மேலும் அறிய

Home Remedies: கூகுளில் அதிகம் தேடப்பட்ட கேள்வி - சூரிய ஒளியில் இருந்து சரும பராமரிக்க வீட்டு வைத்தியம்!

Home Remedies for Sun Damage: வெயிலில் இருந்து சருமத்தை பராமரிக்க வழிமுறைகள் என்னென்ன என்று பார்க்கலாம்.

குளிர்காலம் வந்துவிட்டது. சுற்றுலா செலவது, வெளியே சென்று கொண்டாட்டங்களுக்கு  இது சரியான நேரமாக இருந்தாலும் நமது சருமத்திற்கும் கூந்தலுக்கும் எப்போதுமே தனியாக பராமரிப்பு இருக்க வேண்டியது அவசியம்தானே. இது சவாலான காலகட்டம்தான். வெப்பநிலை குறையும் போது, ​​நமது தோல் வறண்டுவிடும். சூரிய கதிர்கள்,  குளிர்காலத்தில் மட்டுமல்ல, ஆண்டு முழுவதும் தோல் மற்றும் முடி மீது எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் சொல்கின்றனர். சரும செல்களின் சேதத்தைத் தடுக்க,  நீங்கள் வெளியே (சூரிய ஒளியில்) செல்லும் போதெல்லாம் சன்ஸ்கிரீனைப் பயன்படுத்துவது அவசியம். ஆனால், நம் தலைமுடியை எவ்வாறு பாதுகாப்பது? ஆம், தொப்பி இல்லையெனில் துணியை ஸ்கார்ஃபாக பயன்படுத்தலாம். இருப்பினும் அவை ஓரளவிற்கு மட்டுமே பாதுகாப்பு இருக்கும்.

 2023-ம் ஆண்டில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட கேள்வி ’ How to prevent sun damage for skin and hair with home remedies’. - 'வீட்டு உள்ள பொருட்கள் மூலம் சருமம் மற்றும் தலைமுடிக்கு சூரியனால் ஏற்படும் பாதிப்பை எவ்வாறு தடுப்பது?' சூரிய கதிர்களில் இருந்து நமது சருமம் மற்றும் முடியைப் பாதுகாக்க நிபுணர் Dinyar Workingboxwalla பரிந்துரைத்தவற்றின் விவரம்.

சரும பராமரிப்பு

தேன் மற்றும் தயிர் மாஸ்க்:

தயிருடன் தேன் கலந்து மாஸ்க் தயாரித்து சரும பராமரிப்பிற்கு பயன்படுத்தலாம். இந்த மென்மையான எக்ஸ்ஃபோலியண்ட் இறந்த சரும செல்களை நீக்கி, பளபளப்பான, ஆரோக்கியமான சருமத்திற்கு உதவும். 

வெள்ளரிக்காய் அல்லது ரோஸ்வாட்டர் டோனர்:

குளிர்ந்த வெள்ளரி சாறு அல்லது ரோஸ்வாட்டர் பயன்படுத்தி சருமத்தில் பாதிக்கப்பட்ட இடத்தில் தடவலாம்.

தலைமுடி ஆரோக்கியம்

க்ரீன் டீ :

ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த, கிரீன் டீ சூரிய அழுத்தத்தால் ஏற்படும் பாதிப்புகளை சரிசெய்ய உதவுகிறது. க்ரீன் டீ தயாரித்து அதை குளிர்வித்து ஷாம்பு போட்டு தலை குளித்தபிறகு முடியின் வேர்க்கால் முதல் நுனி அப்ளை செய்து இளஞ்சூடான தண்ணீரில் முடியை அலசவும்.

அவகேடோ ஹேர் மாஸ்க்:

ஒரு பழுத்த அவகேடோவை மசித்து, கற்றாழையுடன் கலந்து மாஸ்க் தலைமுடிக்கு பயன்படுத்தலாம். 30 நிமிடங்களுக்கு பிறகு கழுவவும்.

சரும பராமரிப்பில் தேங்காய் எண்ணெய், கற்றாழை முதன்மையான பங்கு வகிப்பதாகவும் கற்றாழை செடி வீடுகளில் வளர்த்து பயன்படுத்துமாறு சரும பராமரிப்பு நிபுணர் தேவ்ஜி ஹாதியானி (  Devji Hathiyani) குறிப்பிடுகுறார்.

மஞ்சள் பேக்

மஞ்சளின் தன்மைகள் எல்லாரும் அறிந்ததே. கிருமிநாசினி, அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் என இயற்கையாகவே பல்வேறு சிறப்புகள் இருக்கிறது. 

தயிர், தேன், மஞ்சள் சேர்த்து பேஸ்டாக செய்து சூரிய ஒளி பாதிக்கப்பட்ட கழுத்து, முகம் ஆகியவற்றில் தடவி குளிர்ந்த நீரில் கழுவவும்.

சூரிய ஒளியால் ஏற்படும் பாதிப்பிலிருந்து சருமத்தை பராமரிக்க மஞ்சள் சிறந்த தீர்வளிக்கும்.

தலைமுடி வலுவாக இருக்க கறிவேப்பிலை சேர்த்து காய்ச்சி நன்றாக மசாஜ் செய்யவும்.  உச்சந்தலையில் முதல் முடியின் நீளம் முழுவதும் மெதுவாக மசாஜ் செய்யவும்.

கவனிக்க..

உச்சி வெயில் நேரங்களில் வெளியில் செல்லும் அவசியம் ஏற்பட்டால் மட்டுமே செல்லவும். சன்ஸ்கிரீன் பயன்படுத்தவும்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Assembly: 6 டிப்ளமோ படிப்புகள் அறிமுகம், அரசுக் கல்லூரிகளில் ஏஐ, எந்திரனியல் ஆய்வகம்- அமைச்சர் பொன்முடி அறிவிப்பு
TN Assembly: 6 டிப்ளமோ படிப்புகள் அறிமுகம், அரசுக் கல்லூரிகளில் ஏஐ, எந்திரனியல் ஆய்வகம்- அமைச்சர் பொன்முடி அறிவிப்பு
பிறப்புறுப்பில் மிளகாய் தூள் தடவி டார்ச்சர்! பொது இடத்தில் பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த அநீதி!
பிறப்புறுப்பில் மிளகாய் தூள் தடவி டார்ச்சர்! பொது இடத்தில் பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த அநீதி!
'இத்தனை நாளா எங்கய்யா இருந்தே'... ரூ.600 செலவில் தஞ்சை பள்ளி மாணவரின் அட்டகாச கண்டுபிடிப்பு கருவி
'இத்தனை நாளா எங்கய்யா இருந்தே'... ரூ.600 செலவில் தஞ்சை பள்ளி மாணவரின் அட்டகாச கண்டுபிடிப்பு கருவி
Breaking News LIVE: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு 59 ஆக அதிகரிப்பு
Breaking News LIVE: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு 59 ஆக அதிகரிப்பு
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Accident News :  BIKE-ல் மோதிய பேருந்து..தூக்கி வீசப்பட்ட இளைஞர் பதற வைக்கும் CCTV காட்சிNEET Exam  : நீட் மறு தேர்வு..எழுத வராத மாணவர்கள்! நடந்தது என்ன?Amudha IAS Transfer? : இப்படி பண்ணிட்டிங்களே. அமுதா IAS Transfer? அப்செட்டில் ஸ்டாலின்!Trichy Surya |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Assembly: 6 டிப்ளமோ படிப்புகள் அறிமுகம், அரசுக் கல்லூரிகளில் ஏஐ, எந்திரனியல் ஆய்வகம்- அமைச்சர் பொன்முடி அறிவிப்பு
TN Assembly: 6 டிப்ளமோ படிப்புகள் அறிமுகம், அரசுக் கல்லூரிகளில் ஏஐ, எந்திரனியல் ஆய்வகம்- அமைச்சர் பொன்முடி அறிவிப்பு
பிறப்புறுப்பில் மிளகாய் தூள் தடவி டார்ச்சர்! பொது இடத்தில் பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த அநீதி!
பிறப்புறுப்பில் மிளகாய் தூள் தடவி டார்ச்சர்! பொது இடத்தில் பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த அநீதி!
'இத்தனை நாளா எங்கய்யா இருந்தே'... ரூ.600 செலவில் தஞ்சை பள்ளி மாணவரின் அட்டகாச கண்டுபிடிப்பு கருவி
'இத்தனை நாளா எங்கய்யா இருந்தே'... ரூ.600 செலவில் தஞ்சை பள்ளி மாணவரின் அட்டகாச கண்டுபிடிப்பு கருவி
Breaking News LIVE: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு 59 ஆக அதிகரிப்பு
Breaking News LIVE: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு 59 ஆக அதிகரிப்பு
Vijay: பிறந்தநாள் வாழ்த்து! சீமான், திருமா, அன்புமணிக்கு சிறப்பு நன்றி - வியூகம் வகுக்கும் விஜய்
Vijay: பிறந்தநாள் வாழ்த்து! சீமான், திருமா, அன்புமணிக்கு சிறப்பு நன்றி - வியூகம் வகுக்கும் விஜய்
TN Assembly: 'அகல்விளக்கு', 'திசைதோறும் திராவிடம்'- பள்ளிக் கல்வித்துறைக்கு 25 புது அறிவிப்புகள்!- என்னென்ன?
TN Assembly: 'அகல்விளக்கு', 'திசைதோறும் திராவிடம்'- பள்ளிக் கல்வித்துறைக்கு 25 புது அறிவிப்புகள்!- என்னென்ன?
Jayam Ravi: கோலிவுட்டில் அடுத்த விவாகரத்து? கணவர் ஜெயம் ரவி புகைப்படங்களை நீக்கிய மனைவி ஆர்த்தி!
Jayam Ravi: கோலிவுட்டில் அடுத்த விவாகரத்து? கணவர் ஜெயம் ரவி புகைப்படங்களை நீக்கிய மனைவி ஆர்த்தி!
TN RAIN: மக்களே! 7 மாவட்டங்களுக்கு 3 நாட்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை - வெளுக்கப் போகும் கனமழை!
TN RAIN: மக்களே! 7 மாவட்டங்களுக்கு 3 நாட்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை - வெளுக்கப் போகும் கனமழை!
Embed widget