ஒரு மாதத்தில் 2 கிலோ எடை குறைப்பது சாத்தியமா? என்ன செய்ய வேண்டும்? டிப்ஸ் இதோ!
ஒரு மாதத்தில் 2 கிலோ எடை குறைப்பது ஆரோக்கியமானதா என்பது பற்றி ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவிப்பதை காணலாம்.
ஒரு மாதத்தில் 10 கிலோ எடை குறைப்படது சாத்தியமா என்பது பற்றி சமூக வலைதளங்களில் கேள்விகள் எழுந்த நிலையில், ஊட்டச்சத்து நிபுணர்கள் உடல் எடை குறைப்பு பற்றி விளக்கம் அளித்துள்ளர்.
உடல் பருமன் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக உடல் எடையை குறைக்க வேண்டும் என்று திட்டமிடுபவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய விசயமாக ஊட்டச்சத்து நிபுணர் ராஜ் குப்தா தெரிவிக்கையில்,” உடல் எடையை என்ன காரணத்திற்காக குறைக்க வேண்டும் என்பதன் தெளிவு வேண்டும். ஒரு மாதத்தில் 5 கிலோவிற்கு மேல் குறைப்பது என்பது அவ்வளவு ஆரோக்கியமானது அல்ல. ஒரு மாதத்தில் 2 கிலோ குறைப்படது என்பது சாத்தியமானது. அதுவும், ஆரோக்கியமான வழிமுறைகளை மட்டும் பின்பற்ற வேண்டும்.” என்று தெரிவிக்கிறார்.
உடல் எடையை குறைக்க சில வழிமுறைகளை ராஜ் தெரிவிக்கிறார். கடினமான டயட், உடற்பயிற்சிகள் இல்லாமலே ஒரு மாதத்தில் 2 கிலோ எடையை குறைக்க முடியும். அதற்கு நீங்கள் தினமும் என்ன உணவுகளை சாப்பிடுகிறீர்கள் என்பதை லிஸ்ட் எடுத்து கண்காணிக்கவும். குறிப்பாக, ஒரு நாளைக்கு எவ்வளவு கலோரி உணவுகள் சாப்பிடுகிறீர்களோ, முடிந்த அளவிற்கு அதை உடற்பயிற்சி மூலம் எரித்துவிட வேண்டும். உடற்பயிற்சி மூலம் 250 கலோரி அதிகமாக எரிக்க இலக்கு நிர்ணயிக்க வேண்டும். உடலுக்கு தேவையான கலோரி அளவில் உணவு சாப்பிடுவது நல்லது. அதில் 250 கலோரி குறைப்பது பரிந்துரைக்கப்படுகிறது.
View this post on Instagram
குறைந்தது 30 நிமிடங்கள் தினமும் நடைப்பயிற்சி, ஜாகிங் உள்ளிட்டவற்றை தவறாமல் மேற்கொள்ளவும்.
நார்ச்சத்து நிறைந்த உணவுகள், பழங்கள், இறைச்சி, புரோட்டீன் உணவுகள், ப்ரோபயாடிக் உணவுகள் உள்ளிட்டவற்றை டயட்டில் சேர்க்கவும்.
மைதா, சர்க்கரை அதிகம் நிறைந்த உணவுகள், எண்ணெயில் பொரித்த உணவுகள், பாக்கெட்களில் அடைக்கப்பட்ட உணவுகள், துரித உணவுகள் ஆகியவற்றை அன்றாட உணவுப் பட்டியலில் இருந்து நீக்கவும்.
உடல் எடை குறைப்பு பயணத்தில் எதையும் அதீதமாக செய்ய வேண்டாம். தீவிர உணவுக் கட்டுப்பாடு, தீவிர உடற்பயிற்சி இரண்டும் பெரும்பாலும் ஆரோக்கியமான முறை அல்ல. ஒவ்வொருவரின் உடலும் தனித்துவமானது. அதற்கேற்றவாறு டயட், உடற்பயிற்சி மேற்கொள்வது நல்லது.
ஒரு மாதத்தில் 2 கிலோ எடை குறைக்க சில டிப்ஸ்:
சரிவிகித உணவு:
தினமும் உணவில் பழங்கள், காய்கறி, இறைச்சி, முழு தானியங்கள், ஆரோக்கியமான கொழுப்பு ஆகியவை இடம்பெறுவதை உறுதி செய்யவும்.
சாப்பாடு அளவு முக்கியம்:
உணவு, ஸ்நாக்ஸ் என எது சாப்பிட்டாலும் அதன் அளவு முக்கியம். அதிகமாக சாப்பிடுவது பரிந்துரைக்கப்படுகிறது.
உடற்பயிற்சி முக்கியம்:
150 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்ய திட்டமிடுவது நல்லது. தவறாமல் உடற்பயிற்சி செய்து உடல் எடையை குறைக்க உதவுவதோடு உடல் ஆரோக்கியத்தையும் பாதுகாக்கும். வாரத்தில் குறைந்தது 4-5 நாள்கள் ஒரு நாளைக்கு 30 நிமிடங்களாகவது உடற்பயிற்சி செய்வது நல்லது.