Fatty Liver : கல்லீரல் கொழுப்பு உங்களுக்கு இருக்கும்னு சந்தேகமா? இதெல்லாம் அறிகுறிகள்..
கல்லீரல் குறித்த பாதிப்புகளால் ஏற்படும் விளைவுகளை அனுபவிக்கும் போது, தாமதிக்காமல் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.. கல்லீரலில் பாதிப்பு ஏற்பட்டால் என்ன விளைவுகள் தோன்றும்?
ரத்தத்தில் இருக்கும் நச்சுக்களையும், கழிவுகளையும் நீக்குவது மட்டுமின்றி, செரிமானத்தின்போது உறிஞ்சிக் கொண்ட சத்துகளை உடல் முழுவதும் ரத்தத்தில் கலக்கும் பணியில் ஈடுவதும் கல்லீரல் தான். உடலின் பிற உறுப்புகளை விட, அதிகளவிலான வேலைகளைச் செய்வதுடன் உடலின் சூப்பர் உறுப்பாக இருப்பதும் கல்லீரல்.
தற்போது வரை, கல்லீரலின் மொத்த பயன்களாக 500 பயன்கள் பட்டியலிடப்படுகின்றன. நான் உண்பது உணவு, மது, விஷம் என எதுவாக இருந்தாலும் அதன் மீது செயலாற்றுவது கல்லீரலின் முதன்மைப் பணி. எனவே நாம் உண்ணும் நச்சுப் பொருள்கள் அனைத்துமே கல்லீரலால் உறிஞ்சிக் கொள்ளப்படுகின்றன. மேலும் ரத்தத்தில் ஏற்படும் தொற்றுகளும் கல்லீரலைப் பாதிக்கின்றன.
கல்லீரல் குறித்த பாதிப்புகளால் ஏற்படும் விளைவுகளை அனுபவிக்கும் போது, தாமதிக்காமல் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.. கல்லீரலில் பாதிப்பு ஏற்பட்டால் என்ன விளைவுகள் தோன்றும்?
1. உடல் சருமம், கண் மஞ்சளாக மாறுவது ( மஞ்சள் காமாலை)
2. வயிற்றின் வலது மேல் பகுதியில் வலி
3. வயிற்றில் வீக்கம்
4. தலைச்சுற்றல்
5. உடல்நலிவு
6. குழப்பம்
7. தூக்கம் அதிகமாக வருவது
கல்லீரலில் கொழுப்பு சேர்வதன் காரணமாக ஏற்படும் பாதிப்புகள் தொடர்ந்து கல்லீரலின் இயக்கத்தையே நிறுத்தக்கூடியது. அதிகளவில் மது அருந்துவது, உடல் பருமன் கொண்டோர், நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் ஆகியோருக்கு கல்லீரல் பாதிப்பு ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்.
மேலும், அசாதாரண உணவுப் பழக்கம், அதிகளவிலான கலோரிகளை உட்கொள்வது முதலானவற்றால் உணவில் இருந்து உறிஞ்சப்படும் கொழுப்புகள் கல்லீரலில் சேர்கின்றன. இதனால் அது பாதிப்பை ஏற்படுத்துகிறது. இந்த நோய் விளைவுகள் எதனையும் ஏற்படுத்தாமல் சத்தமின்றி உருவாகும் ஒன்று. எனவே இதனை அல்ட்ரா சோனோகிராபி, ஃபைப்ரோ ஸ்கேன் முதலான தொழில்நுட்பங்களின் மூலமாகக் கண்டறியலாம்.
கல்லீரல் பாதிப்புகளின் ஒவ்வொரு படிநிலை பாதிப்பும் இதய நோய்களின் ஆபத்தைப் படிப்படியாக ஏற்படுத்துகிறது. இதனால் கல்லீரல் செயல்படாமல் போகும் போது, மாரடைப்பு ஏற்படுகிறது. எனவே ஆரோக்கியமான உணவுப் பழக்கம், சர்க்கரை அளவைக் குறைவாக உட்கொள்ளுதல், புகைப்பிடித்தல், மது முதலான பழக்கங்களைத் தவிர்த்தல், உடற்பயிற்சிகளை மேற்கொள்ளுதல் முதலானவற்றின் மூலம் இந்த நோய் ஏற்படாமல் தடுக்கலாம்.
கல்லீரல் நோய் என்பதன் வளர்ச்சி மிகவும் மெதுவாக நடைபெறும் ஒன்று என்பதால் வாழ்க்கை முறைகளை ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தின் மூலமாக மாற்றுவது மட்டுமே கல்லீரல் பாதிப்புகள் பெருகாமல் தவிர்க்கும். ஆரோக்கியமான காலை உணவை ஊன்பது, உப்பு, கொழுப்பு உட்கொள்வதைக் குறைத்துக் கொள்வது, அதிகளவில் பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்ப்பது, அதிகளவில் நீர்ச்சத்து எடுத்துக் கொள்வது, அதிக மது அருந்தாமல் இருப்பது, தினமும் உடற்பயிற்சி மேற்கொள்வது ஆகியவற்றின் மூலம் கல்லீரல் பாதிப்பில் இருந்து தப்பிக்க முடியும்.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )