்ளன.
- காஃபி என்பது உண்மையில் ஒரு வகை காயோ பழமோ அல்ல. அது செர்ரி போன்றதொரு பழத்தின் விதை
- காஃபி தினம் கடந்த 2015 ஆம் ஆண்டுதான் முதன் முதலாக கொண்டாடப்பட்டது. இதனை சர்வதேச காஃபி அமைப்புதான் தொடங்கி வைத்தது.
- காஃபி தினம் கொண்டாடப்பட்ட முதல் இடம் இத்தாலியில் உள்ள மிலன் என்னும் நகரம்.
- காபி என்ற சொல் "கஹ்வா" என்ற அரபு வார்த்தையிலிருந்து பெறப்பட்டது, இது ஒரு வகை ஒயின் என்பதைக் குறிக்கிறது. பின்னர் "கஹ்வே" என்ற வார்த்தையை துருக்கியர்கள் பயன்படுத்தி வந்துள்ளனர்.இதைத் தொடர்ந்து "கோஃபி" என்ற டச்சு வார்த்தை வந்தது.
- 1582 ஆம் ஆண்டு ஆங்கிலேயகள் காஃபி என்ற பெயரை அதிகாரப்பூர்வமாக வழங்கினார்கள்.
- காஃபியில் அதிக அளவு ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிரம்பியிருப்பதால் இது ஆயுளை நீட்டிக்கும் என கூறப்படுகிறது.
- அமெரிக்கா,இந்தியா,தென்கிழக்கு ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவின் பூமத்திய ரேகை பகுதி என இந்தப் பகுதிகள் மட்டுமே உலக காபி கொட்டைகள் உற்பத்தியில் 35 சதவீத பங்களிப்பினை கொண்டிருக்கிறது
சமீபத்திய லைப்ஸ்டைல் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் லைப்ஸ்டைல் செய்திகளைத் (Tamil Lifestyle News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
உலகம்
கிரிக்கெட்
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion